தமிழகத்தில் 4900 செவிலியர்கள் விரைவில் பணி நியமனம்
கொரோனா
தொற்றின் பரவல் தமிழகத்தில் அதிகரித்து வந்த போது
மருத்துவமனைகளில் பணியாளர்களுக்கான பற்றாக்குறை அதிகரித்தது. இதனை தவிர்க்கும் பொருட்டு
செவிலியர் பயிற்சி முடித்தவர்களை அரசு ஒப்பந்த அடிப்படையில் பணியில் நியமித்தது. இவ்வாறு
நியமனம் செய்யப்பட்ட செவிலியரல்கள் சமீபத்தில் பணி நிரந்தரம்
செய்ய அரசுக்கு கோரிக்கை
வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், சென்னையில் நேற்று
நிகழ்ச்சியில் கலந்து
கொண்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.
அப்போது
கடந்த ஆட்சியில் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி முறையாக
போடப்படாமல், அதிகம் வீணடித்தவர்களின் பட்டியலில் தமிழகம்
முதலிடத்தில் இருந்தது.
ஆனால் தற்போது தி.மு.க
ஆட்சி பொறுப்பேற்ற பின்,
5.29 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. அதில் 18 வயதுக்கு
மேற்பட்டோரில் 67 சதவீதம்
பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது. விரைவில்
70% இலக்கை அடைய உள்ளதாக
தெரிவித்தார். மேலும்,
இந்திய அளவில் தடுப்பூசி
செலுத்துவதில் தமிழகம்
9வது இடத்தில் உள்ளது.
தமிழக
முதல்வர் ஒவ்வொரு முறையும்
ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளில் அறிவிக்கும் போது, அவற்றை
முறையாக கடைபிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். ஒப்பந்த அடிப்படையில் 4 மாதங்களுக்கு முன்னதாக
நியமிக்கப்பட்ட செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய
போராட்டத்தில் ஈடுபட்டதற்கு வருத்தம் தெரிவித்துள்ளனர். இதற்காக
3 பேர் கொண்ட குழு
அமைத்து 15 நாட்களில் தீர்வு
காண நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 4,900 செவிலியர்கள் நியமிக்கும் பணி நடந்து வருகிறது.
இதில், இவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.