Tuesday, August 12, 2025

Yearly Archives: 2023

தொழிலாளர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி

TAMIL MIXER EDUCATION.ன் பயிற்சி செய்திகள் தொழிலாளர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி  கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் சார்பில், பதிவு செய்த தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என தொழிலாளர் நலவாரிய உதவி கமிஷனர் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து 3 ஆண்டுகள் பதிவு மூப்பு பெற்ற தொழிலாளர்கள் இப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். தமிழ் எழுத படிக்கத் தெரிந்திருப்பது அவசியம். ஐந்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., படித்தவர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், 40 வயதுக்கு உட்பட்டவராகவும் இருப்பது அவசியம். பயிற்சி கட்டணம், உணவு, தங்குமிடம் இலவசம். எல் அண்டு டி கட்டுமான திறன் பயிற்சி நிறுவனம் 100 சதவீத...

மானிய விலையில் சுழல் கலப்பைகள் – திருப்பூர்

TAMIL MIXER EDUCATION.ன் மானிய செய்திகள் மானிய விலையில் சுழல் கலப்பைகள் - திருப்பூர் வேளாண் துறை, உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புத்திட்டத்தின் கீழ், பயறுவகைகள், தானியங்கள், ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள், எண்ணெய்வித்துகள் மற்றும் மரஎண்ணெய்வித்து பயிர்கள் திட்டத்தில் பல்வேறு மானிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதில், பயறுவகை மற்றும் எண்ணெய்வித்து திட்டங்களின் கீழ், ஆதார வளங்களை பாதுகாக்கும் தொழில் நுட்பமாக, சாகுபடி மேற்கொள்ள, நிலத்தை பண்படுத்த, டிராக்டரால் இயக்கக்கூடிய சுழல் கலப்பைகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்ட உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புத் திட்ட ஆலோசகர் அரசப்பன் கூறியதாவது:திருப்பூர் மாவட்டத்திற்கு, சுழல் கலப்பை, விவசாயிகளுக்கு, 40 சதவீதம் அல்லது ஒரு எண்ணிற்கு ரூ.34 ஆயிரம் மானியத்திலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறு, குறு, மலைப்பகுதி விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகளுக்கு, 50 சதவீதம் அல்லது, ஒரு எண்ணிற்கு ரூ.42 ஆயிரம் மானியத்திலும் வழங்கப்படுகிறது. உணவு மற்றும்...

RPFல் 19,800 கான்ஸ்டபிள் காலி பணியிடங்கள் என வெளியான செய்தி போலியானது

TAMIL MIXER EDUCATION.ன் ரயில்வே செய்திகள் RPFல் 19,800 கான்ஸ்டபிள் காலி பணியிடங்கள் என வெளியான செய்தி போலியானது ரயில்வே பாதுகாப்புப் படையில் 19,800 கான்ஸ்டபிள் காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட செய்தி மற்றும் சில செய்தித்தாள்களில் வெளியான செய்தி போலியானது என்று மத்திய ரயில்வே அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் இந்த அறிவிப்பை ரயில்வே அமைச்சகம் வெளியிடவில்லை என்று தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்: ரயில்வே பாதுகாப்புப் படையில் 19,800 கான்ஸ்டபிள் பதவிக்கான ஆட்சேர்ப்பு தொடர்பாக சமூக ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்களில் ஒரு கற்பனையான செய்தி பரப்பப்படுகிறது. ரயில்வே அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் மூலம் அத்தகைய அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்று இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது என்று அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆட்சேர்ப்பு தொடர்பான அறிவிப்பு அல்லது தகவல்களுக்கு, விண்ணப்பதாரர்கள் RRBன் அதிகாரப்பூர்வ இணையதளங்களை மட்டுமே பார்க்க வேண்டும். சமூக ஊடகங்களில் வரும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம்

பொங்கலுக்கு நாளை முதல் சிறப்பு ரயில்

TAMIL MIXER EDUCATION.ன் பொங்கல் செய்திகள் பொங்கலுக்கு நாளை முதல் சிறப்பு ரயில் பொங்கலுக்கு இன்னும் 3 தினங்களே உள்ளன. பணிநிமித்தமாக நகரங்களில் தங்கியிருப்பவர்கள் சொந்த ஊருக்கு சென்று பொங்கல் கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இவர்களின் தேவைகள், கடைசி நேர கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை பண்டிகை காலங்களில்...

