HomeBlogபோக்குவரத்து கழகங்களில் 4,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன

போக்குவரத்து கழகங்களில் 4,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன

போக்குவரத்து கழகங்களில் 4,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன

அரசு
போக்குவரத்து கழகங்களில் ஓட்டுனர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிறைய காலியாக உள்ளன.
அதாவது, ஒரு பஸ்சுக்கு
ஆறு பேர் என்ற
விகிதத்தில் 1.28 லட்சம் பேர்
பணியில் இருக்க வேண்டும்.ஆனால்,
தற்போது ஐந்து பேருக்கும் குறைவாக உள்ளனர். முக்கியமாக ஓட்டுனர், நடத்துனர் பற்றாக்குறையால் பல பஸ்களை இயக்க
முடியாத நிலை உள்ளது.

இதை
நிவர்த்தி செய்யும் வகையில்,
அரசு போக்குவரத்து கழகத்தில்
4,000
காலிப்பணியிடங்களை நிரப்பும்
வகையில், விரைவில் அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன.

இது குறித்து, ஓட்டுனர்கள் கூறியதாவது:

போதுமான
வருவாய் இல்லை என்ற
காரணம் கூறி, பணியாளர்கள் நியமனம் செய்வதில் தாமதம்
ஏற்பட்டது.

அடுத்த
ஆண்டு மே மாதத்தில்
5,000
பேருக்கு மேல் ஓய்வு
பெற உள்ளனர். அவர்களில்
பலர் தற்போது விடுப்பில் உள்ளனர். இதனால், தொழிலாளர்களுக்கு உரிய விடுப்பு
கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. தற்போது தொழிலாளர்கள் நியமனம்
செய்யப்பட உள்ளது மகிழ்ச்சி
அளிக்கிறது. அதே சமயம்,
கடந்த ஆட்சியில், குறிப்பிட்ட சில பணிமனைகளுக்கு நிறைய
பேரை இடமாற்றம் செய்தனர்.
இதனால், சில பணிமனைகளில் ஆள் பற்றாக்குறையும், சில
பணிமனைகளில் அதிக ஆட்களும்
உள்ளனர்.

மேலும்,
ஆளுங்கட்சி தொழிற் சங்கத்தினர், பஸ் நிலையம், பண்டக
சாலை உள்ளிட்டவற்றில் தேவைக்கு
அதிகமாக பணியில் உள்ளனர்.
இதனால், வழக்கமான பணிகள்
பாதிக்கப் படுகின்றன. இவற்றையும் சரி செய்தால், பஸ்
இயக்கம் பாதிக்கப்படாது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular