தமிழ் இலக்கியத்தில் காப்பியங்கள் (Epics) மிகவும் முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. குறிப்பாக TNPSC, TRB, TET போன்ற தேர்வுகளில், காப்பியங்கள் தொடர்பான கேள்விகள் அடிக்கடி கேட்கப்படுகின்றன. இதை கருத்தில் கொண்டு, 50க்கும் மேற்பட்ட காப்பியங்களை உள்ளடக்கிய முக்கிய வினா விடைகள் தொகுப்பு PDF இங்கு வழங்கப்பட்டுள்ளது.
👉 நமது இணையதளத்தில் நீங்கள் இலவசமாக படித்துக்கொள்ளலாம். PDF தேவை என்றால் கீழே உள்ள லிங்க்-ல் Download செய்து கொள்ளலாம்.
📘 அணைத்து PDF தொகுப்புகளும் இணையதளத்தில் இலவசமாக கிடைத்தது. அதை உங்களுக்கு நான் பகிர்கிறேன்.
📩 உங்களுக்கு ஏதும் ஆட்சியப்பனை இருந்தால், தயவுசெய்து மெயில் பண்ணவும்.
👉 இந்தக் கேள்விகள் மூலம், சங்க இலக்கியம், சித்தர் பாடல்கள் மற்றும் காப்பிய இலக்கியங்களில் இருந்து அடிக்கடி கேட்கப்படும் முக்கியமான விடைகளை அறிந்து கொள்ளலாம். இது உங்கள் தமிழ்த் தேர்வுத் தயாரிப்பில் பெரும் உதவியாக இருக்கும்.
காப்பியங்கள்
1) ‘திகிரி’ என்பதன் பொருள்
அ) மகரந்தம்
ஆ) ஆணைச் சக்கரம்
இ) இமயமலை
ஈ) தண்டை
2) பொருத்துக
1) கொங்கு – இமயமலை
2) மேரு – மகரந்தம்
3) நாமநீர் – கருணை
4) அளி – அச்சம்தரும் கடல்
அ) 1234
ஆ) 2143
இ) 3124
ஈ) 4213
3) ஆத்தி மலர் மாலையை அணிந்த மன்னன்
அ) சேரன்
ஆ) சோழன்
இ) பாண்டியன்
ஈ) பல்லவன்
4) கீழ்க்காணும் கூற்றினை ஆராய்க
1) “திங்களைப் போற்றதும் திங்களைப் போற்றதும் கொங்கு அலர்தார்ச் சென்னி குளிர்” – என்ற பாடல் வரிகள் சிலப்பதிகாரம் என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.
2) தமிழின் முதல் காப்பியம் சிலப்பதிகாரம்
3) முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்று சிலப்பதிகாரம் போற்றப்படுகிறது;
4) இளங்கோவடிகளட சோழமன்னர் மரபைச் சேர்ந்தவர்
அ) 1 மட்டும் தவறு
ஆ) 2 மட்டும் தவறு
இ) 3 மட்டும் தவறு
ஈ) 4 மட்டும் தவறு
5) கழுத்தில் சூடுவது _________
அ) தார்
ஆ) கணையாழி
இ) தண்டை
ஈ) மேகலை
6) “தீர்வனவும் தீராத் திறத்தனவும் செய்ம்மருந்தின் ஊர்வனவும் போலாதும் உவசமத்தின் உய்ப்பனவும்” – என்ற அடிகள் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
அ) சிலப்பதிகாரம்
ஆ) மணிமேகலை
இ) நீலகேசி
ஈ) சீவகசிந்தாமணி
7) ‘உவசமம்’ என்ற சொல்லின் பொருள்
அ) நற்காட்சி
ஆ) நன்னம்பிக்கை
இ) நல்லறிவு
ஈ) அடங்கிஇருத்தல்
8) ‘ஓர்தல்’ என்ற சொல்லின் பொருள்
அ) நற்காட்சி
ஆ) நன்னம்பிக்கை
இ) நல்லறிவு
ஈ) அடங்கிஇருத்தல்
9) பிறவித் துன்பங்களைத் தீர்க்கும் மருந்துகளுள் அடங்காததைத் தேர்ந்தெடு
அ) நல்லறிவு
ஆ) நன்னடத்தை
இ) நற்காட்சி
ஈ) நல்லொழுக்கம்
10) பொருத்துக
1) தீர்வன – பிரிவுகளாக
2) பேர்தற்கு – நீங்குபவை
3) கூற்றவா – அகற்றுவதற்கு
4) தெளிவு – நற்காட்சி
அ) 2314
ஆ) 1423
இ) 3124
ஈ) 4213
11) பின்வரும் கூற்றுகளை ஆராய்க
1) நீலகேசி ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று
2) சமண சமயக் கருத்துகளை வாதங்களின் அடிப்படையில் நீலகேசி விளங்குகிறது.
