TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும், 21ம் தேதி முதல் ஆசிரியர் தகுதி தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடக்கிறது.இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் செயல்பட்டு வருகிறது.
இங்கு அரசு, வங்கி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்போது, தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரிய ஆண்டு திட்ட நிரலில், இடைநிலை ஆசிரியர் பணிக்கு தோராயமாக, 6,553 காலிபணியிடங்களும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தோராயமாக, 3,587 காலிபணியிடங்கள் தேர்வு நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, தாள் 2 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள், கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும், 21ம் தேதி முதல் நடக்கவுள்ளது.
இப்பயிற்சி சேர விரும்புபவர்கள், https://rb.gy/uw3r1 கூகுள் பார்மில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 04343 291983 என்கிற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.