Home Blog கரோனாவால் பெற்றோரை இழந்தோர் உள்பட 3 பிரிவினருக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை

கரோனாவால் பெற்றோரை இழந்தோர் உள்பட 3 பிரிவினருக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை

0

கரோனாவால் பெற்றோரை இழந்தோர் உள்பட 3 பிரிவினருக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை

சுரோனாவால் பெற்றோரை இழந்தோர் உள்பட மூன்று பிரிவினருக்கு அரசு வேலை

முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.இந்த உத்தரவை மனிதவள மேலாண்மைத் துறைச்செயலாளர் மைதிலி க.ராஜேந்திரன் வெளியிட்டார். 51 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னுரிமைப் பட்டியலை ,சீர்செய்து அவர் வெளியிட்ட உத்தரவு:

கரோனாவால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள்,முதல் தலைமுறை பட்டதாரிகள், தமிழக அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற நபர்கள் ஆகியோருக்கு அரசுப்பணியிடங்களில் முன்னுரிமை அளிக்கப்படும் என சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. பொதுவாக, வேலை வாய்ப்பகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் நேரடி பணி நியமனங்களில், போரில் உடல் தகுதியை

இழந்த ராணுவத்தினர், ஆதரவற்ற கைம்பெண்கள், கலப்பு திருமண தம்பதியினர் உள்ளிட்ட சில பிரிவினருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கான உத்தரவுகள் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்த உத்தரவுகள் கடந்த  1970-ஆம் ஆண்டில் இருந்து  நடைமுறையில் உள்ளன.ஒவ்வொரு முறையும் நான்கு  தொகுதிகளாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ள முன்னுரிமை வரிசைப்படி வேலைவாய்ப்பகங்கள் பரித்துரை செய்வதால் அனைத்து முன்  னுரிமை இனத்தவருக்கும் நன்மை சேராத நிலை உள்ளது.

எனவே, இந்த முன்னுரிமை வழங்முறையைச்  சீரமைத்து வெளியிட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையரிடம் இருந்து பரிந்துரைகள் பெறப்பட்டன. இந்பரிந்துகைகளின் அடிப்படையில், இனி முன்னுரிமைப் பட்டியலில் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்து வாடுவோருக்கு முதல் முன்னுரிமை அளிக்கப்படும்.தனியார் அல்லது அரசால் நடத் தப்படும் ஆதரவற்றோர் இல்லங்கவில் தங்கி பயின்று வளர்ந்து வரும் தாயையும், தந்தையையும் இழந்த  வாரிசுதாரர்கள், அந்த இல்லங்களில் இருந்து பெறப்படும் சான்றிதழின் அடிப்படையில் பணியில் சேர்க்கப்படுவர். அங்கீகரிக்  ஆதரவற்றோர் இல்லங்களில் சேர முடியாத கிராமப்புற  தாய், தந்தையற்ற நபர்கள், வருவாய் வட்டாட்சியர் மூலம் பெறப்படும் சான்றிதழ் அடிப்படையிலும், முன்னுரிமை பெறத் தகுதி உடையவர்கள்.அரசின் வேலைக்கான பட்டியயலில்  முதல் தலைமுறை பட்டதாரிகள், தமிழக முன்னுரிமை அளிக்கப்படும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version