
திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறு மற்றும் குறு நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாம் மூலம் சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழிற்பழகுனர்களின் இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த பயிற்சியின்போது உதவித்தொகையாக மாதம் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை நிறுவனத்தாரால் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருச்சி கலெக்டர் விரிவான தகவலை வெளியிட்டுள்ளார்.
திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது “திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவு அமைச்சரகம் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித்துறை சார்பில் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களில் தொழிற்பழகுனர்களை நியமனம் செய்வதை ஊக்குவிக்கும் விதமாக திருச்சி மாவட்டத்தில் தொழிற்பழகுனர் சேர்க்கை முகாம் வருகிற 11-ந்தேதி காலை 10 மணி அளவில் திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடக்கிறது.
இந்த சேர்க்கை முகாமில் இதுவரை தொழிற்பழகுனர் பயிற்சி பெறாதவர்கள் மற்றும் 2018-19, 2019-20, 2020-21, 2021- 22 ஆகிய வருடங்களில் தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ. பயிற்சியாளர்கள், 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்த இளைஞர்கள் (ஆண், பெண் இருபாலரும்) அனைவரும் கலந்து கொள்ளலாம்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறு மற்றும் குறு நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாம் மூலம் சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழிற்பழகுனர்களின் இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பயிற்சியின்போது உதவித்தொகையாக மாதம் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை நிறுவனத்தாரால் வழங்கப்படும். தொழிற்பழகுனர் சட்டம் 1961-ன் படி இந்த நிறுவனங்களில் சேர்ந்து ஓராண்டு தொழிற்பழகுனர் பயிற்சி பெறுபவர்களுக்கு மத்திய அரசின் தேசிய தொழிற்பழகுனர் சான்றிதழ் வழங்கப்படும்.
எனவே மாணவர்கள் இந்த சேர்க்கை முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளளப்படுகிறது. மேலும் இது தொடர்பான விவரங்களை அறிய திருவெறும்பூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 0431–2553314 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்” இவ்வாறு திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

