📘 6th STD Tamil Grammar – முழுமையான குறிப்புகள்
தமிழ் இலக்கணம் (Grammar) மாணவர்களுக்கு மொழி கற்றலில் அடித்தளமாக அமைகிறது. 6ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள இலக்கணம் பகுதிகள் அனைத்தும் எளிமையான முறையில் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.
தமிழ் எழுத்துகளின் வகையும் தொகையும்
உலகில் உள்ள ஒவ்வொரு பொருளையும் மனிதன் உற்றுநோக்கினான். அவற்றின் இயல்புகளை அறிந்துகொண்டான். இவ்வாறே மொழியையும் ஆழ்ந்து கவனித்தான். மொழியை எவ்வாறு பேசவும் எழுதவும் வேண்டும் என்பதைவரையறை செய்தான். அந்த வரையறைகளே இலக்கணம் எனப்படும்.
தமிழ் மொழியின் இலக்கண வகைகள் இந்து
- எழுத்து இலக்கணம்
- சொல் இலக்கணம்
- பொருள் இலக்கணம்
- யாப்பு இலக்கணம்
- அணி இலக்கணம்
எழுத்து
ஒலி வடிவமாக எழுப்பப்படுவதும் வரிவடிவமாக எழுதப்படுவதும் எழுத்து எ னப்படுகிறது.
உயிர் எழுத்துகள்
உயிருக்கு முதன்மையானது காற்று. இயல்பாகக் காற்று வெளிப்படும்போது உயிர் எழுத்துகள் பிறக்கின்றன. வாயைத் திறத்தல். உதடுகளை விரித்தல், உதடுகளைக் குவித்தல் ஆகிய எளிய செயல்பாடுகளால் ‘அ’ முதல் ‘ஒள’ வரையுள்ள பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் பிறக்கின்றன.
அ.இ.உ,எ.,ஒ – ஆகிய ஐந்தும் குறுகி ஒலிக்கின்றன.
ஆ,ஈ.ஊ.ஏ.ஐ.ஓ.ஒள -ஆகிய ஏழும் நீண்டு ஒலிக்கின்றன.
குறுகி ஒலிக்கும்
ஆகிய ஐந்தும் குறில் எழுத்துகள்.
நீண்டு ஒலிக்கும்
ஆகிய ஏழும் நெடில் எழுத்துகள்.
ஒவ்வோர் எழுத்தையும் உச்சரிப்பதற்குக் கால அளவு உண்டு. எழுத்தை உச்சரிக்க எடுத்துக்கொள்ளும் கால அளவைக் கொண்டே குறில், நெடில் என வகைப்படுத்துகிறோம்.
மாத்திரை
மாத்திரை என்பது இங்குக் கால அளவைக் குறிக்கிறது. ஒரு மாத்திரை என்பது ஒருமுறை கண் இமைக்கவோ ஒருமுறை கைநொடிக்கவோ ஆகும் கால அ ளவாகும்.
குறில் எழுத்தை ஒலிக்கும் காலஅளவு – 1 மாத்திரை
நெடில் எழுத்தை ஒலிக்கும் காலஅளவு – 2 மாத்திரை.
மெய் எழுத்துக்கள்
மெய் என்பது உடம்பு எனப் பொருள்படும். மெய் எழுத்துகளை ஒலிக்க உடல் இயக்கத்தின் பங்கு இன்றியமையாதது. க், ங், ச், ஞ், ட், ண், த், க், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் ஆகிய பதினெட்டும் மெய்யெழுத்துகள் ஆகும்.
மெய் எழுத்துகன் ஒலிக்கும் கால அளவு – அரை மாத்திரை
ஒலித்துப் பார்த்து உணர்வோம்!
க், ச், ட், த், ப், ற் – – ஆகிய ஆறும் வன்மையாக ஒலிக்கின்றன.
-ங்,ஞ், ஸ்,ந், ம், ன்- ஆகிய ஆறும் மென்மையாக ஒலிக்கின்றன.
ய், ர், ல், வ், ழ், ள் – ஆகிய ஆறும் வன்மையாகவும் இல்லாமல், மென்மையாகவும் இல்லாமல் இரண்டிற்கும் இடைப்பட்டு ஒலிக்கின்றன.
