📘 7th STD Science Book Back (தமிழ்) – Questions & Answers
7ஆம் வகுப்பு அறிவியல் (Science) பாடப்புத்தகத்தில் உள்ள Book Back Questions & Answers அனைத்தும் ஒரே PDF-ஆக தொகுக்கப்பட்டுள்ளது.
இந்த PDF மாணவர்கள் தேர்வு தயாரிப்புக்கும், TNPSC, TRB, TET போன்ற போட்டித் தேர்வுகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
📌 இந்த PDF-ல் உள்ளவை
- 7th STD Science Book Back Questions (Lesson-wise)
- விடைகள் தமிழில் தெளிவாக
- Model Q&A for exam & revision notes
- TNPSC/TRB-க்கு repeated ஆன GK/Science questions
1 Term
1. அளவிட்டியல்
1) பின்வருவனவற்றுள் எது வழி அளவு?
a) நிறை
b) நேரம்
c) பரப்பு
d) நீளம்
2) பின்வருவனவற்றுள் எது சரி?
a) 1L=1cc
b) 1L=10cc
c) 1L=100cc
d) 1L=1000cc
3) அடர்த்தியின் SI அலகு
a) கிகி/மீ2
b) கிகி/மீ3
c) கிகி/மீ
d) கி/மீ3
4) சம நிறையுள்ள இரு கோளங்களின் கன அளவுகளின் விகிதம் 2 : 1 எனில், அவற்றின் அடர்த்தியின் விகிதம்
a) 1 : 2
b) 2 : 1
c) 4 : 1
d) 1 : 4
5) ஒளி ஆண்டு என்பது எதன் அலகு?
a) தொலைவு
b) நேரம்
c) அடர்த்தி
d) நீளம் மற்றும் நேரம்
6) பொருத்துக:-
பரப்பு – ஒளி ஆண்டு
தொலைவு – மீ3
அடர்த்தி – மீ2
கன அளவு – கிகி
நிறை – கிக / மீ3
a) 31524
b) 32514
c) 12435
d) 52143
7) பொருத்துக:-
பரப்பு – கி / செ.மீ3
நீளம் – அளவிடும் முகவை
அடர்த்தி – பொருளின் அளவு
கன அளவு – கயிறு
நிறை – தள வடிவ பொருள்
a) 54123
b) 32514
c) 12435
d) 52143
8) கூற்று : கல்லின் கன அளவை அளவிடும் முகவை மூலம் அளக்கலாம்.
காரணம் : கல் ஒரு ஒழுங்கற்ற வடிவமுடைய பொருள்.
a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
c) கூற்று சரி. ஆனால், காரணம் தவறு.
d) கூற்று தவறு. ஆனால், காரணம் சரி.
9) கூற்று : மரக்கட்டை நீரில் மிதக்கும்.
காரணம் : நீர் ஒரு ஒளி ஊடுருவும் திரவம்.
a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
c) கூற்று சரி. ஆனால், காரணம் தவறு.
d) கூற்று தவறு. ஆனால், காரணம் சரி.
10) கூற்று : ஓர் இரும்புக் குண்டு நீரில் மூழ்கும்.
காரணம் : நீர் இரும்பைவிட அடர்த்தி அதிகமுடையது.
a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
c) கூற்று சரி. ஆனால், காரணம் தவறு.
d) கூற்று தவறு. ஆனால், காரணம் சரி.
2. விசையும் இயக்கமும்
1) ஒரு பொருளானது r ஆரம் கொண்ட வட்டப்பாதையில் இயங்குகிறது. பாதி வட்டம் கடந்தபின் அப்பொருளின் இடப்பெயர்ச்சி
a) சுழி
b) r
c) 2r
d) r / 2
2) ஒரு சிறுவன் குடை இராட்டினத்தில் 10மீ/வி என்ற மாறாத வேகத்தில் சுற்றி வருகிறான். இக்கூற்றிலிருந்து நாம் அறிவது
a) சிறுவன் ஓய்வு நிலையில் உள்ளான்.
b) சிறுவனின் இயக்கம் முடுக்கப்படாத இயக்கமாகும்.
c) சிறுவனின் இயக்கம் முடுக்கப்பட்ட இயக்கமாகும்.
d) சிறுவன் மாறாத திசைவேகத்தில் இயங்குகிறான்.
3) ஒரு பொருளின் சமநிலையை நாம் எவ்வாறு அதிகரிக்கலாம்?
a) ஈர்ப்பு மையத்தின் உயரத்தினைக் குறைத்தல்.
b) ஈர்ப்பு மையத்தின் உயரத்தினை அதிகரித்தல்.
c) பொருளின் உயரத்தினை அதிகரித்தல்.
d) பொருளின் அடிப்பரப்பின் அகலத்தினைக் குறைத்தல்.
4)பொருத்துக
1. வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம் – வடிவியல் மையம்
2. கப்பலின் வேகம் – மீட்டர்
3. ஒழுங்கான பொருள்களின் ஈர்ப்பு மையம் – அகலமான அடிபரப்பு
4. இடப்பெயர்ச்சி – நாட்
5. சமநிலை – சீரான திசைவேகம்
(a)25413
(b)32514
(c)12435
(d)52143
3. நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்களின்
1) கீழ்க்கண்டவற்றுள் உலோகம் எது?
அ) இரும்பு
ஆ) ஆக்சிஜன்
இ) ஹீலியம்
ஈ) தண்ணீர்
2) ஆக்சிஜன், ஹைட்ரஜன் மற்றும் சல்பர் ஆகியவை கீழ்க்கண்டவற்றுள் எதற்கான உதாரணம்?
