Join Whatsapp Group

Join Telegram Group

Private Jobs

Government Jobs

TNTET Model Exam – ஆசிரியர் தகுதித் தேர்வு 2 ஆம் தாள் TRB முக்கிய அறிவிப்பு


ஆசிரியர் தகுதித் தேர்வு 2ஆம் தாள் குறித்து மாதிரித் தேர்வு நடத்தப்பட உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

நடப்புக் கல்வி ஆண்டின் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான 2ஆம் தாள் தேர்வு ஜன. 31 முதல் பிப். 12ம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசு கொண்டுவந்த இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET)) மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்.

இதற்கிடையில் நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 ஆகியவற்றுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக ஏப்ரல் 26ஆம் தேதி வரை விண்ணப்பித்தனர். ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1-க்கு 2,30,878 பேரும் மற்றும் தாள் 2-க்கு 4,01,886 பேரும் என மொத்தமாக 6,32764 பேர் விண்ணப்பித்தனர்.

அதையடுத்து ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் அக்டோபர் 14 முதல் 19ஆம் தேதி வரை இரு வேளைகளில் நடத்தப்பட்டது. கணினி வழியில் நடைபெற்ற தேர்வை சுமார் 2 லட்சம் பேர் எழுதினர்.

இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு 2ஆம் தாள் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 12 வரை கணினி வழியில் மட்டுமே நடத்தப்பட உள்ளது.

TNTET Model Exam - ஆசிரியர் தகுதித் தேர்வு 2-ஆம் தாள் TRB  முக்கிய அறிவிப்பு

மாதிரித் தேர்வு
மேற்படி கணினி வழித் தேர்விற்காக (Computer Based Examination) மாதிரித் தேர்வை மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் பயிற்சியினை மேற்கொள்ளலாம். இதற்கு, தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும். அனைத்து தேர்வர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மாதிரித் தேர்வுக்கான இணைப்பை டிஆர்பி வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் http://trbpracticetest.onlineapplicationform.org/TET/SyllabusSelection.htm என்ற இணைப்பை க்ளிக் செய்து, தேர்வை எழுதிப் பார்க்கலாம்.
மொத்தம் 30 நிமிடங்களுக்கு இந்த மாதிரித் தேர்வு நடத்தப்படும். மொத்தம் 25 கேள்விகள் கேட்கப்படும். 4 விடைகள் அளிக்கப்பட்டிருப்பதில் சரியான ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

×

உங்களிடம் உள்ள PDF Files xerox போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

× Xerox Shop [1 Page - 50p]