TNPSC: இலவச
பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
– தருமபுரி
10ம்
வகுப்பு தேர்ச்சி பெற்ற
பழங்குடியின மாணவ மாணவியர்கள் டிஎன்பிஎஸ்சி இலவச
பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என தருமபுரி
மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
தருமபுரி
மாவட்டத்தில், பழங்குடியின மக்களின் வாழ்கை
தரத்தை உயர்த்தும் நோக்குடன் 10-ஆம் வகுப்பு
மற்றும் அதற்கு
மேல் வகுப்பு தேர்ச்சி
பெற்ற பழங்குடியின மாணவ/மாணவியர்களுக்கு அரசு துறையில் வேலையில் சேர்வதை
ஊக்குவிக்கும் விதமாக 2021-2022ம் ஆண்டு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) நடத்தப்படும் தேர்விற்கு இலவச
பயிற்சி வகுப்பு நடத்துதல் TNPSC – Group
IV & VAO தேர்வு எழுதுவதற்கு தகுதி
வாய்ந்த பழங்குடியின மாணவ/மாணவியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுகிறது.
மேலும் இத்திட்டத்தில் பயன்பெற பழங்குடியினர் மாணாக்கர்கள் உரிய
கல்விச்சான்று, சாதிச்சான்று, ஆதார் அட்டை, இரண்டு
புகைப்படங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள்
தங்களது விண்ணப்பங்களை திட்ட
அலுவலர், மாவட்ட
பழங்குடியினர் நல
அலுவலகம், மாவட்ட
ஆட்சியரக கூடுதல் கட்டிடம் (தரைத்தளம்) தருமபுரி – 636 705 என்ற
முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