3) நீலகேசி கடவுள் வாழ்த்து நீங்கலாக 11 சருக்கங்களைக் கொண்டது
4) நீலகேசியின் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை
அ) 1,2,3 சரி
ஆ)1,3,4 சரி
இ) 1,2,4 சரி
ஈ) 2,3,4 சரி
12) நீலகேசி கூறும் நோயின் வகைகள் _________
அ) 2
ஆ) 3
இ) 4
ஈ) 5
13) ‘பாடைமாக்கள்’ – என்ற சொல்லின் பொருள்
அ) சமயத் தத்துவவாதிகள்
ஆ) பல மொழிபேசும் மக்கள்
இ) சமயவாதிகள்
ஈ) படைவீரர்கள்
14) ‘கலாம்’ – என்ற சொல்லின் பொருள்
அ) மழை
ஆ) போர்
இ) பகை
ஈ) குற்றம்
15) பொருத்துக
1) குழீஇ – மன்றம்
2) தோம் – குற்றம்
3) கோட்டி – ஒன்றுகூடி
4) வசி – மழை
அ) 1432
ஆ) 3214
இ) 2143
ஈ) 4213
16) பொருத்துக
1) செற்றம் – சினம்
2) பொலம் – திண்ணை
3) வேதிகை – பொன்
4) தாமம் – மாலை
அ) 1432
ஆ) 3214
இ) 1324
ஈ) 4231
17) பின்வரும் கூற்றுகளை ஆராய்க
1) கதலிகைக் கொடி என்பது சிறு சிறு கொடியாகப் பல கொடிகள் கட்டியது.
2) காழூன்று கொடி என்பது துணியாலான கொடி
3) விலோதம் என்பது கொம்புகளில் கட்டும் கொடி
அ) 1 மட்டும் சரி
ஆ) 2 மட்டும் சரி
இ) 3 மட்டும் சரி
ஈ) அனைத்தும் சரி
18) ஐம்பெருங்குழுவில் அடங்காததைத் தேர்ந்தெடு
அ) அடைச்சர்
ஆ) சடங்கு செய்விப்போர்
இ) படைத் தலைவன்
ஈ) நகரமாந்தர்
19) பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம்
அ) சிலப்பதிகாரம்
ஆ) சீவகசிந்தாமணி
இ) மணிமேகலை
ஈ) வளையாபதி
20) பின்வருவனவற்றுள் தவறான கூற்றைத் தேர்ந்தெடு:-
அ) மணிமேகலை பௌத்த சமயச் சார்புடையது.
ஆ) தண்டமிழ் ஆசான், சாத்தன், நன்னூற்புலவன் என்று இளங்கோவடிகள் சாத்தனாரைப்; பாராட்டியுள்ளார்
இ) கதை அடிப்படையில் மணிமேகலையை சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியென கூறுவர்.
ஈ) முப்பது காதைகளாக அமைந்துள்ள மணிமேகலையின் இறுதி காதை விழாவறை காதை
21) “அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின் மறவாது இது கேள்” – என்ற அடிகள் இடம் பெற்றுள்ள நூல்
அ) சிலப்பதிகாரம்
ஆ) மணிமேகலை
இ) சீவகசிந்தாமணி
ஈ) வளையாபதி
22) இன்பங்களைத் துறந்து துறவு பூண வேண்டும் என்பது எந்த காப்பியத்தின் மையக்கருத்து
அ) சிலப்பதிகாரம்
ஆ) மணிமேகலை
இ) சீவகசிந்தாமணி
ஈ) வளையாபதி
23) பொருத்துக
1) தெங்கு – புகழ்
2) இசை – தேங்காய்
3) நெற்றி – வயல்
4) வருக்கை – மணம்
அ) 1432
ஆ) 2134
இ) 4132
ஈ) 3124
24) பொருத்துக
1) மருப்பு – கொம்பு
2) வெறி – சிறந்த
3) கழனி – வயல்
4) செறி – மணம்
அ) 1432
ஆ) 2134
இ) 4132
ஈ) 3124
25) ‘அடிசில்’ – என்ற சொல்லின் பொருள்
அ) சோறு
ஆ) மலை
இ) பாய்ந்து
ஈ) ஓட
26) கீழ்க்காணும் கூற்றினை ஆராய்க:
1) சீவகசிந்தாமணியை இயற்றியவர் திருத்தக்கதேவர்.
