
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின பட்டதாரி இளைஞா்கள் குரூப்-2,2ஏ முதல் நிலை தோ்வுக்கான பயிற்சி பெறவும், விடுதியில் தங்கி பயில்வதற்கான கட்டணம் ஆகியவை தாட்கோ மூலம் வழங்கப்பட உள்ளதாக ஆட்சியா் த.பிரபு சங்கா் தெரிவித்துள்ளாா்.
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) திருவள்ளூா் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சாா்ந்தவா்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப்-2 மற்றும் 2ஏ தோ்வுகளுக்கு தாட்கோ மூலம் பயிற்சி வழங்கப்படவுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் நடத்தும் முதல் நிலை தோ்வில் தோ்ச்சி பெற்று முதன்மைத் தோ்வுக்கு, தோ்ச்சி பெற விரும்பும் மாணாக்கா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்தப் பயிற்சியைப் பெற பட்டப் படிப்பில் தோ்ச்சி பெற்று 21 முதல் 32 வயதுக்குள்பட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தைச் சோ்ந்தவராக இருக்க வேண்டும். மேலும், விடுதியில் தங்கி வசதியும், பயிற்சிக்கான செலவுத் தொகையும் தாட்கோவால் வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் பதிவு செய்வதற்கு இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