உயிர்மெய்
மெய் எழுத்துகள் பதினெட்டூடன் உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சேர்வதால் தோன்றும் 216 எழுத்துகளும் உயிர்மெய் எழுத்துகள் ஆகும். மெய்யுடன் உயிர்க்குறில் சேர்ந்தால் உயிர்மெய்க் குறில் தோன்றுகிறது. மெய்யுடன் உயிர் நெடில் சேர்ந்தால் உயிர்மெய் நெடில் தோன்றுகிறது. ஆகவே உயிர்மெய் எழுத்துகளையும் உயிர்மெய்க் குறில். உயிர்மெய் நெடில் என இருவகைப்படுத்தலாம்.
ஆய்த எழுத்து
தமிழ்மொழியில் உயிர்.மெய். உயிர்மெய் எழுத்துகள் தவிர தனி ஆய்த எழுத்தை எழுத்து ஒன்றும் உள்ளது, அது – என்னும் ஆய்த எழுத்தாகும். ஆய்த எழுத்தை ஒலிக்க ஆகும் காலஅளவு அரை மாத்திரை
முதல் எழுத்துகள் சார்பு எழுத்துகள்
எழுத்துகள் இரண்டு வகைப்படும்
1. முதல் எழுத்துகள்
2. சார்பு எழுத்துகள்
முதல் எழுத்துகள்
உயிர் எழுத்துகள் பன்னிரண்டு, மெய்யெழுத்துகள் பதினெட்டு ஆகிய முப்பது எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும். பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமாக இவை இருக்கின்றன. எனவே இவற்றை முதல் எழுத்துகள் என்பர்.
சார்பு எழுத்துகள்
முதல் எழுத்துகளைச் சார்ந்து வரும் எழுத்துகள் சார்பெழுத்துகள். இவை பத்து வகைப்படும்.
1. உயிர்மெய்
2. ஆய்தம்
3. உயிரளபெடை
4. ஒற்றளபெடை
5. குற்றியலிகரம்
6. குற்றியலுகரம்
7. ஐகாரக்குறுக்கம்
8. ஒளகாரக்குறுக்கம்
9. மகரக்குறுக்கம்
10. ஆய்தக்குறுக்கம்.
இவ்வகுப்பில் உயிர்மெய், ஆய்தம் ஆகிய இரண்டு சார்பெழுத்துகள் பற்றிக் காண்போம்.
உயிர்மெய்
- மெய் எழுத்துகளும் உயிர் எழுத்துகளும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால் உயிர் மெய் எழுத்துகள் தோன்றுகின்றன.
- உயிர்மெய் எழுத்தின் ஒலிவடிவம் மெய்யும் உயிரும் சேர்ந்ததாக இருக்கும். வரிவடிவம் மெய்யெழுத்தை ஒத்திருக்கும். ஒலிக்கும் கால அளவு உயிர் எழுத்தை ஒத்திருக்கும்.
- முதல் எழுத்துகளைச் சார்ந்து வருவதால் இவை சார்பெழுத்து வகையுள் அடங்கும்.
ஆய்தம்
- மூன்று புள்ளிகளை உடைய தனித்த வடிவம் பெற்றது.
- முப்புள்ளி, முப்பாற்புள்ளி. தனிநிலை, அஃகேனம் என்ற வேறு பெயர்களும் இதற்கு உண்டு.
- நுட் மொழி முதல் எழுத்துகள் பமான ஒலிப்புமுறையை உடையது.
- தனக்குமுன் ஒரு குறில் எழுத்தையும் தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டுமே வரும்.
- தனித்து இயங்காது.
- முதல் எழுத்துகளாகிய உயிரையும். மெய்யையும் சார்ந்து இயங்குவதால் ஆய்த எழுத்து சார்பெழுத்து ஆகும்.
மொழி முதல் எழுத்துகள்
- மொழி என்பதற்குச் சொல் என்னும் பொருளும் சொல்லின் முதலில் வரும் எழுத்துகளை மொழிமுதல் எழுத்துகள் என்பர்.
- உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சொல்லின் முதலில் வரும்.
- க, ச, த, ந, ப, ம ஆகிய வரிசைகளில் உள்ள எல்லா உயிர்மெய் எழுத்துக்களும் சொல்லின் முதலில் வரும்.