அ) உலோகம்
ஆ) அலோகம்
இ) உலோகப்போலிகள்
ஈ) மந்த வாயுக்கள்
3) கீழ்க்கண்டவற்றுள் ஒரு தனிமம் மற்றும் சேர்மத்தின் மூலக்கூறைக் குறிக்கக்கூடிய எளிய மற்றும் அறிவியல் பூர்வமான முறை.
அ) கணித வாய்ப்பாடு
ஆ) வேதியியல் வாய்ப்பாடு
இ) கணிதக் குறியீடு
ஈ) வேதியியல் குறியீடு
4) அறை வெப்பநிலையில் திரவமாக உள்ள உலோகம் எது?
a) குளோரின்
b) சல்பர்
c) பாதரசம்
d) வெள்ளி
5) எப்பொழுதுமே பளபளப்பான, வளையக்கூடிய, ஒளிரும் தன்மையுள்ள தனிமம் எது?
a) அலோகம்
b) உலோகம்
c) உலோகப்போலிகள்
d) வாயுக்கள்
4. அணு அமைப்பு
1) பருப்பொருளின் அடிப்படை அலகு __________ ஆகும்.
அ) தனிமம்
ஆ) அணு
இ) மூலக்கூறு
ஈ) எலக்ட்ரான்
2) அணுக்கருவைச் சுற்றி வரும் அடிப்படை அணுத்துகள் __________ ஆகும்.
அ) அணு
ஆ) நியூட்ரான்
இ) எலக்ட்ரான்
ஈ) புரோட்டான்
3) __________ நேர் மின்சுமையுடையது.
அ) புரோட்டான்
ஆ) எலக்ட்ரான்
இ) மூலக்கூறு
ஈ) நியூட்ரான்
4) ஓர் அணுவின் அணு எண் என்பது அதிலுள்ள __________ ஆகும்.
அ) நியூட்ரான்களின் எண்ணிக்கை
ஆ) புரோட்டான்களின் எண்ணிக்கை
இ) புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் மொத்த எண்ணிக்கை
ஈ) அணுக்களின் எண்ணிக்கை
5) நியூக்ளியான்கள் என்பது __________ கொண்டது..
அ) புரோட்டான்கள் மற்றும் எலக்ட்ரான்களைக்
ஆ) நியூட்ரான்கள் மற்றும் எலக்ட்ரான்களைக்
இ) புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களைக்
ஈ) நியூட்ரான்கள் மற்றும் பாஸிட்ரான்களைக்
6) பொருத்துக
1. இணைதிறன் – Fe
2. மின்சுமையற்ற துகள் – புரோட்டான்
3. இரும்பு – வெளிவட்டப்பாதையில் காணப்படும் எலெக்ட்ரான்
4. ஹைட்ரஜன் – நியூட்ரான்
5. நேரமின்சுமை கொண்ட துகள் – ஒர் இணைதிறன்
a)34152
(b)32514
(c)12435
(d)52143
5. தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்
1) இலைகளின் மூலம் உடல் வழி இனப்பெருக்கம் நடத்துவது
a) பிரையோபில்லம்
b) பூஞ்சை
c) வைரஸ்
d) பாக்டீரியா
2) ஈஸ்ட்டின் பாலிலா இனப்பெருக்க முறை
அ) ஸ்போர்கள்
ஆ) துண்டாதல்
இ) மகரந்தச் சேர்க்கை
ஈ) மொட்டு விடுதல்
3) ஒரு தாவரத்தின் இனப்பெருக்க உறுப்பு
a) வேர்
b) தண்டு
c) இலை
d) மலர்
4) மகரந்தச் சேர்க்கையாளர்கள் என்பவை
a) காற்று
b) நீர்
c) பூச்சிகள்
d) மேற்கூறிய அனைத்தும்
5) பற்றுவேர்கள் காணப்படும் தாவரம்
a) வெற்றிலை
b) மிளகு
c) இவை இரண்டும்
d) இவை இரண்டும் அன்று
6) பொருத்துக
1. அல்லி – அ. சப்பாத்திக்கள்ளி
2. பெரணி – ஆ. கிரைசாந்திமம்
3. இலைத் தொழில் தண்டு – இ. பூச்சிகளை ஈர்க்கிறது
4. கொக்கி – ஈ. ஸ்போர்
5. தரைகீழ் ஓடு தண்டு – உ. பிக்னோனியா
a) 34152
b) 32514
c) 12435
d) 52143
7) கூற்று : பூவில் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை மற்றும் கருவுறுதல், கனிகளையும், விதைகளையும் உருவாக்கும்.
காரணம் : கருவுறுதலுக்குப் பின் சூற்பை கனியாக மாறுகிறது. சூலானது விதையாக மாறும்.
அ) கூற்று சரி. காரணம் தவறு.
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்றும் சரி, காரணமும் சரி.
ஈ) கூற்று தவறு, காரணம் சரி
8) கூற்று : கூம்பு வடிவ வேருக்கு எடுத்துக்காட்டு கேரட் ஆகும்.
காரணம் : இது வேற்றிட வேரின் மாறுபாடாகும்.
அ) கூற்று தவறு, காரணம் சரி
ஆ) கூற்றும் தவறு, காரணமும் தவறு.
இ) கூற்றும் சரி, காரணமும் சரி.
ஈ) கூற்று சரி, காரணம் தவறு
6. உடல் நலமும் சுகாதாரமும்
1) ரவி நல்ல மனநிலையும் திடகார்த்தரமான உடலையும் பெற்றிருக்கிறான். இது எதைக் குறிக்கிறது.
அ) சுகாதாரம்
ஆ) உடல்நலம்
இ) சுத்தம்
ஈ) செல்வம்
2) தூக்கம் உடலுக்கு மட்டுமல்ல, இதற்கும் நல்லது தான் ?.
