Tuesday, August 12, 2025

Yearly Archives: 2023

புதிய தொழிற்பள்ளிக்கு விண்ணப்பிக்கலாம் – ராணிப்பேட்டை

TAMIL MIXER EDUCATION.ன் ராணிப்பேட்டை செய்திகள் புதிய தொழிற்பள்ளிக்கு விண்ணப்பிக்கலாம் - ராணிப்பேட்டை ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிய தொழிற்பள்ளி தொடங்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2023-2024ம் கல்வியாண்டுக்கு புதிய தொழிற்பள்ளிகள் தொடங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், புதிய தொழிற்பிரிவுகள், தொழிற்பிரிவுகளில் கூடுதல் அலகுகள் தொடங்குதல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகிறது. ஜன.2ம் தேதி முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஒரு தொழிற்பள்ளிக்கு, ஒரு இணையதள விண்ணப்பம் சமா்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்கக் கடைசி நாள் பிப்ரவரி 28ம் தேதியாகும். கட்டணம்: அனைத்து தொழிற் பிரிவுகளுக்கும் விண்ணப்பக் கட்டணம் ரூ.5,000 மற்றும் ஆய்வுக் கட்டணம் ரூ.8,000 செலுத்த வேண்டும். பிப். 28ம் தேதிக்குப் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவும் தொடா்பு கொள்ளலாம்.

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை – திருவண்ணாமலை

TAMIL MIXER EDUCATION.ன் உதவித்தொகை செய்திகள் தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை - திருவண்ணாமலை தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஒவ்வொரு வருடம் உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விண்ணப்பதாரர்கள் ஆதிதிராவிடர், பழங்குடியினராக இருந்தால் 45 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மற்ற பிரிவை சேர்ந்தவர்கள் 40 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு எதுவும் கிடையாது. இந்த திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம்தோறும் 200 ரூபாயும், தேர்ச்சி பெற்றவர்களுக்கு 300 ரூபாயும், பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு 400 ரூபாயும் பட்டதாரிகளுக்கு 600 ரூபாயும் மாதம் தோறும் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 600 ரூபாயும், பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 750 ரூபாயும், பட்டதாரிகளுக்கு ஆயிரம் ரூபாயும் உதவித்தொகை வழங்கப்படும். இதற்கு...

கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் மூலம் இலவசப் பயிற்சி

TAMIL MIXER EDUCATION.ன் பயிற்சி செய்திகள்கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் மூலம் இலவசப் பயிற்சி கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் மூலம் அளிக்கப்படும் இலவசப் பயிற்சியில் சேர முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது இதுகுறித்து கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோட்டில் உள்ள கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் ஊரகப் பகுதி மக்களுக்கு பல்வேறு சுயவேலைவாய்ப்பு பயிற்சிகளை இலவசமாக அளித்து வருகிறது. இதன்படி...

புதிய வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

TAMIL MIXER EDUCATION.ன் வாக்காளர் செய்திகள் புதிய வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தங்களுக்கு விண்ணப்பிக்கலாம் கடந்த நவம்பர் 9ம் தேதி முதல் டிசம்பர் 8 ம் தேதி வரை சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, ஜனவரி 5ம் தேதி, வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், சுருக்கமுறை திருத்த காலத்தில், மொத்தம் 79,373 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இருமுறை பதிவு, விண்ணப்ப பிழைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, 1,649 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. மொத்தம், 77,724...

10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த வாரம் முதல் ஹால்டிக்கெட் வழங்க தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது

TAMIL MIXER EDUCATION.ன் தமிழக செய்திகள் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த வாரம் முதல் ஹால்டிக்கெட் வழங்க தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற உள்ளது. எழுத்து தேர்வுகள் மார்ச் மாதத்தில் தொடங்கினாலும் கூட, செய்முறை தேர்வு பிப்ரவரி மாதத்திலேயே தொடங்க உள்ளது. எனவே அதற்கு ஏதுவாக ஹால் டிக்கெட் வழங்கக்கூடிய பணியை துரிதப்படுத்த தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 10, 11,...

