திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சார்பில் இணையவழி கைவினைப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெறுகிறது.
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம், என்பிஎன்கே கலை பண்பாடு மன்றம் சார்பில் இணையம் வழியில் இலவச கைவினைப் பயிற்சி ஒவ்வொரு வியாழக்கிழமையும் நடைபெற்று வருகிறது. அதன்படி, வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு மைதா மாவில் அழகிய உருவங்கள் தயாரிக்கும் பயிற்சி நடைபெற உள்ளது.
தேவையான பொருட்கள்: மைதா அரை கிலோ (பூரிக்கு மாவு பிசைவது போன்ற பதத்தில் தண்ணீரில் கொஞ்சம் பெவிகால் கலந்து பிசைந்து நிகழ்ச்சிக்கு இரண்டு மணி நேரம் முன்பே துணி போட்டு மூடி வைத்து விட வேண்டும்), வாட்டர் கலர் அல்லது போஸ்டர் கலர். இப்பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் Zoom செயலி எண் : 8740995990, கடவு சொல்: 333543 என்கிற தளத்தில் இணைய வேண்டும். இப்பயிற்சியில் சிறியவர் முதல் பெரியவர் வரை விருப்பம் உள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 9444973246 என்கிற கட்செவி அஞ்சல் எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


