சேலம் மாவட்டத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 09.11.2024 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; மண்டல அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் சேலம் மாவட்டத்தில், முள்ளுவாடி கேட் மாநகராட்சி தொங்கும் பூங்கா மண்டபத்தில் 09.11.2024 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை நடைபெறவுள்ளது. இம்முகாமில், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் வேலைவாய்ப்பு வழங்குவதற்கான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இம்முகாமில் 8-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் கல்வி பயின்ற மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை, தனித்துவம் மிக்க அடையாள அட்டை (UDID), ஆதார் அட்டை, கல்விச்சான்றுகள், மார்பளவு புகைப்படம் மற்றும் தன்விபரக்குறிப்பு ஆகியவற்றுடன் முகாம் நடைபெறும் நாளன்று நேரில் கலந்து கொள்ள வேண்டும். மேலும், முகாம் தொடர்பான விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், அறை எண் 11. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சேலம், தொலைபேசி எண் 0427 2415242 தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.