19,800 கான்ஸ்டபிள் பதவிக்கான ஆட்சேர்ப்பு நடைபெறுவதாக வெளிவந்த தகவல் உண்மை இல்லை

TAMIL MIXER EDUCATION.ன் ரயில்வே செய்திகள் 19,800 கான்ஸ்டபிள் பதவிக்கான ஆட்சேர்ப்பு நடைபெறுவதாக வெளிவந்த தகவல் உண்மை இல்லை இந்திய ரயில்வே பாதுகாப்பு படையில் 19,800 கான்ஸ்டபிள் பதவிக்கான ஆட்சேர்ப்பு நடைபெறுவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது. ஆனால் இந்த தகவலில் உண்மை இல்லை...

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு வேலை – TCS

TAMIL MIXER EDUCATION.ன் TCS செய்திகள் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு வேலை - TCS ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை வேலைக்கு எடுக்க இருப்பதாக டிசிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு பிறகு உலக பெருநிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அதிலும், அமேசான் நிறுவனம் 25,000 பணியாளர்களை பணியைவிட்டு நீக்கியது. இந்நிலையில், 2023-2024 நிதியாண்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை வேலைக்கு எடுக்க இருப்பதாகவும், அதில் 40,000 பேர் புதிதாக வேலை தேடும் இளைஞர்கள் என்றும் TCS நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பேசியுள்ளார். அவர் பேசுகையில்: கடந்த அக்டோபர், டிசம்பர் மாத காலகட்டத்தில், மொத்த பணியாளர்களின் எண்ணிக்கையில் 2,197 குறைந்திருந்தது. இதற்கு, முந்தைய 18 மாதங்களில் டிசிஎஸ் நிறுவனம் அதிக எண்ணிக்கையில் ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. அதன் விளைவாக, தற்போது ஒப்பிட்டு அளவில்...

சென்னையில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்ற சிறப்பு முகாம்

TAMIL MIXER EDUCATION.ன் சென்னை செய்திகள் சென்னையில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்ற சிறப்பு முகாம் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றத்துக்கான சிறப்பு முகாம் வருகிற 21ம் தேதி சென்னையில் உள்ள 19 மண்டல அலுவலக பகுதிகளில் நடக்கிறது. இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொது விநியோக திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படுகிறது. அதன்படி, ஜனவரி...

NIT, IIT உள்பட படிப்புகளில் சேர மாணவர்கள் 75% தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

TAMIL MIXER EDUCATION.ன் கல்வி செய்திகள் NIT, IIT உள்பட படிப்புகளில் சேர மாணவர்கள் 75% தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் NIT, IIT சி.எப்.டி.ஐ. படிப்புகளில் சேர மாணவர்கள் குறைந்த பட்சம் 75 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு அடிப்படையில் என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., சி.எப்.டி.ஐ. போன்றவற்றில் சேர்க்கைக்கு தகுதி பெறும் மாணவர்கள் அந்தந்த கல்வி வாரியங்களால் நடத்தப்படும் 12ம் வகுப்பு தேர்வில் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்பது தொடர்பான கருத்துகளை தேசிய தேர்வு முகமை கேட்டு இருந்தது. அதன் அடிப்படையில், என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., சி.எப்.டி.ஐ. படிப்புகளில் சேர தகுதி பெறும் மாணவர்கள் குறைந்தபட்சம் 75 சதவீதம் மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர்...

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்

TAMIL MIXER EDUCATION.ன் போட்டி செய்திகள் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிக்கு வரும் 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இதுவரை 1,21,686 பேர் முன்பதிவு செய்துள்ளனர் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிக்கை: தமிழ்நாடு முதலமைச்சர்...

PM KISAN திட்டம் – வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பு அவசியம்

TAMIL MIXER EDUCATION.ன் PM KISAN செய்திகள் PM KISAN திட்டம் - வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பு அவசியம் தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை PM KISAN பயனாளிகளுக்கு 13வது தவணை தொகை விடுவிப்புக்கு வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பது அவசியம் என கூறியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்...
- Advertisment -

Most Read