அ) மகிழ்ச்சி
ஆ) ஓய்வு
இ) மனம்
ஈ) சுற்றுச்சூழல்
3) நாம் வாழுமிடம் இவ்வாறு இருக்க வேண்டும் ?
அ) திறந்த
ஆ) மூடியது
இ) சுத்தமான
ஈ) அசுத்தமான
4) புகையிலை மெல்லுவதால் ஏற்படுவது?
அ) இரத்த சோகை
ஆ) பற்குழிகள்
இ) காசநோய்
ஈ) நிமோனியா
5) முதலுதவி என்பதன் நோக்கம்
அ) பணம் சேமிக்க
ஆ) வடுக்களைத் தடுக்க
இ) மருத்துவப் பராமரிப்பு தடுக்க
ஈ) வலி நிவாரணம்
6) பொருத்துக:-
1. ராபிஸ்– சால்மோனெல்லா
2. காலரா – மஞ்சள் நிற சிறுநீர்
3. காசநோய் – கால் தசை
4. ஹபடைடிஸ் – ஹைட்ரோபோபியா
5. டைபாயிடு – மைக்கோபாக்டீரியம்
a)43521
b)32514
c)12435
d)52143
7) கூற்று : வாய்ச் சுகாதாரம் நல்லது.
காரணம் : நல்ல பற்கள் மற்றும் ஆரோக்கியமான திசுக்களால் சூழப்பட்ட ஈறுகள்.
(a) 1 மற்றும் 2 இரண்டும் சரியானவை.
(b) 1 மற்றும் 2 ஆகிய இரண்டும் தவறானவை.
(c) 1 சரி ஆனால் 2 தவறு.
(d) 1 தவறு ஆனால் 2 சரி.
8) கூற்று : சின்னம்மை ஒரு வைரஸ் தொற்று நோயாகும்.
காரணம் : உடல் முழுவதும் தடிப்புகள், காய்ச்சல் மற்றும் அம்மை கொப்புளங்கள் போன்ற அறிகுறிகளைக் கிருமிகள் தோற்றுவிக்கின்றன.
(a) 1 மற்றும் 2 இரண்டும் சரி
(b) 1மற்றும் 2 இரண்டும் தவறு.
(c) 1 சரி ஆனால் 2 தவறு.
(d) 1 தவறு ஆனால் 2 சரி
7. காட்சித் தொடர்பு
1) அசைவூட்டம் எதற்கு உதாரணம்?
அ) ஒலித் தொடர்பு
ஆ) காட்சித் தொடர்பு
இ) வெக்டர் தொடர்பு
ஈ) ராஸ்டர் தொடர்பு
2) போட்டோஷாப் மென்பொருளை அதிகம் பயன்படுத்துபவர்கள் யார்?
அ) ஆசிரியர்கள்
ஆ) மருத்துவர்கள்
இ) வண்ணம் அடிப்பவர்கள்
ஈ) புகைப்படக் கலைஞர்கள்
3) மைக்ரோசாப்ட் போட்டோ ஸ்டோரியில் நமது படங்களைப் பதிவேற்ற பயன்படுத்தபடும் தெரிவு எது?
அ) BEGIN A STORY
ஆ) IMPORT PICTURES
இ) SETTINGS
ஈ) VIEW YOUR STORY
4) கணிணியில் உருவாக்கப்பட்ட தோற்றங்களை உண்மையான உருவம் போல்காட்டுவது கீழ்க்கண்டவற்றுள் எது?
அ) இங்க்ஸ்கேப்
ஆ) போட்டோ ஸ்டோரி
இ) மெய்நிகர் தொழில்நுட்பம்
ஈ) அடோபி இல்லுஸ்ட்ரேட்டர்
5) படப்புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுபவை யாவை?
அ) ராஸ்டர்
ஆ) வெக்டர்
இ) இரண்டும்
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
6) சின்னங்கள் உருவாக்கப் பயன்படுத்தப்படும் மென்பொருள் எது?
அ) போட்டோஷாப்
ஆ) இல்லுஸ்ட்ரேட்டர்
இ) வெக்டார் வரைகலை
ஈ) போட்டோ ஸ்டோரி
7) பொருத்துக
1. அசைவூட்டப் படங்கள் – 3D
2. ராஸ்டர் – காட்சித் தொடர்பு
3. வெக்டர் – படப் புள்ளிகள்
4. மெய்நிகர் உண்மை – மைக்ரோசாப்ட் போட்டோ ஸ்டோரி
5. காணொளிப் படக்கதை – இல்லுஸ்ட்ரேட்டர்
(a) 23514
(b)32514
(c)12435
(d) 52143
II Term
1. வெப்பம் மற்றும் வெப்பநிலை
1) வெப்பநிலையினை அளப்பதற்கான S.I அலகுமுறை
a) கெல்வின்
b) பாரன்ஹீட்
c) செல்சியஸ்
d) ஜூல்
2) வெப்பநிலைமானியில் உள்ள குமிழானது வெப்பமான பொருளின் மீது வைக்கப்படும்போது அதில் உள்ள திரவம்
a) விரிவடைகிறது
b) சுருங்குகிறது
c) அதே நிலையில் உள்ளது
d) ஏதுமில்ல
3) மனிதனின் சராசரி உடல் வெப்பநிலை
a) 0°C
b) 37°C
c) 98°C
d) 100°C
4) ஆய்வக வெப்பநிலைமானியில் பாதரசம் பொதுவாக பயன்படுத்தப்படக் காரணம் அது
a) பாதுகாப்பான திரவம்
b) தோற்றத்தில் வெள்ளி போன்று பளபளப்பாக உள்ளது
c) ஒரே சீராக விரிவடையக்கூடியது
d) விலை மலிவானது
5) எது தவறானது K (கெல்வின்) = °C (செல்சியஸ்) + 273.15
0C K
a. -273.15 0
b. -123 150.15
c. 127 400.15
d. +450 +733.15
6) பொருத்துக:-
1. மருத்துவ வெப்பநிலைமானி – ஆற்றல் .
