இந்து
சமய அறநிலையத்துறையில் புதிதாக 91 பணியிடங்கள்
இந்து சமய அறநிலையத்துறையில் புதிதாக 91 பணியிடங்கள் உருவாக்கப்படுகிறது என்று அறநிலையத்துறை அதிகாரி தெரிவித்தார்.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44 ஆயிரம் கோயில்கள் உள்ளது. இதில், 100க்கும் மேற்பட்ட செயல் அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால், ஒரு செயல் அலுவலர் 10 முதல் 20 கோயில்கள் வரை நிர்வகிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கோயில்களின் வருவாய்க்கேற்பவும், நிர்வகிக்க வசதியாக புதிதாக 40 செயல் அலுவலர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
அதேபோல இணை ஆணையர் 12 பணியிடங்களில் உள்ள நிலையில் புதிதாக 1ம், துணை ஆணையர்களில் 28 உள்ள நிலையில் மேலும், 2 பணியிடங்களும், உதவி ஆணையர் 32 பணியிடங்கள் உள்ள நிலையில் 2 பணியிடங்களும், செயல் அலுவலர் நிலை-1ல் 100 பணியிடங்கள் உள்ள நிலையில் 18 பணியிடங்களும், செயல் அலுவலர் நிலை-2ல் 100 பணியிடங்களில் மேலும், 18 பணியிடங்களும், செயல் அலுவலர் நிலை-2ல் 97 பணியிடங்கள் உள்ள நிலையில் புதிதாக 20 பணியிடங்களும், செயல் அலுவலர்-3ல் 202 பணியிடங்கள் உள்ள நிலையில் 48 பணியிடங்கள் என மொத்தம் 91 பணியிடங்கள் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.