Monday, August 11, 2025

Yearly Archives: 2023

மதுரை ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

TAMIL MIXER EDUCATION.ன் ஜல்லிக்கட்டு செய்திகள் மதுரை ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பான முழுமையான வழிகாட்டு நெறிமுறைகளை மதுரை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. வரும் ஜனவரி 15ம் தேதி அவனியாபுரத்திலும், 16ம் தேதி பாலமேட்டிலும், 17ஆம் தேதி அலங்காநல்லூரிலும், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்று மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முழுமையான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் https://madurai.nic.in/ என்ற இணையதளத்தில் தங்களது பெயர், கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம், வயதிற்கான சான்றிதழ், கொரானா தடுப்பூசி இரண்டு தவணை செலுத்தியதற்கான சான்றிதழ் முதலியவைகளை பதிவேற்றம் செய்திட வேண்டும் என்றும், மாடுபிடி வீரர்கள் அனைவரும் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து இரண்டு நாட்களுக்குள் கோவிட் தொற்று இல்லை (RT PCR Test) என்பதற்கான சான்றினை வைத்திருந்தால் மட்டுமே போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் மாடுகளுக்கான பதிவுகளையும் அதே இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் மாடுகள், அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய மூன்று கிராமங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகளில் ஏதாவது ஒரு கிராமத்தில் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ள காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர் அனுமதிக்கப்படவுள்ளனர். அவர்களும் இரு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தபட்டுள்ளது. மேலும் ஜல்லிக்கட்டினை காண வரும் பொதுமக்களும் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து இரண்டு நாட்களுக்குள் கோவிட் தொற்று இல்லை (RT PCR Test) என்ற சான்றினை வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த...

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கட்டணம் விபரம் வெளியீடு

TAMIL MIXER EDUCATION.ன் தமிழக செய்திகள் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கட்டணம் விபரம் வெளியீடு தமிழகத்தில் 2022-2023ம் கல்வியாண்டிற்கான 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை சமீபத்தில் பள்ளி கல்வி துறை அமைச்சரால் வெளியிடப்பட்டது. அதன்படி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு – 13.03.23 முதல் 03.04.23 வரையிலும் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு 12ம் வகுப்பு தேர்வை சுமார் 8.8 லட்சம் மாணவ, மாணவியர் எழுதவுள்ளனர். ,அத்துடன் மொத்தம் 3,169 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. தற்போது தேர்வு எழுதும் மாணவர்களுக்கான கட்டண விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன் படி, தேர்வு கட்டணத்தில் இருந்து தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. செய்முறை தேர்வு அடங்கிய பாடத்திற்கு மட்டும்...

மதுரை ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு அவசியம்

TAMIL MIXER EDUCATION.ன் ஜல்லிக்கட்டு செய்திகள் மதுரை ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு அவசியம் உலகம் முழுவதும் தமிழர்களின் வீர விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டு நடப்பு ஆண்டில் நடத்தப்பட கூடாது என்று வழக்கம் போல் நீதிமன்றங்களில் எதிர்ப்பு வழக்கு தொடரப்பட்டது. ஆனால் பாரம்பரியத்தை நிலை நாட்டும் இத்தகைய போட்டிகளை தடை செய்ய முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதனால், தமிழகத்தில் கடந்த 1 மாதமாக ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றது. இந்நிலையில், தமிழக அரசு காளைகளுடன் இருவர் மட்டுமே இருக்க வேண்டும், இதைத்தவிர அவர்கள் இருவருக்கும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் போன்ற ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. தற்போது மதுரை மாவட்ட நிர்வாகம்...

31.12.2022ன் படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர்களின் விவரங்கள் வெளியீடு

TAMIL MIXER EDUCATION.ன் வேலைவாய்ப்பு செய்திகள் 31.12.2022ன் படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர்களின் விவரங்கள் வெளியீடு Click Here to Download PDF

