
கரூரில் நவ.,15 ல் தனியார்வேலை வாய்ப்பு முகாம்கரூர், நவ. 12-வரும், 15ல் கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கை:கரூர், வெண்ணைமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், வரும், 15 காலை 10:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை, தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
இங்கு, 30க்கும் மேற்பட்ட தனியார்துறை வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு, 200க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பவுள்ளனர். முகாமில் எட்டாம் வகுப்பு முதல், பட்டப் படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ., மற்றும் பொறியியல் பட்டதாரிகள் என அனைவரும் கலந்து கொண்டு பணி வாய்ப்பை பெறலாம். மாவட்டத்தை சேர்ந்த வேலை தேடும் இளைஞர்கள் தங்களுடைய சுய விவர குறிப்பு, உரிய கல்விச்சான்று, ஆதார் அட்டைஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம்.முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலையளிப்போர் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 9499055912 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