2. சாதராண மனிதனின் உடல் வெப்பபிலை – 1000.
3. வெப்பம் – 370.
4. நீரின் கொதிநிலை – 00.
5. நீரின் உறைநிலை – உதறுதல் .
(a)53124
(b)32514
(c)12435
(d)52143
2. மின்னோட்டவியல்
1) சிறிய அளவினலா மின்னோட்டங்கள் மில்லி ஆம்பியரில் ௬8) அளக்கப்படுகிறது எனில் , 0.25 ஆம்பியர் (A) மின்னோட்டத்தினை மில்லி ஆம்பியரில் கூறுக.
(a) 2.5mA
(b) 25 mA
(c) 250 mA
(d) 2500 mA
2) பொருத்துக:-
1. மின்கலம் – மின்சுற்றை திறக்க அல்லது மூட பயன்படுகிறது
2. சாவி – மின்சுற்றில் பயன்படுத்தப்படும் ஓர் பாதுகாப்பு சாதனம் .
3. மின்சுற்று – அதிக மின்பளு.
4. குறு சுற்று – மின்னோட்டம் செல்லும் ஒரு துண்டிப்பான் மூடிய பாதை.
5. மின் உருகி – வேதி ஆற்றலை, மின் ஆற்றலாக மாற்றும் சாதனம் .
(a)41352
(b)32514
(c)12435
(d)52143
3) கூற்று 1: தாமிரம் ,மின் கடத்துக்கம்பிககள் உருவாக்கப் பயன்படுகிறது.
காரணம் 2: தாமிரம் குறைந்த மின்தடையைக் கொண்டுள்ளது.
(a) 1 மற்றும் 2 இரண்டும் சரி, மேலும் 2-என்பது 1-க்கான சரியான விளக்கம் ஆகும் .
(b) 1 மற்றும் 2 இரண்டும் சரி, ஆனால் 2 ஆனது 1-க்கான சரியான விளக்கம்
இல்லை.
(c) 1சரி, ஆனால் 2 தவறு.
(d) 1 தவறு, ஆனால் 2 சரி
4) கூற்று 1: அரிதிற் கடத்திகள் , மின்னோட்டத்தை தன் வழியே அனுமதிப்பதில்லை.
காரணம் 2: அரிதிற் கடத்திகளில் கட்டுறா எலக்ட்ரான்கள் இல்லை.
(a) 1 மற்றும் 2 இரண்டும் சரி,மேலும் 2-என்பது 1-க்கான சரியான விளக்கம் ஆகும் .
(b) 1 மற்றும் 2 இரண்டும் சரி, ஆனால் 2 ஆனது 1-க்கான சரியான விளக்கமல்ல.
(c) 1 சரி ஆனால் 2 தவறு.
(d) 1 தவறு ஆனால் 2 சரி
3. நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்
1) கம்பளி நூலினைக் கொண்டு ஸ்வெட்டர் தயாரிக்கப்பட்டால், அம்மாற்றத்தினை ஆக வகைப்படுத்தலாம்.
a) இயற்பியல் மாற்றம்
b) வேதியியல் மாற்றம்
c) வெப்பம் கொள் மாற்றம்
d) வெப்ப உமிழ் மாற்றம்
2) பின்வருவனவற்றுள் எதுவெப்பம் கொள் மாற்றங்களாகும்
(a) குளிர்வடைதல் மற்றும் உருகுதல்
(b) குளிர்வடைதல் மற்றும் உறைதல்
(c) ஆவியாதல் மற்றும் உருகுதல்
(d) ஆவியாதல் மற்றும் உறைதல்
3) கீழ்கண்டவற்றில் எதுவேதியியல் மாற்றமாகும் .
(a) நீர்மேகங்களாவது
(b) ஒருமரத்தின் வளர்ச்சி
(c) பசுஞ்சாணம் உயிர் -எரிவாயுவாவது
(d) பனிக்கூழ் கரைந்தநிலை பனிக்கூழாவது.
4)_ என்பது கால-ஒழுங்கு மாற்றத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும் .
(a) பூகம்பம்
(b) வானில் வானவில் தோன்றுவது.
(c) கடலில் அலைகள் தோன்றுவது.
(d) மழைபொழிவு
5. __ வேதிமாற்றம் அல்ல.
(a) அம்மோனியா நீரில் கரைவது.
(b) கார்பன் -டை-ஆக்ஸைடு நீரில் கரைவது.
(c) உலர்பனிக்கட்டிநீரில் கரைவது.
(d) துருவப் பனிக்குமிழ்கள் உருகுவது.
4. செல் உயிரியல்
1) உயிரினங்களின் அடிப்படையாகஉள்ளது?
(a) செல்
(b) புரோட்டோப்பிளாசம்
(c) செல்லுலோஸ்
(d) உட்கரு
2) நான் ஒரு விலங்கு செல்லின் வெளிப்புற அடுக்கு நான் யார் ?
(a) செல் சுவர்
(b) உட்கரு
(c) செல் சவ்வு
(d) உட்கருசவ்வு
3) செல்லின் மூளையாகச் செயல்படும் செல்லின் பாகம் எது?
(a) லைசோசோம்
(b) ரைபோசோம்
(c) மைட்டோகாண்ட்ரியா
(d) உட்கரு
4) செல் பகுப்பிற்குஉதவுவது?
(a) எண்டோபிளாஸ்மிக் வளை
(b) கோல்கைஉறுப்புகள்
(c) சென்ட்ரியோல்
(d) உட்கரு
5) செல்லின் பல்வேறுஉறுப்புகளுக்குப் பொருத்தமானஅறிவியல் சொல் ?