2) திருத்தக்க தேவரின் காலம் எட்டாம் நூற்றாண்டு.
3) திருத்தக்க தேவர் சீவக சிந்தாமணி பாடுவதற்கு முன்னோட்டமாக ‘நரிவிருத்தம்’ என்னும் நூலை இயற்றினார்.
4) சீவக சிந்தாமணி காதை எனும் உட்பிரிவுகளைக் கொண்டது.
அ) 1ம் 2ம் சரி
ஆ) 1ம் 3ம் சரி
இ) 2ம் 3ம் சரி
ஈ) 3ம் 4ம் சரி
27) விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் _________
அ) சிலப்பதிகாரம்
ஆ) மணிமேகலை
இ) சீவகசிந்தாமணி
ஈ) வளையாபதி
28) “ஆக்குவது யாதெனில் அறத்தை ஆக்குக போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக” – என்ற பாடலடிகள் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது
அ) யசோதர காவியம்
ஆ) நாககுமார காவியம்
இ) சீவகசிந்தாமணி
ஈ) மணிமேகலை
29) யசோதர காவியம் நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை _________
அ) 320
ஆ) 330
இ) 340
ஈ) அ ரூ ஆ இரண்டும்
30) பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1) ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று யசோதர காவியம்.
2) யசோதர காவியம் வடமொழியிலிருந்து தமிழில் தழுவி எழுதப் பெற்றதாகும்.
3) யசோதர காவியத்தின் ஆசிரியர் பெயர் அறிய முடியவில்லை.
4) யசோதர காவியம் மூன்று சருக்கங்களைக் கொண்டது.
அ) 1 மட்டும் சரி
ஆ) 1, 2ம் சரி
இ) 1,2,3 சரி
ஈ) அனைத்தும் சரி
31) “யசோதரன்” என்னும் அவந்தி நாட்டு மன்னனின் வரலாற்றைக் கூறும் நூல்
அ) யசோதர காவியம்
ஆ) நாககுமார காவியம்
இ) ராவண காவியம்
ஈ) சீவக சிந்தாமணி
32) “தூசும் துகிரும் ஆரமும் அகிலும் மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்” – என்ற அடிகள் இடம் பெற்றுள்ள நூல்
அ) சிலப்பதிகாரம்
ஆ) மணிமேகலை
இ) சீவகசிந்தாமணி
ஈ) நீலகேசி
33) ‘காருகர்’ என்ற சொல்லின் பொருள்
அ) ஓட்டுநர்
ஆ) நெய்பவர்
இ) துணி துவைப்பவர்
ஈ) ஓவியர்
34) ‘வெறுக்கை’ என்ற சொல்லின் பொருள்
அ) சினம்
ஆ) மாலை
இ) சாமரை
ஈ) செல்வம்
35) பொருத்துக:-
1) தூசு – பவளம்
2) துகிர் – பட்டு
3) நொடை – துணி
4) கிழி – விலை
அ) 2143
ஆ) 1234
இ) 3412
ஈ) 4213
36) பொருத்துக:-
1) பாசவர் – ஓவியர்
2) ஓசுநர் – வெற்றிலை விற்போர்
3) மண்ணுள் – எண்ணெய் விற்போர்
அ) 123
ஆ) 132
இ) 231
ஈ) 312
37) பின்வரும் கூற்றுகளை ஆராய்க:-
1) ;சிந்தா மணியாம் சிலப்பதிகாரம் படைத்தான் கந்தா மணிமேகலை புனைந்தான்’- திருத்தணிகையுலா.
2) காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து கண்ணகியும் கோவலனும் உறையூர் மற்றும் திருவரங்கம் வழியாகக் கொடும்பாளுர் என்னும் இடத்தை அடைந்தனர்.
3) மதுரையில் கணவனை இழந்த கண்ணகி, மதுரையிலிருந்து வைகையின் தென்கரை வழியாக வேங்கைக்கானல் என்னுமிடத்தை அடைந்தாள்;
அ) 1 மட்டும் சரி
ஆ) 2 மட்டும் சரி
இ) 3 மட்டும் சரி
ஈ) அனைத்தும் சரி
38) பின்வரும் கூற்றினை ஆராய்க
1) கோவலன் கண்ணகி கதையைக் கூறி ‘அடிகள் நீரே அருளுக’ என்று இளங்கோவடிகள் கூறினார்.
2) உரைப்பாட்டு மடை என்பது சிலப்பதிகாரத்தில் வரும் தமிழ்நடை.
அ) 1 மட்டும் சரி
ஆ) 2 மட்டும் சரி
இ) இரண்டும் சரி
ஈ) இரண்டும் தவறு
39) பொருத்துக
1) மாழ்குதல் – அறிவு
2) சேதனை – பருத்தல்
3) அரும்புதல் – மயங்குதல்
4) ஆக்கம்; – உயிருடைத்து
அ) 1324
ஆ) 3124
இ) 2413
ஈ) 4312
40) தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகிற்கு வெளிப்படுத்தியவர்
அ) ஜகதீச சந்திர போஸ்
ஆ) பியரி கேசன்டி
இ) மைக்கேல் பாரடே
ஈ) கலிலியோ கலிலி
41) நீலகேசியின் உரையாசிரியர்
அ) தியாகராய தேசிகர்
ஆ) சமய திவாகர வாமன முனிவர்
இ) அரிமதி தென்னகன்
ஈ) கோபால கிருஷ்ணன்
42) கீழ்க்கண்ட கூற்றினை ஆராய்க:
1) நீலகேசி விருத்தப்பாவால் ஆனது.
2) சமயத் தலைவர் பலரிடம் வாதம் செய்து சமண நெறியை நிலைநாட்டுவதாக நீலகேசி அமைந்துள்ளது.
3) நீலகேசி கடவுள் வாழ்த்து உள்பட 11 பகுதிகளிலும் 294 பாடல்கள் உள்ளன.
4) நீலகேசி தமிழில் எழுதப்பட்ட முதலாவது தருக்க நூல் ஆகும்.
அ) 1ம் 2ம் சரி
ஆ) 2ம் 3ம் சரி
இ) 1ம் 2ம் 4ம் சரி
ஈ) 2ம் 3ம் 4ம் சரி
43) “குழல்வழி நின்றது யாழே, யாழ்வழித் தண்ணுமை நின்றது தகவே” – என்ற அடிகள் இடம் பெற்றுள்ள நூல்
அ) நீலகேசி
ஆ) யசோதர காவியம்
இ) நாககுமார காவியம்
ஈ) சிலப்பதிகாரம்
44) ‘கழை’ – என்ற சொல்லின் பொருள்
அ) மூங்கில்
ஆ) வெளிச்சம்
இ) நிழல்
ஈ) மேகம்
45) ‘நித்திலம்’ என்ற சொல்லின் பொருள்
அ) மரம்
ஆ) முத்து
இ) இசை
ஈ) பந்தல்
46) பொருத்துக
1) கண் – ஐம்பூதங்கள்
2) பூதர் – கணு
3) மண்ணிய – கழுவிய
4) ஓடை – முக படாம்
அ) 1324
ஆ) 2143
இ) 2134
ஈ) 4213
47) ஒரு வகை எடை அளவைக் குறிக்கும் சொல்
அ) ஆமந்திரிகை
ஆ) பரசினர்
இ) கழஞ்சு
ஈ) வாரம்
48) கீழ்க்காணும் கூற்றினை ஆராய்க
1) 21 நரம்புகளைக் கொண்டது பேரியாழ்
2) 7 நரம்புகளைக் கொண்டது மகரயாழ்
3) 16 நரம்புகளைக் கொண்டது சகோடயாழ்
4) 17 நரம்புகளைக் கொண்டது செங்கோட்டியாழ்
அ) 1ம் 2ம் சரி
ஆ) 1ம் 3ம் சரி
இ) 2ம் 3ம் சரி
ஈ) 2ம் 4ம் சரி
49) இரட்டைக் காப்பியங்கள் என வழங்கும் நூல்கள் யாவை?
