காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கண் சிகிச்சை முகாம் ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் கூறியதாவது: காஞ்சிபுரம் ஆனந்தா டிரேடர்ஸ் அரிசி மண்டி மற்றும் பூந்தமல்லி நுாம்பல் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், 50வது இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்கான மருத்துவ பரிசோதனை முகாம், பெரிய காஞ்சிபுரம், சாலை தெரு, குஜராத்தி திருமண மண்டபத்தில் நாளை நடக்கிறது.
காலை, 8:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெறும் முகாமில், பூந்தமல்லி நுாம்பல் அரவிந்த் கண் மருத்துவமனையைச் சேர்ந்த கண் மருத்துவ நிபுணர்கள் மருத்துவ பரிசோதனை செய்ய உள்ளனர்.முகாமில், கண்புரை நோய் உள்ளவர்களை அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்து, சென்னை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, இலவசமாக, விழிலென்ஸ் பொருத்தி, அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.முகாமில் பங்கேற்க விரும்புவோர், 97914 08768, 95438 81888 என்ற மொபைல் எண்களிலும் அல்லது பெரிய காஞ்சிபுரம் சாலைத்தெருவில் உள்ள ஆனந்தா டிரேடர்ஸ் அரிசி மண்டியில் முன்பதிவு செய்யலாம்.