(a) திசு
(b) உட்கரு
(c) செல்
(d) செல் நுண் உறுப்பு
6) பொருத்துக:-
1. கடத்தும் கால்வாய் – உட்கரு.
2. தற்கொலைப்பை – எண்டோபிளாச வலைப்பின்னல் .
3. கட்டுப்பாட்டுஅறை – லைசோசோம் .
4. ஆற்றல் மையம் – பசுங்கணிகம்
5. உணவு தயாரிப்பாளர் – மைட்டோகாண்ட்ரியா.
(a)23154
(b)32514
(c)12435
(d) 52143
7) கூற்று 1: திசு என்பது மாறுபட்ட செல்களைக் கொண்டஒரு குழு.
காரணம் 2: தசைத் திசு தசை செல்களால் ஆனது.
(a) 1 மற்றும் 2 இரண்டும் சரி
(b) 1மற்றும் 2 இரண்டும் தவறு
(c) 1சரிஆனால் 2 தவறு
(d) 1தவறுஆனால் 2 சரி
8) கூற்று 1: பெரும்பான்மை செல்களை நேரடியாக வெறும் கண் கொண்டு பார்க்கமுடியாது ஏனெனில்
காரணம் 2: செல்கள் மிக நுண்ணியது.
(a) மற்றும் 2 இரண்டும் சரி
(b) 1மற்றும் 2 இரண்டும் தவறு
(c) 1சரி ஆனால் 2 தவறு
(d) 1 தவறு ஆனால் 2 சரி
5. வகைப்பாட்டியலின் அடிப்படைகள்
1)வகைப்பாட்டியலுக்கு இன்றியமையாதது எது?
(a) ஒற்றுமை
(b) வேறுபாடு
(c) இரண்டும்
(d) எதுவுமில்லை
2) ஏறத்தாழ புவியில் காணப்படும் சிற்றினங்களின் எண்ணிக்கை?
(a) 8.7 மில்லியன்
(b) 8.6 மில்லியன்
(c) 8.5 மில்லியன்
(d) 8.8 மில்லியன்
3) உயிரி உலகில் மிகப்பெரிய பிரிவு?
(a) வரிசை
(b) பேருலகம்
(c) தொகுதி
(d) குடும்பம்
4) ஐந்து உலக வகைப்பாடு யாரால் தொடங்கப்பட்டது?
(a) அரிஸ்டாட்டில்
(b) லின்னேயஸ்
(c) விட்டேக்கர்
(d) பிளேட்டோ
5) புறாவின் இருசொற் பெயர்
(a) ஹோமோசெப்பியன்
(b) ராட்டர்ராட்டஸ்
(c) மாஞ்சிபெரா இண்டிகா
(d) கொலம்பாலிவியா
6) பொருத்துக:-
1. மொனிரா – மோல்டுகள் .
2. புரோடிஸ்டா – பாக்டீரியா.
3. பூஞ்சை – வேம்பு.
4. ப்ளாண்டே – வண்ணத்துப்பூச்சி.
5. அனிமேலியா – யூக்ளினா.
(a)52413
(b)32514
(c)12435
(d)53142
7) கூற்று 1: இரு சொல் பெயர் என்பது உலகளாவிய பெயராகும் . இது இரு பெயர்களைக் கொண்டது.
காரணம் 2: கரோலஸ் லின்னேயஸ் என்பவரால் முதன் முதலில் இது
அறிமுகப்படுத்தப்பட்டது.
(a) கூற்று சரி, காரணமும் சரி
(b) கூற்று சரி, காரணம் தவறு
(c) கூற்று தவறு, காரணம் சரி
(d) கூற்று (ம) காரணம் தவறு
8. கூற்று 1: அடையாளம் காணுதல் , வகைப்படுத்துதல் , தொகுத்தல் ஆகியவைவகைப்பாட்டியலில் அவசியமானவை.
காரணம் 2: இவை வகைப்பாட்டியலின் அடிப்படைப் படிநிலைகள் .
(a) கூற்று சரி, காரணமும் சரி
(b) கூற்று சரி, காரணம் தவறு
(c) கூற்று தவறு, காரணம் சரி
(d) கூற்று (ம) காரணம் தவறு
6. கணினிவரைகலை
1) Tux Paint எதற்காகப் பயன்படுகிறது?
(a) வண்ணம் தீட்ட
(b) நிரல் அமைக்க
(c) வருட
(d) PDF ஆக மாற்ற
2) Tux Paint மென்பொருளில் படம் வரையவும் திருத்தங்கள் செய்யவும்எந்தக் கருவிப்பட்டைப் (Toolbar) பயன்படுகிறது
(a) இடப்பக்க கருவிப்பட்டை
(b) வலப்பக்க கருவிப்பட்டை
(c) நடுப்பகுதி கருவிப்பட்டை
(d) அடிப்பகுதி கருவிப்பட்டை
3) முன்னர் செய்த செயலை நீக்கும் (Undo) குறுக்குவழி விசைஎது?
(a) Ctrl + Z
(b) Ctrl + R
(c) Ctrl +Y
(d) Ctrl + N
4) Tux Math மென்பொருள் எதற்குப் பயன்படுகிறது?
(a) வண்ணம் தீட்ட
(b) கணிதம் கற்க
(c) நிரல் பற்றிஅறிய
(d) வரைகலையைக் கற்க
5) Tux 1180-ல் ஸ்பேஸ் கேடட் என்பது எதற்காகப் பயன்படுகிறது?
(a) எளிய கூட்டல்
(b) வகுத்தல்
(c) படம் வரைதல்
(d) பெருக்கல்
III TERM
1. ஒளியியல்
1) ஒளியானது எப்பொழுதும் _ _ செல்லும் இந்தப் பண்பு என
அழைக்கப்படுகிறது.
