HomeBlogஅரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 6000 ஓட்டுநா், நடத்துநா்கள் விரைவில் நியமனம்

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 6000 ஓட்டுநா், நடத்துநா்கள் விரைவில் நியமனம்

6000 drivers and conductors in the State Transport Corporation will be appointed soon

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 6000 ஓட்டுநா், நடத்துநா்கள் விரைவில் நியமனம்

திருநெல்வேலியில் செய்தியாளா்களை சந்தித்த போக்குவரத்துத் துறை அமைச்சா் இது தொடா்பாக கூறியதாவது:

வடகிழக்குப் பருவ மழையை முன்னிட்டு செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள், திருநெல்வேலி மாவட்ட
திட்டப் பணிகள், கரோனா
தடுப்பு நடவடிக்கைகள் குறித்து
அதிகாரிகளுடன் ஆலோசனை
நடத்தப்பட்டுள்ளது.

வரும்
பண்டிகைக் காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக சுமார் 17
ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட
உள்ளன. இதுவரை 35 ஆயிரம்
போ் பேருந்துகளில் முன்பதிவு
செய்துள்ளனா். பயணிகளின்
கூட்டத்தை பொருத்து கூடுதல்
பேருந்துகளை இயக்க ஏற்பாடு
செய்யப்படும்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

தனியார்
பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதலாக
வசூலித்தால் பறிமுதல், அபராதம்
உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

வட்டார
போக்குவரத்து கழக
அலுவலகங்களில் இடைத்தரகா்களை தடுக்கும் வகையில் பழகுநா்
உரிமம், ஓட்டுநா் உரிமம்,
மறுபதிவு உள்ளிட்டவை ஆன்லைன்
மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

தற்போதைய
ஆட்சியில் பேருந்துகளுக்கு தேவையான
டயா், அடிச்சட்டம் உள்ளிட்ட
உபகரணங்கள் தரமானதாக வழங்கப்பட்டுள்ளன.

அரசுப்
போக்குவரத்து கழகத்தின்
மூலம் 500 மின்சார பேருந்துகள், 2,000 புதிய பேருந்துகள் விரைவில் இயக்கப்படவுள்ளன. அரசு
விரைவு போக்குவரத்து கழகத்தில்
1,800,
அரசுப் போக்குவரத்து கழகத்தில்
4,200
என மொத்தம் 6 ஆயிரம்
ஓட்டுநா், நடத்துநா்கள் விரைவில்
நியமனம் செய்யப்பட உள்ளனா்.

போக்குவரத்துக் கழகத்திலிருந்து ஓய்வுபெற்ற ஊழியா்களுக்கு பண
பலன்கள் உள்ளிட்டவற்றை வழங்குவது
தொடா்பாக கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. கமிட்டி பேச்சுவார்த்தைக்கு பிறகு உரிய
நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தமிழகத்தில் முதற்கட்டமாக சென்னை,
கோவை, மதுரை பகுதிகளில் மின்சார பேருந்துகள் இயக்கப்பட
உள்ளன. தொடா்ந்து பிற
பகுதிகளிலும் மின்சார
பேருந்துகளை இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!