திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் தமிழக காவல்துறையின் 62ம் ஆண்டு மண்டலங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் இன்று துவங்கியது. புறா, பலூன்களை பறக்க விட்டு ஒலிம்பிக் ஜோதியை பெற்று கொண்டு போட்டியை துவக்கி வைத்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பேசியதாவது:
கடந்தாண்டு 10,000 பேர் காவலர்களாக தேர்வு செய்யப்பட்டனர். மேலும் 3,200 போலீசார் தேர்வு செய்யப்பட உள்ளனர். 2021ம் ஆண்டு 1,000 எஸ்ஐக்கள் தேர்வு செய்யப்பட்டனர். கடந்த 1ம் தேதி 444 எஸ்ஐக்களுக்கு பயிற்சி துவங்கியுள்ளது.
இன்னும் 500 எஸ்ஐக்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதில் 10 சதவீதம் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு காவல்துறைக்கு விளையாட்டில் இந்திய அளவில் பெரிய பங்கு உள்ளது. 1,950, 1960ம் ஆண்டுகளில் ரோப் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய அளவில் தமிழக காவல்துறை பங்கேற்றது. 2009ல் மாஸ்கோ ஒலிம்பிக்கில் திருச்சியை சேர்ந்த ேபாலீஸ்காரர் சுப்பிரமணி, 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று பதக்கம் வென்றார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் தமிழ்நாடு காவல்துறையை சேர்ந்த நாகநாதன், 100 மீட்டர் ரிலே ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றார். சென்னையில் மாநிலங்களுக்கு இடையே நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் தமிழ்நாடு முதலிடம் பிடித்தது. மத்திய பிரதேசத்தில் கடந்த பிப்ரவரியில் நடந்த புலன் விசாரணை, கைரேகை தொடர்பான போட்டியில் தமிழ்நாடு முதலிடம் பிடித்தது என்றார். பின்னர் அவர் அளித்தபேட்டி: தமிழ்நாடு மிக அமைதியாக உள்ளது.
சட்டம், ஒழுங்கு சரியாக உள்ளது. ஜாதி, மத மோதல் இல்லாமல், சாராயம், கொலை, கொள்ளை போன்றவற்றில் இறப்புகள் எதுவும் இல்லாமல் அமைதியாக இருப்பதற்கு தமிழ்நாட்டில் பணியாற்றக்கூடிய 1.34 லட்சம் போலீசார் தான் காரணம். நாளுக்கு நாள் தொழிற்சாலை, குடியிருப்புகள் அதிகரித்து வருகிறது. எனவே தேவையின் அடிப்படையில் புதிய காவல் நிலையங்கள் உருவாக்கப்படும் என்றார்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


