நாட்டின் உயரிய ஆளுமை பதவிகளுக்காக சிவில் சர்வீசஸ் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில், மூன்று நிலைகளில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் சிவில் சர்வீசஸ் தேர்ச்சி பெறுபவர்களில், 10 – 15 சதவீதம் பேர் இடம்பெற்று இருப்பர்.
ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை சொற்ப அளவில் உள்ளன.கடந்த, 2014ம் ஆண்டில், 118 பேர் இறுதிச்சுற்றில் தேர்ச்சி பெற்றனர். ஆனால், 2015ல் 82 பேர், 2018ல் 39 பேர், 2020ல் 36 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தொடர்ந்து, சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் பின்னடைவை சந்திப்பது குறித்து அரசு விரிவாக ஆராய்ந்து, ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்களை வகுக்க வேண்டியது அவசியம். தடுமாற்றம் கோவை மாவட்டத்தில், ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., தேர்வுகளுக்காக பயிற்சி பெறும் மாணவர்களை சந்தித்து, இதுகுறித்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் இருந்து படித்து வந்த மாணவர்களுக்கு இணையாக, மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களை இம்மையங்களில் காண முடிந்தது.ஆனால், அரசு பள்ளிகளில் படித்து வந்த மாணவர்கள், தனியார் பள்ளிகளில் தமிழ் மீடியத்தில் படித்த மாணவர்களை இந்த மையங்களில் காண முடியவில்லை.
இலவச மையங்களிலும் இதே நிலை என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.சிவில் சர்வீஸ் தேர்வுகளை பொருத்தவரையில், முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என்ற மூன்று சுற்றுகளில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. முதல்நிலை தேர்வுகளில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டுமே கேள்விகள் கேட்கப்படும். பிரதான தேர்வையும், நேர்காணலையும் தமிழ் மொழியில் எதிர்கொள்ள முடியும்.ஆனால், முதல்நிலை தேர்வை தமிழ் மீடியம் படித்த மாணவர்கள் எதிர்கொள்ள முடியாமல் சோர்ந்து விடுவதாக பயிற்சியாளர்கள் தெரிவித்துஉள்ளனர். முதல்நிலை தேர்ச்சி பெற்றாலும், பிரதான தேர்வுகளுக்கு தயாராக தமிழ் மொழியில் பாட புத்தகங்கள் இன்றி பலர் தடுமாறும் சூழல் தொடர்கிறது.தேர்ச்சி விகிதம் குறைவுகே.பி.ஆர்., பயிற்சி மைய இயக்குனர் பழனிகுமார் கூறியதாவது:தற்போது, புதிய சமச்சீர் புத்தகம், என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களுக்கு இணையாக உள்ளதால், மாநில பாடத்திட்ட மாணவர்களும் அதிகளவில் பங்கேற்கின்றனர்.
கடந்த, 4, 5 ஆண்டுகளில் இத்தேர்வு களில் பங்கேற்போர் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. ஆனால், தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.இத்தேர்வுகளில் முதல் போல், ஆண்டுக்கணக்கில் பயிற்சி பெற்று தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளது; இரண்டு முறை முயற்சித்து கிடைக்காத பட்சத்தில் ஐ.டி., நிறுவனங்களுக்கு செல்பவர்கள் அதிகம் உள்ளனர்.சிவில் சர்வீஸ் தேர்வுகளை பொருத்தவரை, ஆங்கிலம் என்பது கட்டாயம் தேவை. சி.பி.எஸ்.இ., மெட்ரிக் பள்ளி மாணவர்கள் இதில் அதிகம் பங்கேற்கின்றனர். அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது உண்மையே.சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு இருக்கும் விழிப்புணர்வு, மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் மாணவர்களின் பெற்றோர், குறிப்பாக அரசு பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு இல்லை.தன்னம்பிக்கை குறைவுசண்முகம் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மைய நிறுவனர் சண்முகம்: தனியார் பள்ளி மாணவர்கள் அதிகளவில் சிவில் சர்வீசஸ் தேர்வுகளை எதிர்கொள்கின்றனர்.
கோவையை பொருத்தவரை, 90 சதவீதம் தனியார் பள்ளி ஆங்கில மீடியம் மாணவர்களே பயிற்சி பெற வருகின்றனர். தமிழ் மீடியம் மாணவர்கள் பெரும்பாலும் இந்தத் தேர்வுகளில் பங்கேற்பதில்லை.அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்களுக்கும் இத்தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு இல்லை. இம்மாணவர்களிடம் யு.பி.எஸ்.சி., எழுதுவதற்கான தன்னம்பிக்கையே குறைவாக உள்ளது; டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுகளை கேட்டே, இதுபோன்ற மாணவர்கள் வருகின்றனர்.ஆங்கில அறிவு என்பது கட்டாயம் தேவை. ஆனால், அதை கற்றுக்கொள்வது சிரமமான விஷயம் இல்லை.
யு.பி.எஸ்.சி., தேர்வுகளை முதல் முறை எழுதினாலே தேர்ச்சி பெற்று விடலாம் என்ற எண்ணம் தவறு. குறைந்தபட்சம் 3, 4 முறை தேர்வு எழுதி தேர்ச்சி பெறுபவர்களே அதிகம். முதல் முறை தேர்ச்சி பெறுபவர்கள் பள்ளி, கல்லுாரிகளில் பயிற்சியை துவக்கியவர்களாகவே பெரும்பாலும் உள்ளனர்.அரசு பள்ளி மற்றும் தமிழ் மீடியம் மாணவர்கள் மத்திய தேர்வுகளில் தேர்ச்சி பெறவேண்டும் எனில், அரசு பள்ளிகளில் ஆங்கிலம், ஹிந்தி மொழிகளை ஆக்கப்பூர்வமாக அடிப்படை முதல் கற்பிக்க வேண்டும்.பாடத்திட்டங்களை பொருத்தவரை, பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் உள்ளது. தமிழ் மீடியம் மாணவர்களின் முதல் சிக்கலே பாடத்திட்டங்களை மொழிபெயர்த்து தான் படிக்க இயலும். அடிப்படை ஆங்கிலம் புரிதல் என்பது கட்டாயம் தேவை. தற்போது, மாநில பாடத்திட்டம் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு இணையாக உள்ளதால் பாடத்திட்டம் சார்ந்து தேர்வுகளை எதிர்கொள்ளவும், தேர்ச்சி பெறவும் பெரிய இழப்பு என்று ஏதும் இல்லை.- கனகராஜ், இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சியாளர்உத்தர பிரதேசம் &’டாப்&’கடந்த 2011 முதல் 2015ம் ஆண்டு வரை மட்டும் ஐ.ஏ.எஸ்., பதவிக்கு தேர்வானவர்கள் எண்ணிக்கைஉத்தர பிரதேசம் 118ராஜஸ்தான் 97தமிழகம் 90பீஹார் 68ஆந்திரா 61மஹாராஷ்டிரா 58கேரளா 542002 – 2012 வரைமாநிலம் – நேர்காணலில் பங்கேற்றோர் – தேர்வு பெற்றோர்டில்லி – 11,738-1,498 உத்தர பிரதேசம்- 21,984-998 மஹராஷ்டிரா- 5,506- 724 தமிழகம் – 5,148- 721 ராஜஸ்தான்- 6,211- 574