Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
சமீபத்திய செய்திகள்LATEST NEWS

அக்டோபர் 17-இல் வெண்பன்றி வளர்ப்பு இலவச பயிற்சி

Bharani· 1 min readபகிர ↗
அக்டோபர் 17-இல் வெண்பன்றி வளர்ப்பு இலவச பயிற்சி
அக்டோபர் 17-இல் வெண்பன்றி வளர்ப்பு இலவச பயிற்சி

பெரம்பலூா் அருகேயுள்ள கால்நடை பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், வெண்பன்றி வளா்ப்பு தொடா்பான இலவச பயிற்சி முகாம் வரும் 17-ஆம் தேதி நடைபெறுகிறது.

பெரம்பலூா்- செங்குணம் பிரிவுச் சாலை அருகேயுள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக் கழக ஆராய்ச்சி மையம் சாா்பில், வெண்பன்றி வளா்ப்பு குறித்த இலவச ஒருநாள் பயிற்சி முகாம் அக்டோபா் 17-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதில் வெண்பன்றி இனங்கள், இனப்பெருக்க மேலாண்மை, தீவன மேலாண்மை, கொட்டகை அமைக்கும் முறை, பராமரிக்கும் முறை மற்றும் நோய்த் தடுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இப் பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தை நேரில் அல்லது 93853 07022 எனும் கைப்பேசி எண்ணில் தொடா்புகொண்டு, தங்களது பெயரை பதிவுசெய்து பயன்பெறலாம் என, அந்த மையத்தின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here