- ங, ஞ, ய, வ ஆகிய உயிர்மெய் எழுத்து வரிசைகளில் சில எழுத்துகள் மட்டுமே சொல்லின் முதலில் வரும்.
- ங வரிசையில் ‘ங‘ என்னும் ஓர் எழுத்து மட்டுமே சொல்லில் முதல் எழுத்தாக வருகிறது. ௭.கா-ஙனம்.
- (இக்காலத்தில் ஙனம் என்னும் சொல் தனித்து இயங்காமல் அங்ஙனம். இங்ஙனம். எங்ஙனம் என்னும் சொற்களில் மட்டுமே வழங்கி வருகிறது.)
- (எ.கா) க-வரிசை எழுத்துகள் கடல், காக்கை, கிழக்கு. கீற்று. குருவி, கூந்தல், கெண்டை. கேணி. கைகள், கொக்கு. கோலம், கெளதாரி.
- ஞ – வரிசையில் ஞ. ஞா, ஞெ. ஞொ ஆகிய நான்கு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.
- ய – வரிசையில் ய. யாக, கயோ, யெள ஆகிய ஆறு எழுத்துகளும் சொல்லின்
- வ வரிசையில் வ. வா, வி. வீ வெ. வே. வை, வெள ஆகிய எட்டு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.
மொழிக்கு முதலில் வராத எழுத்துகள்
- மெய்யெழுத்துகள் பதினெட்டும் சொல்லின் முதலில் வாரா.
- ட,ண,ர,ல,ழ,ள,ற,ன ஆகிய எட்டு உயிர்மெய் எழுத்துகளின் வரிசையில் ஓர் எழுத்து கூடச் சொல்லின் முதலில் வராது.
- ஆய்த எழுத்து சொல்லின் முதலில் வராது.
- ங, ஞ, ய, வ ஆகிய உயிர்மெய் எழுத்து வரிசைகளில் மொழி முதலில்வருவதாகக் குறிப்பிடப்பட்ட எழுத்துகள் தவிர பிற எழுத்துகள் சொல்லின் மு தலில் வாரா. டமாரம், ரம்பம். லண்டன். ஃப்ரான்ஸ், டென்மார்க், போன்றவை பிறமொழிச் சொற்கள். இவற்றைத் தமிழில் ஒலி பெயர்த்து எழுதுகிறோம்.
மொழி இறுதி எழுத்துக்கள்
சொல்லின் இறுதியில் வரும் எழுத்துகளை மொழி இறுதி எழுத்துகள் என்பர்.
- உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் மெய்யுடன் இணைந்து உயிர்மெய்யாக மட் டுமே மொழி இறுதியில் வரும்.
- ஞ்,ண்,ந்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ன் ஆகிய மெய்யெழுத்துகள் பதினொன்றும் மொழியின் இறுதியில் வரும். (உரிஞ், வெரிந். அவ்)
மொழி இறுதியாக எழுத்துககள்
- சொல்லின் இறுதியில் உயிரெழுத்துகள் தனித்து வருவதில்லை. –
- உயிர் எழுத்துகள் மெய்யெழுத்துடன் இணைந்து உயிர்மெய்யாக மட்டுமே சொல்லின் இறுதியில் வரும்.
- அளபெடை எழுத்துகளில் இடம் பெறும் போது உயிர் எழுத்துகள் சொல்லின் இறுதியில் வரும்.
- ஆய்த எழுத்து சொல்லின் இறுதியில் வராது.
- க்,ங், ச், ட்த்.ப்.ற் ஆகிய ஏழு மெய் எழுத்துகளும் சொல்லின் இறுதியில் வரும். வருவதில்லை.
- உயிர்மெய் எழுத்துகளுள் ங எழுத்து வரிசை சொல்லின் இறுதியில் வராது.
- கார்த்திக், ஹாங்காங், சுஜித், மார்க்கெட், திலீப், மார்ச் போன்ற பிறமொழிப் பெ யர்ச்சொற்களில் இவ்வெழுத்துகள் இறுதி எழுத்துகளாக இடம்பெறுவதுண்டு.
