2022-ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு
அட்டவணை வெளியீடு (Group 2 & Group 4) / TNPSC Annual Planner 2022 to 2023 out
சென்னையில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், டிஎன்பிஎஸ்சி தலைவர்
பாலச்சந்திரன், 2022ஆம்
ஆண்டு நடத்தப்பட உள்ள
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளின் அட்டவணையை வெளியிட்டார்.
அந்த
அட்டவணையின்படி, 2022ஆம்
ஆண்டு பிப்ரவரி மாதம்
குரூப் 2 தேர்வுகளும், மார்ச்
மாதம் குரூப் 4 தேர்வுகளும் நடத்தப்படும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த
2 ஆண்டுகளாக, கரோனா பேரிடர்
காரணமாக, குரூப் 2, குரூப்
4 மற்றும் குரூப் 2ஏ
தேர்வுகள் நடத்தப்படாத நிலையில்,
2022ஆம் ஆண்டுக்கான குரூப்
தேர்வுகளுக்கான அட்டவணை
இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இது
குறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர்
பாலச்சந்திரன் கூறுகையில், 2022ஆம் ஆண்டில்,
5831 காலிப் பணியிடங்களுக்கு குரூப்
2, குரூப் 2 ஏ தேர்வும்,
5255 காலி பணியிடங்களுக்கு குரூப்
4 தேர்வும் நடைபெற
உள்ளது. வரும் ஆண்டில்,
டிஎன்பிஎஸ்சி சார்பில்
32 வகையான தேர்வுகளை நடத்த
திட்டமிட்டுள்ளோம் என்று
கூறினார். அறிவிப்பு வெளியான
75 நாள்களில் தேர்வுகள் நடைபெறும்.
என்று அறிவித்தார்.
முறைகேடுகளைத் தடுக்க வழி என்ன?
தேர்வு
மையங்களிலிருந்து விடைத்தாள்களைக் கொண்டு வரும் வாகனங்கள்
ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படும்.
ஓஎம்ஆர்
விடைத்தாளில் உள்ள
தேர்வரின் தனிப்பட்ட விவரத்தைக் கொண்டே, விடைத்தாள்கள் திருத்தும் மையங்களுக்குக் கொணடு
வரும் வழியில், விடைத்தாளை திருத்தி முறைகேடு செய்யப்பட்டது. எனவே, இனி, ஓஎம்ஆர்
விடைத்தாளில் உள்ள
தேர்வரின் தனிப்பட்ட விவரத்தை,
தேர்வு முடிந்தபின் தனியாக
பிரித்தெடுக்கப்படும். டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகளைத் தடுக்க
தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாலச்சந்திரன் கூறினார்.
TNPSC ANNUAL PLANNER: Download Here
குரூப்-2, குரூப்-2A, குரூப்-4 காலிப்பணியிடங்கள் 2022:
Click
Here