(a) வளைகோட்டில் , நிழல்கள்
(b) நேர்கோட்டில் நிழல்கள்
(c) நேர்கோட்டில் எதிரொளிப்பு
(d) வளைந்து பின்நேராக நிழல்கள்
2) ஆடியில்படும் ஒளியானது
(a) ஊடுருவிச் செல்கிறது
(b) எதிரொளிப்பு அடைகிறது
(c) உட்கவரப்படுகிறது
(d) விலகலடைகிறது
3)__ பரப்பு ஒளியை எதிரொளிக்கிறது.
(a) நீர்
(b) குறுந்தகடு
(c) கண்ணாடி
(d) கல்
4) ஒளி என்பது ஒருவகை _ .
(a) பொருள்
(b) ஆற்றல்
(c) ஊடகம்
(d) துகள்
5) நீங்கள் , உங்கள் பிம்பத்தைப் பளப்பளப்பான பரப்பில் பார்க்க இயலும் , ஆனால் மரமேஜையின் பரப்பில் பார்க்க இயலாது, ஏனெனில் _
(a) ஒழுங்கான எதிரொளிப்பு, மரமேஜையில் நடைபெறுகிறது மற்றும் ஒழுங்கற்ற எதிரொளிப்பு பளப்பளப்பான பரப்பில் நடைபெறுகிறது.
(b) ஒழுங்கான எதிரொளிப்பு பளபளப்பான பரப்பில் நடைபெறுகிறது மற்றும்ஒழுங்கற்ற எதிரொளிப்பு மரமேஜையில் நடைபெறுகிறது.
(c) இரண்டு பரப்புகளிலும் , ஒழுங்கான எதிரொளிப்பு நடைபெறுகிறது.
(d) இரண்டு பரப்புகளிலும் ஒழுங்கற்ற எதிரொளிப்பு நடைபெறுகிறது.
6) பின்வருவனவற்றில் எது பகுதி ஒளி ஊடுருவும் பொருள் ?
(a) கண்ணாடி
(b) மரம்
(c) நீர்
(d) மேகம்
7) ஒளியானது__ எதிரொளிப்பு நடைபெறுகிறது.
(a) எதிரொளிக்கும் பரப்பை அடையும் போது
(b) எதிரொளிக்கும் பரப்பை அணுகும் போது
(c) எதிரொளிக்கும் பரப்பின் வழியேசெல்லும் போது
(d) எதுவுமில்லை
8) கீழ்க்காணும் எப்பொருள் , ஒளியை நன்கு எதிரொளிக்கும் ?
(a) பிளாஸ்டிக் தட்டு
(b) சமதள ஆடி
(c) சுவர்
(d)காகிதம்
9. சிவராஜன் ஒருமீட்டர் அளவுகோலை, காலை 7 மணிக்கு விளையாட்டு மைதானத்தில் நேர்க்குத்தாக நிற்கவைக்கிறான் . நண்பகலில் தோன்றும் அளவுகோலின் நிழலானது?
(a) தோன்றாது
(b) காலையில் தோன்றிய நிழலைவிட நீளமானது மற்றும் நிழல் , சூரியனின்எதிர்த்திசையில் தோன்றும் .
(c) காலையில் தோன்றிய நிழலைவிடக் குறைவான நீளம் கொண்டது அதேதிசையில் தோன்றும் .
(d) காலையில் தோன்றிய நிழலைவிடக் குறைவானநீளம் கொண்டது.
10) ஊசித் துளைக்காமிராவில் தோன்றும் பிம்பம் தலைகீழானது,ஏனெனில்
(a) ஒளியானதுநேர்க்கோட்டில் செல்லும்
(b) ஒளிக்கதிர்கள் துளையின் வழியேச் செல்லும்போது தலைகீழாகச் செல்கிறது.
(c) ஒளிக்கதிர்கள் துளையின் வழியேச் செல்கிறது.
(d) ஒளிக்கதிர்கள் எதிரொளிக்கப்படுகின்றன.
11. எந்தக் கூற்றுநிழல்கள் உருவாக்கத்தை விளக்குகிறது?
1. ஒளி நேர்க்கோட்டில் செல்கிறது.
2. ஒளி ஊடுருவாப் பொருள் ஒளியைத் தன் வழியே அனுமதிப்பதில்லை
3. எதிரொளிப்பு கண்ணாடி போன்ற பரப்புகளில் நடைபெறுகிறது.
4. இடவலமாற்றம் அடைகிறது.
(a) 1மற்றும் 2
(b) 1மற்றும் 4
(c) 1 மற்றும் 3
(d) 1 மட்டும்
12) பொருத்துக:-
1. நேர்க்கோட்டுபண்பு – முதன்மைஒளிமூலம் .
2. சமதள ஆடி – ஒளிராப் பொருள் .
3. மின்மினிப்பூச்சி 5 பெரிஸ்கோப் .
4. நிலா – ஊசித்துளைக் காமிரா.
5. அகன்றஒளி மூலம் – நிறப்பட்டை.
6. ஒழுங்கானஎதிரொளிப்பு – ஒளிரும் பொருள் .
7. சூரியன் – புறநிழல் .
8. ஏழு வண்ணங்கள் – பளபளப்பானபரப்பு
(a)74218356
(b)82574163
(c)12836475
(d)52643817
2. அண்டம் மற்றும் விண்வெளி
1. நிலவானது பூமியை சுற்றிவர ஆகும் நாட்கள் ?
(a) 25
(b) 26
(c) 27
(d) 28
2. இன்றைய நாளில் கார்த்திகை நட்சத்திற்கு அருகில் நிலவு இருந்தால் 27 நாட்கள் கழிந்து நிலவானது _ நட்சத்திரத்திற்கு அருகில் இருக்கும் ?
