பாரதியார் பல்கலையில் தொழிற் படிப்புக்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது - Tamil Mixer Education
IBPS RRB XII வேலைவாய்ப்பு 2023 - 8812 காலிப்பணியிடங்கள். Check Now

பாரதியார் பல்கலையில் தொழிற் படிப்புக்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது

பாரதியார் பல்கலையில் தொழிற் படிப்புக்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது
Admission of students for vocational studies has started at Bharathiar University

TAMIL MIXER EDUCATION- ன் கல்வி செய்திகள் 

பாரதியார் பல்கலையில் தொழிற் படிப்புக்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது

கோவை பாரதியார் பல்கலை மற்றும் பல்கலை மானியக்குழு சார்பில், பேச்சுலர் ஆப் வொக்கேஷனல் என்ற மூன்றாண்டு இளநிலை தொழில்படிப்புக்கு, 2022-2023ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

இளநிலை தொழிற்படிப்பில், மல்டி மீடியா அண்ட் அனிமேஷன், பிசினஸ் பிராசஸ் அண்ட் டேட்டா அனலைசிஸ் ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன.

இப்படிப்பில் சேர பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.கல்வி கட்டணம் செமஸ்டருக்கு, 8,000 ரூபாய். இப்படிப்பில் சேரும், பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவு மாணவர்களுக்கு, அரசு சார்பில் ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது.

மல்டி மீடியா அண்ட் அனிமேஷன் பாடப்பிரிவில் சேரும் மாணவர்களுக்கு கிராபிக் டிசைனர், மாடுலர், ரிக்கிங் ஆர்டிஸ்ட், அனிமேட்டர் ஆகிய துறையில் வேலை வாய்ப்பும், பிசினஸ் பிராசஸ் அண்ட் டேட்டா அனலைசிஸ் படிக்கும் மாணவர்களுக்கு, கலெக்சன் எக்சிகியூட்டிவ், அசோசியேட் சி.ஆர்.எம்., பிசினஸ் இன்டலிஜென்ட் அசோசியேட் அனலிட்டிக்ஸ் ஆகிய துறையிலும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.

Post a Comment

© Tamil Mixer Education. All rights reserved. Developed by Jago Desain