அ) சிலப்பதிகாரம், மணிமேகலை
ஆ) சீவகசிந்தாமணி, மணிமேகலை
இ) குண்டலகேசி, நீலகேசி
ஈ) குண்டலகேசி, சூளாமணி
50) அல்லுற்று ஆற்றாது அழுவாளைக் கண்டு ஏங்கி மல்லல் மதுரையார் எல்லாருத் தாம் மயங்கி – இப்பாடலடிகள் இடம் பெற்ற நூல் எது?
அ) மணிமேகலை
ஆ) குண்டலகேசி
இ) சிலப்பதிகாரம்
ஈ) வளையாபதி
51) கூற்று 1: நீலகேசி ஒரு சமணசமயக் காப்பியம்
கூற்று 2: குண்டலகேசி என்னும் நூலுக்கு மறுப்பாக எழுதப்பட்டது நீலகேசி
அ) கூற்று 1 மட்டும் சரி
ஆ) கூற்று இரண்டும் சரி
இ) கூற்று இரண்டும் சரி
ஈ) கூற்று இரண்டும் தவறு
52) சிலப்பதிகாரத்திற்கு வழங்கும் சிறப்புப் பெயர்களில் ஒன்று
அ) கண்ணகி காதை
ஆ) சிலப்பதிகாரம்
இ) உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்
ஈ) இராமகாதை
53) நீலகேசி எப்பாவால் எழுதப்பட்டது?
அ) வஞ்சிப்பா
ஆ) விருத்தப்பா
இ) வெண்பா
ஈ) கலிப்பா
54) எள்ளாறு சிறப்பின் இடையவர் வியப்பப் புள்ளுறு புண்கண் தீர்த்தோன் அன்றியும் – இவ்வரிகள் இடம் பெறும் நூல்
அ) சிலப்பதிகாரம்
ஆ) மணிமேகலை
இ) கம்பராமாயணம்
ஈ) வில்லிபாரதம்
55) 1) சிலம்பு – கண்ணகி
2) மணிமேகலை – மாதவி
3)கம்பராமாயணம் – சீதை
4) சூளாமணி – ____ நிரப்புக
அ) வளையாபதி
ஆ) நீலகேசி
இ) கேமசரி
ஈ) சுயம்பிரபை
56) பொருத்துக
1) கவுந்தியடிகள் – ஆயர்குல மூதாட்டி
2) மாதரி – மாநாய்கனின் மகள்
3) மாதவி – சமணத்துறவி
4) கண்ணகி – ஆடலரசி
அ) 3142
ஆ) 2413
இ) 3421
ஈ) 1324
57) யாருடைய அறிவுரைப்படி ஆதிரையிடம் மணிமேகலை முதன் முதலில் பிச்சையேற்றாள்?
அ) கவுந்தியடிகள்
ஆ) மாதவி
இ) அறவணடிகள்
ஈ) கண்ணகி
58) ‘தண்டமிழ் ஆசான், சாத்தன், நன்னூற் புலவன்’ என்று மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் சாத்தனாரைப் பாராட்டியவர்
அ) கம்பர்
ஆ) இளங்கோவடிகள்
இ) திருத்தக்கதேவர்
ஈ) காரியாசன்
59) ஐஞ்சிறு காப்பியங்கள் – என்னும் வகைப்பாட்டில் இல்லாத நூல் எது?
அ) நாக குமார காவியம்
ஆ) குண்டலகேசி
இ) நீலகேசி
ஈ) சூளாமணி
🔔 மேலும் வேலைவாய்ப்பு & குறிப்புகள் அப்டேட்களுக்கு:
👉 Join WhatsApp Group: https://www.tamilmixereducation.com/tamil-mixer-education-whats-app-group/
👉 Join Telegram: https://t.me/jobs_and_notes
👉 Follow on Instagram: https://www.instagram.com/tamil_mixer_education/
❤️ நன்கொடை வழங்க விரும்பினால்:
👉 https://superprofile.bio/vp/donate-us-395