(a) பரணி
(b) கார்த்திகை
(c) ரோஹிணி
(d) அஸ்வினி
3. _ தொலைநோக்கியைக் கண்டறிந்தார் ?
(a) ஹான் லிப்பெர்ஷே
(b) கலிலியோ
(c) நிக்கொலஸ் காப்பர்நிக்கஸ்
(d) தாலமி
4. அனேக இளம் நட்சத்திரங்களைக் கொண்ட விண்மீன் திரளுக்கு, என்று பெயர் .
(a) நீள்வட்டவிண்மீன் திரள்
(b) ஒழுங்கற்றவிண்மீன் திரள்
(c)குழுக்கள்
(d) சுருள் விண்மீன் திரள்
5) _ _ துணைக் கோளை நிறுவியவுடன் ISRO 4 டன் எடையுடைய
துணைக்கோள்களை ஏவும் திறன் பெறுகிறது?
(a) GSAT -13
(b) GSAT -14
(c) GSAT -17
(d) GSAT -19
6) பொருத்துக:-
1. ரோகிணி – GSLV-Mark 11.
2. GSAT -14 – GSLV Mark III M1.
3. GSAT -19 – SLV-3.
4. சந்த்ரயான் -2 – PSLV-XL C25.
5. மங்கள்யான் – GSLV-D5.
(a)34152
(b)32514
(c)12435
(d)52143
3. பலபடிவேதியியல்
1. மனிதனால் உருவாக்கப்பட்டமுதல் இழை?
(a) நைலான்
(b) பாலியஸ்டர்
(c) ரேயான்
(d) பஞ்சு
2) வலுவான இழை?
(a) ரேயான்
(b) நைலான்
(c) அக்ரிலிக்
(d) பாலியஸ்டர்
3) ஓர் இயற்கை இழையினைச் சுடரில் காட்டினால் அவ்விழை__.
(a) உருகும்
(b) எரிதல்
(c) ஒன்றும் ஏற்படுவதில்லை
(d) வெடித்தல்
4) கம்பளியைப் போன்ற பண்புகளைக் கொண்டசெயற்கை இழை
(a) நைலான்
(b) பாலியஸ்டர்
(c) அக்ரிலிக்
(d) PVC
5) நெகிழியின் சிறந்த பயன்பாட்டினை_ _எ ன்ற பயன்பாட்டில் அறியலாம் ?
(a) இரத்தப்பைகள்
(b) நெகிழிக் கருவிகள்
(c) நெகிழி உறிஞ்சுக் குழாய்கள்
(d) நெகிழி கேரிபைகள்
6) என்பது மட்கும் தன்மையற்ற ஒரு பொருள் .
(a) காகிதம்
(b) நெகிழிபுட்டி
(c) பருத்திதுணி
(d) கம்பளி
7) PET என்பது _ன ் சுருக்கெழுத்தாகும் .
(a) பாலியஸ்டர்
(b) பாலியஸ்டர் மற்றும் டெரிலின்
(c) பாலிஎத்திலின் டெரிப்தாலேட்
(d) பாலித்தின் டெரிலின்
8) பொருத்துக:-
1. நைலான் – வெப்பததால் இளகும் நெகிழி.
2. PVC – வெப்பத்தால் இறுகும் நெகிழி.
3. பேக்லைட் – இழை.
4. டெஃப்லான் – மரக்கூழ் .
5. ரேயான் – ஒட்டாத சமையல்கலன்கள் .
(a)23154
(b)32514
(c) 12435
(d)52143
9) கூற்று 1: மண்ணில் புதைக்கப்பட்டகாய்கறித் தோல்கள் இரு வாரங்களில் மறைந்து போகின்றன.
காரணம் 2: காய்கறித் தோல்கள் மட்கும் தன்மைகொண்டவை.
(a) கூற்று (ம) காரணம் சரி மேலும் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம் ஆகும் .
(b) கூற்று (ம) காரணம் இரண்டும் சரி ஆனால் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம் அல்ல.
(c) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு.
(d) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி
10) கூற்று 1: நைலான் ஆடைகள் சிதைந்து மைக்ரோ இழைகளாக மாற அதிக காலமாகும் . ஆனால் பருத்தி ஆடைகள் சிதைவடைய ஆறு மாதகாலம் போதுமானது.
காரணம் 2: நைலான் பெட்ரோலிய வேதிப்பொருள்களால் தயாரிக்கப்படுவதால் மட்கும் தன்மை பெற்றிருப்பதில்லை. பருத்தித் துணி மட்கும் தன்மை கொண்டது.
(a) கூற்று (ம) காரணம் சரி மேலும் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம் ஆகும் .
(b) கூற்று (ம) காரணம் இரண்டும் சரி ஆனால் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம் அல்ல.
(c) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு.
(d) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி
11) கூற்று 1: நெகிழி பொருள்களைத் தவிர்ப்பது நல்லது.
காரணம் 2: நெகிழிகள் சுற்றுச் சூழலை மாசுபடுத்துகின்றன.
(a) கூற்று (ம) காரணம் சரி மேலும் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம் ஆகும் .
(b) கூற்று (ம) காரணம் இரண்டும் சரி ஆனால் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம் அல்ல.
(c) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு.
