Home News வேலைவாய்ப்பு செய்திகள் 5066 பேருக்கு ரயில்வேயில் அப்ரண்டிஸ் பயிற்சி, ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

5066 பேருக்கு ரயில்வேயில் அப்ரண்டிஸ் பயிற்சி, ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

0

மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும், மேற்கு ரயில்வேயில் (Western Railway)5,066 பயிற்சிப் பணியிடங்கள் (apprentice posts) அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆர்வமும் தகுதியும் உள்ள ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, உதவித்தொகையுடன் ஒரு வருட அப்ரண்டிஸ் பயிற்சி வழங்கப்படும்.

பயிற்சிப் பணியிடங்கள் குறித்த விவரங்கள்:

பயிற்சியின் பெயர்: Trade Apprentice

மொத்த காலியிடங்கள்: 5066 (விவரங்களை கீழே உள்ள அட்டவணையில் காண்க)

அட்டவணை: Trade வாரியாக பயிற்சிப் பணியிடங்கள்
பயிற்சி அளிக்கப்படும் டிரேடுகள்:

Electrician/ Fitter/ Plumber/ Painter/Welder (Gas & Electric)/Diesel Mechanic/ Machinist/ Motor Mechanic/ Electronic Mechanic/ PASAA/Refrigeration and AC Mechanic/ Drafts Man (Civil) / Pipe Fitter / Stenography / Forger and Heat Treater.

கல்வித்தகுதி :

10-ம் வகுப்பு தேர்ச்சிபெற்றிருப்பதுடன் பயிற்சி அளிக்கப்படும் தொழிற் பிரிவில் ITI படிப்பில் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

ITI படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் அப்ரண்டிஸ் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

Apprentice Training in Western Railway

பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மத்திய ரயில்வே விதிமுறைப்படி உதவித்தொகையுடன் ஒரு வருடம் பயிற்சியளிக்கப்படும். கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்கள் ஏற்கெனவே பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள் இந்த அப்ரண்டிஸ் பயிற்சிக்கு விண்ணப்பிக்க வேண்டாம்.

வயது வரம்பு: 22.10.2024 தேதி அன்று கணக்கின்படி, 15 வயது முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST/PWD பிரிவினாகளுக்கு ரயில்வே விதிமுறைப்படி வயது வரம்பில் சலுகை உண்டு.

அப்ரண்டிஸ் பயிற்சி (Apprentice Training)
விண்ணப்பக் கட்டணம்:

ரூ.100. விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும்.

SC/ST/PWD பிரிவினர்கள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. பொது / OBC பிரிவினர்கள் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணபிக்க கடைசி நாள்: 22.10.2024

விண்ணப்பிக்கும் முறை:

www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளத்தில் ITI படிப்பை பதிவு செய்ய வேண்டும், பின்னர் www.rrc wr.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு Notification No: RRC/WR/03/2024 இந்த லிங்கை கிளிக் செய்து அறிக்கையை முழுவதும் கவனமாக படித்து விண்ணப்பம் செய்யுங்கள்.

எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version