தொழிற்கல்வி மாணவர்களுக்கு 50 ரூ ஆயிரம்
உதவித்தொகை
தேனி
மாவட்டத்தில் தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கு அரசு வழங்கும் ரூ.50
ஆயிரம் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
மருத்துவம், வேளாண்மை, வழக்கறிஞர், இன்ஜினியரிங் போன்ற தொழில் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டில் பயிலும்
200 மாணவர்களுக்கு ஒரே
தவணையாக ரூ.50 ஆயிரம்
உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதற்கு
குடும்ப வருமானம் ஆண்டுக்கு
ரூ.72 ஆயிரத்திற்குள் இருக்க
வேண்டும்.அரசு ஒதுக்கீட்டில் கல்லுாரியில் சேர்ந்த
சான்று, வருமானச் சான்றுடன்
கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர்
முரளீதரன் தெரிவித்துள்ளார்.