(d) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி
4. அன்றாடவாழ்வில் வேதியியல்
1) நிமோனியா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி சிகிச்சையில் பயனுள்ள ஒரு மருந்து
(a) ஸ்ட்ரெப்டோமைசின்
(b) குளோரோம்பெனிகால்
(c) பென்சிலின்
(d) சல்பாகுனிடின்
2) ஆஸ்பிரின் ஒரு
(a) ஆண்டிபயாடிக்
(b) ஆண்டிபைரடிக்
(c) மயக்கமருந்து
(d) சைக்கீடெலிக்
3.__என்பது வயிற்று அமிலத்தை நடுநிலையாக்குகிறது
(a) அமிலநீக்கி
(b) ஆண்டிபைரடிக்
(c) வலிநிவாரணி
(d) ஆண்டிஹிஸ்டமின்
4. ஒரு பொருள் தீப்பிடிக்க தேவையான மிகக் குறைந்த வெப்பநிலை அதன் __ என அழைக்கப்படுகிறது?
(a) கொதிநிலை
(b) உருகுநிலை
(c) சிக்கலானவெப்பநிலை
(d) ஸரிவெப்பநிலை
5) மெழுகுவத்தியின் சுடரில் வெப்பநிலைபகுதி?
(a) நீலம்
(b) மஞ்சள்
(c) கருப்பு
(d) உள் பகுதி
6) பொருத்துக:-
1. ஆண்டிபைரடிக் – வலியைக் குறைக்கும் .
2. வலிநிவாரணி – உடல் வெப்பநிலையைக் குறைக்கும் .
3. ஆன்டாசிட் – தன்னிச்சையானஎரிப்பு.
4. பாஸ்பரஸ் – ORS தீர்வு.
5.கார்பன் டை-ஆக்ஸைடு – சுவாசபிரச்சனைக்கு வழி வகுக்கிறது.
(a)21435
(b)32514
(c)12435
(d)52143
5. அன்றாடவாழ்வில் விலங்குகள்
1) கால்நடைகளிலிருந்து நமக்குக் கிடைக்கும் முக்கியமான பொருளாகும் .
(a) முட்டை
(b) பால்
(c) இரண்டும்
(d) இரண்டுமில்லை
2) முட்டையில் ____அ திகம் உள்ளது.
(a) புரதம்
(b) கார்போஹைட்ரேட்
(c) கொழுப்பு
(d) அமிலம்
3) வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளின் எந்த பாகம் _ _ ஆடைகள் தயாரிக்க உதவுகிறது?
(a) கால்
b)கை
c) உரோமம்
(d) தலை
4) பட்டுப் பூச்சிகளை வளர்ப்பதும் , பட்டு இழைகளை உருவாக்குவதும் இவ்வாறு அழைக்கப்படுகிறது?
(a) ஹார்ட்டிகல்சர்
(b) ஃபுளோரிகல்சர்
(c) அக்ரிகல்சர்
(d) செரிகல்சர்
5) பிரித்தெடுப்பவரின் நோய் என்றழைக்கப்படுவது?
(a) ஆஸ்துமா
(b) ஆந்தராக்ஸ்
(c) டைஃபாய்டு
(d) காலரா
6) பொருத்துக:-
1. கூட்டுப் புழு – இறைச்சி.
2. அமைதிப் பட்டு – கோழிப்பண்ணை.
3. பிராய்லர் – பட்டுப் பூச்சி.
4. இனிப்பானதிரவம் – ஆந்திரப் பிரதேசம் .
5. ஆடு – தேன் .
(a)53124
(b)32514
(c) 12435
(d)52143
7) கூற்று 1: விலங்குகளின் உரோமங்களிலிருந்து இழைகள் எடுக்கப்படுகின்றன.
காரணம் 2: ஆடு, யாக் , அல்பாகா (உரோம ஆடு) மற்றும் முயல் கம்பளி
இழைகளைத் தருகின்றன.
(a) கூற்றும் , காரணமும் சரி
(b) கூற்று சரி, காரணம் தவறு
(c) கூற்று தவறு, காரணம் சரி
(d) கூற்றும் , காரணமும் தவறு
8) கூற்று 1: பெனிசிலின் மற்றும் சிப்ரோஃப்ளோக்சாசின் .
காரணம் 2: இந்த மருந்துகள் பசுஅம்மையைக் குணமாக்கும் .
(a) கூற்றும் சரி, காரணம் தவறு.
(b) கூற்று தவறு, காரணம் சரி.
(c) கூற்றும் தவறு, காரணமும் தவறு
(d) கூற்றும் சரி, காரணமும் சரி
6. காட்சித் தொடர்பியல்
1. தேர்ந்தெடுத்த உரையை நகலெடுக்க ____ விசைப்பலகைக் குறுக்கு வழிபயன்படுகிறது
(a) Ctrl + c
(b) Ctrl + v
(c) Ctrl + x
(d) Ctrl + A
2) தேர்ந்தெடுத்த உரையை வெட்ட ____ விசைப்பலகைக் குறுக்கு வழிபயன்படுகிறது?
(a) Ctrl + c
(b) Ctrl + v
(c) Ctrl + x
(d) Ctrl + A
3) லிபெர் ஆபிஸ் ரைட்டரில் எத்தனை வகையான பக்க அமைவுகள் உள்னன?
(a)1
(b) 2
(c) 3
(d) 4
4) திரையில் ரூலர் தெரியாவிட்டால் _ _க ிளிக் செய்யவேண்டும் .
(a) View -> ruler
(b) View -> task
(c) files -> save
(d) edit -> paste
5) ஆவணத்தைச் சேமிக்கபயன்படும் மெனு?
(a) File -> open
(b) File -> print
(c) File -> save
(d) file -> close
🔔 மேலும் வேலைவாய்ப்பு & தேர்வு அப்டேட்களுக்கு Join பண்ணுங்க:
👉 Whatsapp – Join here
👉 Telegram – Join here
👉 Instagram – Follow here
❤️ நன்கொடை வழங்க:
📌 நம்முடைய சேவையை விரிவடைய தாங்கள் ஆதரிக்க விரும்பினால், நன்கொடை வழங்க இந்த லிங்கை பயன்படுத்துங்கள் –
👉 Donate here