+2, பத்தாம் வகுப்புக்கு முன்கூட்டியே பாடநூல்கள்

TAMIL MIXER EDUCATION.ன் தமிழக செய்திகள் +2, பத்தாம் வகுப்புக்கு முன்கூட்டியே பாடநூல்கள் தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் (2023-2024) +2, பத்தாம் வகுப்பு மாணவா்கள் தங்களது பாடங்களை முன்கூட்டியே படிக்க வசதியாக வரும் ஏப்ரலில் அவா்களுக்குப் புத்தகங்கள் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.  பொதுத் தேர்வுக்குத் தயாராகும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்கள் கோடை விடுமுறையில் படிப்பதற்காக மூத்த மாணவா்களிடம் புத்தகங்கள் வாங்கி படிப்பது வழக்கம். பல பள்ளிகளில் வகுப்புகள் எடுக்கத் தொடங்கிவிடுவா். இதை கருத்தில் கொண்டு பொதுத் தேர்வெழுதும் மாணவா்களுக்கு புதிய கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்கூட்டியே பாடநூல்கள் வழங்க முடிவு செய்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறியது: ஆண்டுதேர்றும் ஒன்றாம் முதல் +2 வரை படிக்கும் மாணவா்களுக்காக ஐந்து கோடி புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் அச்சடிக்கும் பணி கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. இந்த இரு வகுப்புகளுக்காக 30-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் பாடநூல்கள் அச்சிடப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் வரும் மார்ச்சில் முடிவடையும். இதையடுத்து ஏப்ரலில் புத்தகங்கள் விற்பனை தொடங்கும். அதனால் அடுத்தக்...

வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் அடுமனை பயிற்சி முகாம்

TAMIL MIXER EDUCATION.ன் பயிற்சி செய்திகள் வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் அடுமனை பயிற்சி முகாம் வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில், 14 வாரங்களுக்கான அடுமனை பயிற்சி முகாம் நடக்கவுள்ளது. இதுகுறித்து வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் அடுமனை பயிற்சி முகாம் 14 வாரங்களுக்கு நடக்க இருக்கிறது. இந்த பயிற்சி முகாமில், அடுமனை தொழில்நுட்பம் குறித்த முழு தகவல்களும் பகிரப்படும். இந்தப் பயிற்சியில் சோந்து பயில குறைந்தது 10ம் வகுப்பு தோச்சி பெற்றிருக்க வேண்டும். பூா்த்தி...

நாட்டுக்கோழி வளர்க்க நாளை (19.01.2023) இலவச பயிற்சி

TAMIL MIXER EDUCATION.ன் பயிற்சி செய்திகள் நாட்டுக்கோழி வளர்க்க நாளை (19.01.2023) இலவச பயிற்சி நாட்டுக்கோழி வளர்க்க, கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகம் சார்பில், நாளை இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இது தொடர்பாக, கோவை கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: சரவணம்பட்டி, காளப்பட்டி பிரிவு அருகே உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக மையத்தில், நாளை...

ட்ரோன் இயக்க பயிற்சி பெற அழைப்பு – பெரம்பலூா்

TAMIL MIXER EDUCATION.ன் பயிற்சி செய்திகள் ட்ரோன் இயக்க பயிற்சி பெற அழைப்பு - பெரம்பலூா் பெரம்பலூா் மாவட்டத்தைச் சோந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தவா்கள், விவசாயத் துறையில் பயன்படுத்தும் ட்ரோன் கருவி இயக்குவதற்கான இலவச பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இனத்தவா்களுக்கு, மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மையம் மூலம் விவசாயத்துறையில் பயன்படுத்தும் ட்ரோன் கருவி இயக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தைச் சோந்த 18 முதல் 45 வயது வரையுள்ள ஐடிஐ, டிப்ளமோ அல்லது ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தோச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சி கால அளவு 10 நாள்களாகும். பயிற்சிக்கான மொத்த தொகையான ரூ. 61,100 தாட்கோ மூலம் வழங்கப்படும். இப் பயிற்சியை வெற்றிகரமாக...

தற்காலிக ஆசிரியர்களுக்கு 3 மாதங்களுக்கு பணி நீட்டிப்பு

TAMIL MIXER EDUCATION.ன் தமிழக செய்திகள் தற்காலிக ஆசிரியர்களுக்கு 3 மாதங்களுக்கு பணி நீட்டிப்பு தமிழ்நாட்டில் பள்ளிகளில் பணியாற்றி வரும் 912 தற்காலிக ஆசிரியர்களுக்கு மூன்று மாதங்கள் தொடர் நீட்டிப்பு வழங்கி பள்ளிக் கல்வித் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித்துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் உள்பட 912 ஆசிரியர்கள் தற்காலிகமாக பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு மேலும் 3 மாதங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
- Advertisment -

Most Read