கர்ப்பிணி பெண்மணிகளுக்காக பிரதம மந்திரி மாத்ரு வந்தனா திட்டத்தை மோடி அரசாங்கம் துவங்கியுள்ளது. இதில் கர்ப்பிணி பெண்ணுக்கு அரசு ரூ.5000-ஐ முழுமையாக வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பிறக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்கவும், எவ்வித நோய் தாக்காமல் இருக்கவும் பெண்களுக்கு பணம் வழங்கப்படுகிறது.
📚 3500+ PDF Files Updated in Our Premium Group – Join Now to Download Directly 💎
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
திட்டத்தின் கீழ் பயன்பெற கர்ப்பிணிப் பெண்களுக்கு குறைந்தபட்சமாக 19 வயது இருத்தல் வேண்டும். ஆஃப்லைன் வாயிலாக மட்டுமே இத்திட்டத்தில் விண்ணப்பிக்க முடியும்.
அரசாங்கம் ரூ.5000-ஐ 3 தவணைகளில் கொடுக்கும். அதன்படி, முதல் தவணையாக 1000 ரூபாயும், 2-ஆம் தவணையாக 2000 ரூபாயும், 3-ஆம் தவணையாக 2000 ரூபாயும் வழங்கப்படும்.
இப்பணம் நேரடியாக கர்ப்பிணி பெண்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். மேலும் விபரங்களை தெரிந்துகொள்ள https://wcd.nic.in/schemes/pradhan-mantri-matru-vandana-yojana எனும் இந்த திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடர்புக்கொள்ளலாம்.


