
இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், பெண்களுக்கு இலவச ஆரி மற்றும் எம்ப்ராய்டரி பயிற்சி வழங்கப்படுகிறது.
இது குறித்து இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறு-வன இயக்குனர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை பகுதியிலுள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், வறுமை கோட்-டிற்கு கீழ் வாழும் கிராமப்புற மகளிர், இளைஞர்களுக்கு தொழில் துவங்க, பல்வேறு இலவச பயிற்சிகள் வழங்கப்படுகி-றது.
தற்போது பெண்களுக்கு, 30 நாட்கள் ஆரி மற்றும் எம்ப்ராய்டரி பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இதற்கு, 8ம் வகுப்பு படித்த, 18 முதல், 45 வயது வரை உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் வரும், 21க்குள் அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்க வேண்டும்.
பயிற்சியில், சீருடை, காலை, மதியம் உணவும், பயிற்சிக்கான உபகரணங்களும் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி, காலை, 9:30 மணி முதல் மாலை, 5:30 மணி வரை நடக்கும். முடிவில் பயிற்சி சான்றிதழும், தேர்ச்சி சான்றிதழும் வழங்கப்படும்.
விபரங்களுக்கு, இயக்குனர், இந்தியன் வங்கி ஊரக சுயவேலை-வாய்ப்பு பயிற்சி நிறுவனம், டிரைசெம் கட்டடம், கே.ஆர்.பி., அணை, கிருஷ்ணகிரி, என்ற விலாசத்திலும், 94422 47921, 90806 76557 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


Yes