
ஏற்றுமதி தொழில் மூலம் கோடிகளில் சம்பாதிக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு சூப்பரான செய்தியை வெளியிட்டுள்ளது.
அதாவது, ஏற்றுமதி தொழில் செய்ய வேண்டும் என ஆசை இருந்து, அதனை எப்படி செய்வது என தெரியாமல் இருப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் 3 நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட இருக்கிறது. இந்த பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு ஏற்றுமதி தொழில் குறித்த அனைத்து விவரங்களும் நிபுணர்கள் மூலம் விரிவாக தெரிவிக்கப்படும். ஏற்றுமதி தொழில் எப்படி செய்யலாம், அதில் இருக்கும் சாதக பாதகங்கள் என்ன? என அனைத்து விவரங்களும் அரசு சார்பில் தெரிவிக்கப்படும். இந்த பயிற்சியில் கலந்து கொள்ள அரசு நிர்ணயித்திருக்கும் ஒரே ஒரு வரம்பு என்னவென்றால் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளையும், சட்டதிட்டங்ககளையும் குறித்த 3 நாட்கள் பயிற்சி வரும் 28.12.2024 முதல் 28.12.2024 தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பயிற்சி வகுப்பு கரூர் மாவட்டத் தொழில் மையத்தில் நடைபெறும். இப்பயிற்சியில் ஏற்றுமதி சர்வதேச வர்த்தகத்தின் அடிப்படைகள். சந்தையின் தேவை, இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை, கொள்முதலுக்கான வாய்ப்புகள், ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்கள். வங்கி நடைமுறைகள். அந்திய செலாவனியின் மாற்று விகிதங்கள், உரிமம் நடைமுறை குறித்த தகவல்கள், ஏற்றுமதி-இறக்குமதி விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள், போன்றவை பயிற்றுவிக்கப்படும்.
மேலும், இப்பயிற்சியில் ஏற்றுமதியாளர்களுக்கான ஊக்க உதவிகள் பற்றியும் அவைகளை பெறும் முறைகளை பற்றியும் ஆலோசனைகளும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் பற்றியும் விளக்கப்படும். ஏற்றுமதி சார்ந்த தொழில் துவங்க விரும்பும் அல்லது தற்போது உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்பும் 18 வயது நிரம்பிய 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் சேரலாம். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது: 99943 22859 / 9080609808. இந்த எண்களுக்கு தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம். அரசு சான்றிதழ் வழங்கப்படும். www.editn.in என்ற வலைதளத்தில் முன்பதிவு அவசியம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