- எகர வரிசையில் கெ முதல் னெ முடிய எந்த உயிர்மெய் எழுத்தும் மொழி இறுதியில் வருவதில்லை.
- ஒகர வரிசையில் நொ தவிர பிற உயிர்மெய் எழுத்துகள் மொழி இறுதியில் வருவதில்லை. நொ என்னும் எழுத்து ஓரெழுத்து ஒரு மொழியாகத் துன்பம் என்னும் பொருளில் வரும்
சொல்லின் இடையில் வரும் எழுத்துகள்
- மெய் எழுத்துகள் பதினெட்டும் சொல்லின் இடையில் வரும்
- உயிர்மெய் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும்.
- ஆய்த எழுத்து சொல்லின் இடையில் மட்டுமே வரும்.
அளபெடையில் மட்டுமே உயிர் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும்.
இன எழுத்துகள்
சில எழுத்துகளுக்கு இடையே ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உண்டு. இவ்வாறு ஒற்றுமை உள்ள எழுத்துகள் இன எழுத்துகள் எனப்படும். ஆறு வல்லின மெய் எழுத்துகளுக்கும் ஆறு மெல்லின எழுத்துகளும் இன எழுத்துகள் ஆகும். சொற்களில் மெல்லின மெய் எழுத்தை அடுத்துப் பெரும்பாலும் அதன் இனமாகிய வல்லின எழுத்து வரும்.
மெய்யெழுத்துகனைப் போலவே உயிர் எழுத்துகளிலும் இன எழுத்துகள் உண்டு. உயிர் எழுத்துகளில் குறிலுக்கு நெடிலும், நெடிலுக்குக் குறிலும் இன எழுத்துகள் ஆகும். குறில் எழுத்து இல்லாத ஐ என்னும் எழுத்துக்கு இ என்பது இன எழுத்தாகும். ஒள என்னும் எழுத்துக்கு உ என்பது இன எழுத்தாகும். சொல்லில் உயிர் எழுத்துகள் சேர்ந்து வருவது இல்லை. அளபெடையில் மட்டும் நெடிலைத் தொடர்ந்து அதன் இனமாகிய குறில் எழுத்து சேர்ந்து வரும்.
(எ.கா) ஓஒதல், தூஉம், தழீஇ
தமிழ் எழுத்துகளில் ஆய்த எழுத்துக்கு மட்டுமே இன எழுத்து இல்லை.
மயங்கொலிகள்
மணம் – மனம்
மேலே உள்ள இரண்டு சொற்களையும் கவனியுங்கள். உச்சரிக்கும் போது
ரெத்தாழ ஒன்று போலவே ஒலிக்கின்றன. ஆனால் இரண்டுக்கும் இடையே பொருள் வேறுபாடு உண்டு. இவ்வாறு உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறு பாடு
உள்ள ஒலிகளை மயங்கொலிகள் என்கிறோம்.
ண, ன., ந
ல, ழ, ள
ர, ற ஆகிய எட்டும் மயங்கொலி எழுத்துகள் ஆகும்.
ண, ன, ந – எழுத்துகள்
ண– நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப் பகுதியைத் தொடுவதால் ண கரம் பிறக்கிறது.
ன – நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் முன் பகுதியைத் தொடுவதால் னகரம் பிறக்கிறது.
ந – நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடிப் பகுதியைத் தொடுவதால் நகரம் பிறக்கிறது.
(ட், ண்) (த், ந்) (ற், ன்) ஆகியவை இன எழுத்துகள்.
இந்த இன எழுத்துகளைக் கொண்டு டகரத்தை அடுத்து வரும் ணகரம் டண்ண கரம் என்றும்,
தகரத்தை அடுத்து வரும் நகரம் தந்நகரம் என்றும்
றகரத்தை அடுத்து வரும் னகரம் றன்னகரம் என்றும் அழைக்கப்படுகின்றன.
தெரிந்து தெளிவோம்
சொற்களில் ண, ன இடம்பெறும் வகை
ட என்னும் எழுத்துக்கு முன் ண் வரும்
(எ.கா) கண்டம். வண்டி. நண்டு
ற என்னும் எழுத்துக்கு முன் ன் வரும்
(௭.கா.) மன்றம். நன்றி. கன்று
ணகரம் வர வேண்டிய இடத்தில் னகரம் எழுதப்படுமானால் பொருள்
மாறுபடும் என்பதை உணர்க.