பொது தேர்வு எழுத உள்ள மாணவர்கள் ஒவ்வொரு மாணவருக்கும் மின்னஞ்சல் முகவரி கட்டாயம்

TAMIL MIXER EDUCATION.ன் கல்வி செய்திகள் பொது தேர்வு எழுத உள்ள மாணவர்கள் ஒவ்வொரு மாணவருக்கும் மின்னஞ்சல் முகவரி கட்டாயம் 2022-2023ம் கல்வியாண்டில் நான் முதல்வன் திட்டம் சார்ந்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி கல்லூரி சேர்க்கைக்கான அனைத்து விண்ணப்பங்களும் இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணபிக்க இயலும், மேலும் அவ்வாறு விண்ணப்பிக்கும் நிலையில் பெரும்பாலான கல்லூரிகள், கல்லூரி சேர்க்கை சார்ந்த தகவல்களை மின்னஞ்சல் வாயிலாகவே மாணவர்களுக்கு வழங்குகின்றன. எனவே ஒவ்வொரு மாணவருக்கும் மின்னஞ்சல் முகவரி இருத்தல் என்பது கட்டாயமான ஒன்றாகும். மின்னஞ்சல் தொடங்கும் செயல்பாடு: எனவே, இவ்வாண்டு 12ம் வகுப்பு பயிலும் ஒவ்வொரு மாணவருக்கும் ஓர் மின்னஞ்சல் முகவரியினை வகுப்பு ஆசிரியர்கள் உதவியுடன், அவர்களாகவே உருவாக்கிட தக்க வழிகாட்டிட தலைமையாசிரியர்களும் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாணவர்களுக்கான மின்னஞ்சல் உருவாக்குதல் குறித்த விளக்கக் காணொளி லிங்க் மூலம் வழங்கப்பட்டுள்ளது https://youtu.be/elGOCADPmsA. மேலும், அவ்வாறு மின்னஞ்சல் தொடங்க கற்பிக்கும் போது பின்வரும் கூடுதல்...

TNDTE தட்டச்சு தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழகத்தில் தொழில் நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் இளநிலை & முதுநிலை தட்டச்சு தேர்வுகள் 26.11.2022 (சனிக்கிழமை) மற்றும் 27.11.2022 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில்...

ஒருங்கிணைந்த பாதுகாப்புத் துறை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் – கோவை

TAMIL MIXER EDUCATION.ன் தேர்வு செய்திகள் ஒருங்கிணைந்த பாதுகாப்புத் துறை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் - கோவை முன்னாள் படை வீரா்களின் சிறார்கள் மத்திய அரசின் பாதுகாப்புத் துறை தேர்வுக்கு ஜனவரி 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளார். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: படைப் பணியில் அலுவலராக சேர்ந்திட மத்திய அரசுப் பணியாளா்...

MBBS மாணவா் சேர்க்கை விவரங்கள் – இணையவழியில் பதிவேற்ற அவகாசம் நீட்டிப்பு

TAMIL MIXER EDUCATION.ன் MBBS செய்திகள் MBBS மாணவா் சேர்க்கை விவரங்கள் - இணையவழியில் பதிவேற்ற அவகாசம் நீட்டிப்பு நிகழாண்டில் MBBS படிப்பில் சேர்க்கப்பட்டுள்ள மாணவா்கள் குறித்த விவரங்களை இணையவழியில் பதிவேற்றுவதற்கான அவகாசத்தை நிகழாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்க்கப்பட்டுள்ள மாணவா்கள் குறித்த விவரங்களை இணையவழியில் பதிவேற்றுவதற்கான அவகாசத்தை ஜன. 10ம் தேதி வரை நீட்டிக்க தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரிய இயக்குநா் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: எம்பிபிஎஸ் மாணவா் சேர்க்கை...

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

TAMIL MIXER EDUCATION.ன் தமிழக செய்திகள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க இணையதளம் மூலமாக தொடர்ந்து விண்ணப்பிக்கலாம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார். நேற்று தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா இல்லையா என்பதை தேர்தல் துறையின் https://tnsec.tn.nic.in/ இணையதளம் மூலமாக தெரிந்து கொள்ளலாம். அதேசமயம் பெயர் சேர்ப்பு மற்றும் நீக்குதல் போன்ற பணிகளுக்கு இணையதளம் மூலமாகவும் கைபேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது...

நிறுவனங்களுக்கு சிறப்பு விருது – திருவள்ளூர்

TAMIL MIXER EDUCATION.ன் விருது செய்திகள் நிறுவனங்களுக்கு சிறப்பு விருது - திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் அவர்களால் சட்டப்பேரவையில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சமூக பொறுப்புணர்வுடன் செயல்படும் தொழில், சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு 2022ம் ஆண்டுக்கான விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில் தனியார், பொதுத்துறை, கூட்டுத்துறை நிறுவனங்களை சேர்ந்த தொழில், சேவை, மற்றும் வர்த்தக நிறுவனங்கள் தங்களது சமூக பொறுப்பில் ஒரு பகுதியாக பொருளாதார மேம்பாட்டு பணியில் பாராட்டத்தக்க வகையில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையில் தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படும். ஆகவே ஒவ்வொரு வருடமும் மாவட்டத்திற்கு ஒரு விருது வீதம் அனைத்து மாவட்டங்களிலும் இந்த விருதினை வழங்க முடிவு எடுக்கபட்டுள்ளது. மேலும் தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும். இந்த விருதினை பெற பங்கு நிறுவனங்கள், கூட்டாண்மை நிறுவனங்கள் மற்றும் தனிநபர்...
- Advertisment -

Most Read