கரோனா காரணமாக நாளைமுதல் தமிழக வங்கிகள் செயல்படும் நேரம் குறைக்கப்படுவதாக மாநில வங்கியாளர்கள் குழுமம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாநில வங்கியாளர்கள் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகம் முழுவதும் கரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருவதால், கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாளைமுதல் தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் காலை 10 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மட்டுமே செயல்படும்.
மேலும், கர்ப்பிணி பெண்கள், மாற்றுத் திறனாளிகள் வீட்டில் இருந்தே செயல்படலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் நாளை புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரவுள்ள நிலையில், வங்கிகள் தரப்பில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.