(௭.கா) வாணம் – வெடி
பணி – வேலை
வானம்-ஆகாயம்’
ல, ழ, ள — எழுத்துகள்
ல – நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் பற்களின் அடியைத் தொடுவதால் லகரம் தோன்றும். இது ‘வ’ போல இருப்பதால் ‘வகர லகரம்’ என் கிறோம்.
ள – நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால் ளகரம் தோன்றும். இதனைப் பொது ளகரம் என்கிறோம். இது ‘ன’ போல இருப்பதால் ‘னகர னகரம்’ என்று கூறுவர்.
ழ – நாவின் நுனி மேல்நோக்கி வளைந்து வருடுவதால் முகரம் தோன்றும். (எகரமும் ழகரமும் ஒரே இடத்தில் ஒலிக்கப்படும்). ழ தமிழுக்கே சிறப்பானது. எனவே இதனைச் சிறப்பு ழகரம் என்று அழைக்கிறோம். இது ‘ம’ போல
இருப்பதால் ‘மகர ழகரம்! என்று கூறுவது இலக்கண மரபு.
பொருள் வேறுபாடு உணர்க.
- விலை – பொருளின் மதிப்பு
- விளை – உண்டாக்குதல்
- விழை – விரும்பு
- இலை – செடியின்
- இலை இளை – மெலிந்து போதல்
- இழை- நூல் இழை
ர ,ற எழுத்துகள்
ர – நாவின் நுனி மேல் அண்ணத்தில் முதல் பகுதியைத் தொட்டு வருவதால் ரகரம் தோன்றுகிறது. இஃது இடையின எழுத்து என்பதால் இடையின ரகரம் என்கிறோம்.
ற – நாவின் நுனி மேல் அண்ணத்தில் மையப்பகுதியை உரசுவதால் றகரம் தோன்றுகிறது. இது வல்லின எழுத்து என்பதால் வல்லின றகரம் என்கிறோம்.
பொருள் வேறுபாடு உணர்க
- ஏரி – நீர்நிலை
- கூரை – வீட்டின் கூரை
- ஏறி – மேலே ஏறி
- கூறை – புடவை
சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள்
சுட்டு எழுத்துகள்
அவன், இவள். அங்கு. இங்கு. அந்த. இந்த ஆகிய சொற்களைக் கவனியுங்கள். அவை ஒன்றைச் சுட்டிக் காட்டுகின்றன. இவ்வாறு சுட்டிக்காட்டுவதற்கு
அச்சொற்களின் முதலில் அமைந்துள்ள அ. இ ஆகிய எழுத்துகளே காரணம் ஆகும்
இவ்வாறு ஒன்றைச் சுட்டிக் காட்ட வரும் எழுத்துகளுக்குச் சுட்டு எழுத்துகள் என்று பெயர்.
அ, இ, உ ஆகிய மூன்று எழுத்துகளும் சுட்டு எழுத்துகள் ஆகும். ஆனால்,
இன்று உ என்னும் எழுத்தைச் சுட்டாகப் பயன்படுத்துவது இல்லை.
அகச்சுட்டு
இவன், அவன், இது. அது – இச்சொற்களில் உள்ள சுட்டு எழுத்துகளை நீக்கினால் பிற எழுத்துகள் பொருள் தருவதில்லை. இவ்வாறு, சுட்டு எழுத்துகள் சொல்லின் உள்ளேயே (அகத்தே) இருந்து சுட்டுப்பொருளைத் தருவது அகச்சுட்டு எனப்படும்.
புறச்சுட்டூ
அவ்வானம்-இம்மலை-இந்நூல்- இச்சொற்களில் உள்ள சுட்டு எழுத்துகளை நீக்கினாலும் பிற எழுத்துகள் பொருள் தரும். இவ்வாறு சுட்டு எழுத்துகள் சொல்லின் வெளியே புறத்தே) இருந்து சுட்டுப்பொருளைத் தருவது புறச்சுட்டு எனப்படும்.
