Google Newsல் Follow பண்ணுங்க உடனுக்குடன் தகவலை பெறுங்கள். Follow Now

தாட்கோ இலவச பயிற்சி விண்ணப்பம் வரவேற்பு

தாட்கோ இலவச பயிற்சி விண்ணப்பம் வரவேற்பு
TAhDCO Free Training Application Welcome

TAMIL MIXER EDUCATION.ன் பயிற்சி செய்திகள்

தாட்கோ இலவச பயிற்சி விண்ணப்பம் வரவேற்பு

தாட்கோ மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இச்சமூகங்களை சார்ந்த இளைஞர்களுக்கு வீட்டு வேலை, குழாய் பழுது பார்ப்பு, இலகுரக டிரைவர், நான்கு சக்கர வாகன சேவை உதவியாளர், வார்டு பாய், வாடிக்கையாளர் பராமரிப்பு நிர்வாகி அழைப்பு மைய வேலை, காவலர் உள்ளிட்ட பயிற்சிகள் தனியார் நிறுவனத்தால் வழங்கப்பட உள்ளன.

இப்பயிற்சிக்கு 18 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி 10 முதல் 14 நாட்கள் ஆகும். இளைஞர்களுக்கு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம், விழுப்புரம், தென்காசி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

உதவித்தொகையாக நாள் ஒன்றுக்கு ரூ.375 வழங்கப்படுகிறது. பயிற்சி செலவு, விடுதி செலவினை தாட்கோ வழங்கும். பயிற்சியில் சேர www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு தேனி கலெக்டர் அலுவலக தாட்கோ மாவட்ட மேலாளரை தொடர்பு கொள்ளலாம். அல்லது 04546 - 260 995 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.