தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு நிறுவனம் சார்பில் மின்னணு வர்த்தகம் என்ற தலைப்பில் வரும் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை மூன்று நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு நிறுவனம் சார்பில் மின்னணு வர்த்தகம் (இ-காமர்ஸ்) குறித்த பயிற்சி சென்னையில் வரும் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை EDII வளாகத்தில் நடத்த உள்ளது.
மின்னணு வர்த்தக அறிமுகம், மின்னணு வர்த்தக மாதிரி வகைகள், நன்மைகள் மற்றும் சவால்கள், இணையவழி வர்த்தகத்தை அமைத்தல், மின்வணிக தளத்தைத் தேர்ந்தெடுத்தல், டொமைன் மற்றும் ஹோஸ்டிங், கடையை வடிவமைத்தல், பணம் செலுத்தும் வாயில்களை அமைத்தல், தயாரிப்பு மேலாண்மை மற்றும் சரக்கு கையாளுதல், தயாரிப்பு ஆராய்ச்சி மற்றும் தேர்வு, தயாரிப்பு பட்டியல், சரக்கு மேலாண்மை ஆகிய தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படும்.
மேலும் மின்வணிகத்திற்கு சந்தைப்படுத்துதல், தேடல் இயந்திர மேம்பாடு, சமூக ஊடக விளம்பரம், மின்னஞ்சல் சந்தைப்படுத்துதல், தளவாட மேலாண்மை, ஒழுங்கு மேலாண்ம ஆகிய பாடத்தலைப்புகளிலும் பயிற்சிகள் இடம் பெறும். மேலும் தகவலுக்கு www.editn.in என்ற இணையதளத்தை காணலாம். இதுதவிர, திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை 9080609808, 9841693060, 9677152265 ஆகிய தொலைபேசி எண்களில் பேசி விவரம் அறியலாம். அரசு சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.