அண்மைச்சுட்டு
இவன். இவர். இது. இவை. இம்மரம். இவ்வீடு – இச்சொற்கள் நம் அருகில் (அண் மையில்) உள்ளவற்றைச் சுட்டுகின்றன. எனவே. இஃது அண்மைச்சுட்டு எனப்படும். அண்மைச்சுட்டுக்குரிய எழுத்து ‘இ’ ஆகும்.
சேய்மைச்சுட்டு
அவன், அவர். அது, அவை. அவ்வீடு. அம்மரம் – இச்சொற்கள் தொலைவில் (சேய்மையில்) உள்ளவற்றைச் சுட்டுகின்றன. எனவே. இது சேய்மைச்சுட்டு எ னப்படும். சேய்மைச்சுட்டுக்குரிய எழுத்து ‘அ’ ஆகும்.
தெரிந்து தெளிவோம்
அருகில் உள்ளவற்றிற்கும் தொலைவில் உள்ளவற்றிற்கும்
இடையில் இருப்பதைச் சுட்டிக் காட்ட ‘உ என்ற கட்டெழுத்து அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
(௭.கா.) உது. உவன்
சுட்டூத்திரிபு
வினா எழுத்துகள்
அம்மரம். இவ்வீடு ஆகியவை புறச்சுட்டுகள் என்பதை அறிவோம். இச்சொற்களை அந்த மரம். இந்த வீடு என்றும் வழங்குகிறோம். அ, இ ஆகிய சுட்டு எழுத்துகள் மாற்றம் பெற்று (திரிந்து) அந்த, இந்த என வழங்குகின்றன. இவ்வாறு, அஇ ஆகிய சுட்டு எழுத்துகள் அந்த இந்த எனத் திரித்து சுட்டுப் பொருளைத் தருவது சுட்டுத்திரிபு எனப்படும்.
வினா எழுத்துக்கள்
வினாப் பொருளைத் தரும் எழுத்துகளுக்கு வினா எழுத்துகள் என்று பெயர்.
சில வினா எழுத்துகள் சொல்லின் முதலில் இடம்பெறும். சில வினா எழுத்துகள் சொல்லின் இறுதியில் இடம்பெறும்.
ஏ. யா.ஆ.ஓ.ஏ ஆகிய ஐந்தும் வினா எழுத்துகள் ஆகும்.
- மொழியின் முதலில் வருபவை – ௭, யா (எங்கு. யாருக்கு)
- மொழியின் இறுதியில் வருபவை – ஆ.,ஓ (பேசலாமா,தெரியுமோ)
- மொழி முதலிலும் இறுதியிலும் வருபவை – ஏ (ஏன், நீதானே)
அகவினா
எது, யார், ஏன் இச்சொற்களில் உள்ள வினா எழுத்துகளை நீக்கினால் பிற எழுத்துக்களுக்குப் பொருள் இல்லை. இவ்வாறு வினா எழுத்துகள் சொல்லின் அகத்தே இருந்து வினாப் பொருளைத் தருவது அகவினா எனப்படும்.
புறவினா
அவனா? வருவானோ? இச்சொற்களில் உள்ள ஆ ஓ ஆகிய வினா எழுத்துக ளை நீக்கினாலும் பிற எழுத்துகள் பொருள் தரும்.
இவ்வாறு வினா எழுத்துகள் சொல்லின் புறத்தே வந்து வினாப் பொருளைத் தருவது புறவினா எனப்படும்.
நால்வகை சொற்கள்
தமிழில் சில எழுத்துகள் தனித்து நின்று பொருள் தரும். ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்தும் பொருள் தரும். இவ்வாறு பொருள் தருபவை சொல் எனப்படும்.
(௭.கா) ஈ, பூ, மை, கல், கடல். தங்கம்.
இலக்கண அடிப்படையில் சொற்கள் பெயர்ச்சொல். வினைச்சொல். இடைச்சொல். உரிச்சொல் என நான்கு வகைப்படும்.
பெயர்ச்சொல்
ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும்.
(எ.கா) பாரதி,பள்ளி. காலை. கண், நன்மை, ஓடுதல்.
வினைச்சொல்
வினை என்னும் சொல்லுக்குச் செயல் என்பது பொருள். செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.
(௭.கா.) வா.போ, எழுது, விளையாடு
இடைச்சொல்
பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வரும் சொல் இடைச்சொல் ஆகும். இது தனித்து இயங்காது.
(எ.கா) உம் – தந்தையும் தாயும்
மற்று – மற்றொருவர்
ஜ-திருக்குறளை
உரிச்சொல்
பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வருவது உரிச்சொல் ஆகும்
. (எ.கா) மா- மாநகரம்
சால – சாலச்சிறந்தது
பெயர்ச்சொல்
மரம். பள்ளிக்கூடம், சித்திரை. கிளை. இனிப்பு. பாடுதல் ஆகிய சொற்களைச் கவனியுங்கள். இவை அனைத்தும் பெயரைக் குறிக்கின்றன. இவ்வாறு ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும். பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவையாவன
- பொருட்பெயர்
- இடப்பெயர்
- காலப்பெயர்
- சினைப்பெயர்
- பண்புப்பெயர்
- தொழிற்பெயர்
பொருட்பெயர்
பொருளைக் குறிக்கும் பெயர் பொருட்பெயர் எனப்படும். இஃது உயிருள்ள பொருள்களையும் உயிரற்ற பொருள்களையும் குறிக்கும்
(எ.கா) மரம். செடி. மயில், பறவை, புத்தகம். நாற்காலி.
இடப்பெயர்
ஓர் இடத்தின் பெயரைக் குறிக்கும் பெயர் இடப்பெயர் எனப்படும்.
(எ.கா) சென்னை, பள்ளி. பூங்கா, தெரு.
காலப்பெயர்
காலத்தைக் குறிக்கும் பெயர் காலப்பெயர் எனப்படும்.
(எ.கா. நிமிடம். நாள். வாரம். சித்திரை. ஆண்டு.
சினைப்பெயர்
பொருளின் உறுப்பைக் குறிக்கும் பெயர் சினைப்பெயர் எனப்படும்.
(௭.கா.) கண், கை, இலை. கிளை.
பண்புப்பெயர்
பொருளின் பண்பைக் குறிக்கும் பெயர் பண்புப்பெயர் எனப்படும்.
(௭.கா.) வட்டம், சதுரம். செம்மை. நன்மை.
தொழிற்பெயர்
தொழிலைக் குறிக்கும் பெயர் தொழிற்பெயர் எனப்படும்.
(எ.கா) படித்தல், ஆடுதல். நடித்தல்.
அறுவகைப் பெயர்ச்சொற்களுக்கான சான்றுகளை தொடரில் அமைத்து எழுதுவோம்..
காவியா புத்தகம் படித்தாள் – பொருட்பெயர்
காவியா பள்ளிக்குச் சென்றாள் – இடப்பெயர்
காவியா மாலையில் விளையாடினாள் – காலப்பெயர்
காவியா தலை அசைத்தாள் – சினைப்பெயர்
காவியா இனிமையாகப் பேசுவாள் – பண்புப்பெயர்
காவியாவுக்கு நடனம் ஆடுதல் பிடிக்கும் – தொழிற்பெயர்.
இடுகுறிப்பெயர். காரணப்பெயர்
நம் முன்னோர் பெயர்ச்சொற்களை அவை வழங்கும் அடிப்படையில் இடுகுறி ப்பெயர். காரணப்பெயர் என இருவகைப்படுத்தினர்.
இடுகுறிப்பெயர்
நம் முன்னோர் சில பொருள்களுக்குக் காரணம் கருதாமல் பெயரிட்டு வழங்கினர். அவ்வாறு இட்டு வழங்கிய பெயர்கள் இடுகுறிப்பெயர்கள் ஆகும்.
(எ.கா) மண், மரம். காற்று
.இடுகுறிப் பொதுப்பெயர், இடுகுறிச் சிறப்புப்பெயர் என இடுகுறிப்பெயர் இரண்டு வகைப்படும்.
இடுகுறிப் பொதுப்பெயர்
ஓர் இடுகுறிப்பெயர் அத்தன்மை உடைய எல்லாப் பொருள்களையும் பொதுவாகக் குறிப்பது இடுகுறிப் பொதுப்பெயர் எனப்படும்
(எ.கா) மரம்.காடு.
இடுகுறிச் சிறப்புப்பெயர்
ஓர் இடுகுறிப்பெயர் குறிப்பாக ஒரு பொருளைமட்டும் குறிப்பது இடுகுறிச் சிறப்புப்பெயர் எனப்படும்.
(எ.கா) மா, கருவேலங்காடு.
காரணப்பெயர்
நம் முன்னோர் சில பொருள்களுக்குக் காரணம் கருதிப் பெயரிட்டனர். இவ்வாறு காரணத்தோடு ஒரு பொருளுக்கு வழங்கும் பெயர் காரணப்பெயர் எனப்படும்.
(எ.கா) நாற்காலி, கரும்பலகை காரணப் பொதுப்பெயர், காரணச் சிறப்புப்பெயர் எனக் காரணப் பெயர் இரு வகைப்படும்.
காரணப் பொதுப்பெயர்
காரணப்பெயர் குறிப்பிட்ட காரணமுடைய எல்லாப் பொருள்களையும் பொதுவாகக் குறித்தால் அது, காரணப்பொதுப்பெயர் எனப்படும். (௭.கா) பறவை, அணி
காரணச் சிறப்புப்பெயர்
குறிப்பிட்ட காரணமுடைய எல்லாப் பொருள்களுன் ஒன்றை மட்டும் சி றப்பாகக் குறிப்பது காரணச்சிறப்புப்பெயர் ஆகும். (எ.கா) வளையல், மரங்கொத்தி
அணி இலக்கணம்
எதிலும் அழகைக் காண விரும்புவது மனிதர்களின் இயல்பு. நாம் நம்மை அணிகலன்களால் அழகுபடுத்திக் கொள்கிறோம். அதுபோல் கவிஞர்கள் தங்கள் கற்பனைத் திறத்தாலும் புலமையாலும் தாங்கள் இயற்றும் பாடல்களில் அழகைச் சேர்க்கின்றனர். இதனை வினக்குவது அணி இலக்கணம் ஆகும்.
அணி என்பதற்கு அழகு என்பது பொருள். கவிஞர் தமது கருத்தைச் சுவையோடு சொல்வதற்கு உதவுவது அணி. மருந்தைத் தேனில் கலந்து கொடுப்பது போல் கருத்துகளைச் சுவைபடக் கூறுவது அணியாகும்.
இயல்பு நவிற்சி அணி
ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது இயல்பு நவிற்சி அணி ஆகும். இதனைத் தன்மை நவிற்சி அணி என்றும் கூறுவர்.
(எ.கா)
தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு – அங்கே
துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி
அம்மா என்குது வெள்ளைப்பசு – உடன்
அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி
நாவால் நக்குது வெள்ளைப்பச – பாலை
நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி
– கவிமணி தேசிக விநாயகனார்
இப்பாடலில் கவிஞர் பசுவும் கன்றும் ஒன்றுடன் ஒன்று கொஞ்சி விளையாடுவதை இயல்பாக எடுத்துக் கூறியுள்ளார். எனவே இது இயல்பு நவிற்சி அணி ஆகும்.
உயர்வு நவிற்சி அணி ஆகும்.
ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது உயர்வு நவிற்சி அணி ஆகும்.
(எ.கா)
குளிந்நீரில் குளித்தால்
கூதல் அடிக்குமென்ற
வெந்நீரில் குளித்தால்
மேலே கருக்குமென்று
ஆகாச கங்கை
அனல் உறைக்குமென்ற
பாதாள கங்கையைப்
பாடி அழைத்தார் உன் தாத்தா
என்று ஒரு தாய் தாலாட்டுப் பாடுகிறாள். இதில் உயர்வு நவிற்சி அணி அமைந்துள்ளது.
🔔 மேலும் வேலைவாய்ப்பு & தேர்வு அப்டேட்களுக்கு Join பண்ணுங்க:
👉 Whatsapp – Join here
👉 Telegram – Join here
👉 Instagram – Follow here
❤️ நன்கொடை வழங்க:
📌 நம்முடைய சேவையை விரிவடைய தாங்கள் ஆதரிக்க விரும்பினால், நன்கொடை வழங்க இந்த லிங்கை பயன்படுத்துங்கள் –
👉 Donate here