Home12th Standard History Tamil Medium Book Back Question answers12th History - Lesson 6 - தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் - Tamil Medium

12th History – Lesson 6 – தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் – Tamil Medium

 

12th History – Lesson 6 – தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் – Tamil Medium

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

1.முகலாயர் காலத்தில் அலுவலக மற்றும் நீதிமன்ற மொழியாக விளங்கியது எது? (மார்ச் 2020 )

)
உருது

)
இந்தி

)
மராத்தி

)
பாரசீகம்

விடை: ) பாரசீகம்

 

2.லண்டன் பிரிவிக் கவுன்சிலில் இடம்பெற்ற முதல் இந்தியர் ………….

)
ரஹமத்துல்லா சயானி

)
சர் சையது அகமது
கான்

)
சையது அமீர் அலி

)
பஃருதீன் தயாப்ஜி

விடை: ) சையது
அமீர் அலி

 

3.
கூற்று: 1870இல் வங்காள அரசாங்க ஆணை இஸ்லாமிய தொழில்வல்லுநர் குழுக்களிடையே ஐயங்களை ஏற்படுத்தியது.

காரணம்:
அவ்வாணை உருது மொழி பாரசீக அரபி எழுத்து முறைக்குப் பதிலாக இந்தியைக் கொண்டு வந்தது.

)
கூற்று சரி ஆனால்
காரணம் கூற்றை விளக்கவில்லை

)
கூற்று சரி காரணம்
கூற்றை விளக்குகிறது

)
கூற்று தவறு காரணம்
சரி

)
கூற்று, காரணம் இரண்டும்
தவறு

விடை: ) கூற்று
சரி ஆனால் காரணம்
கூற்றை விளக்கவில்லை

 

4..இரு நாடு கொள்கையை முதன்முதலில் கொண்டு வந்தவர் …….

)
இராஜாஜி

)
ராம்சே மெக்டோனால்டு

)முகமது
இக்பால்

)
சர்வாசிர் ஹசன்

விடை: ) சர்
வாசிர் ஹசன்

 

5.1937
இல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது

)12
மாகாணங்கள்

)
7
மாகாணங்கள்

)5
மாகாணங்கள்

)
8
மாகாணங்கள்

விடை: ) 7 மாகாணங்கள்

 

6.காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்த நாளினை முஸ்லிம் லீக் மீட்பு நாளாக கொண்டாடியது.

)
22
டிசம்பர், 1940

)
5
பிப்ரவரி, 1939

)
23
மார்ச், 1937

)
22
டிசம்பர், 1939

விடை: ) 22 டிசம்பர்,
1939

 

7.பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.

பட்டியல்
I                                       
பட்டியல் II

.அன்னிபெசண்ட்                          1.அலிகார்
இயக்கம்

.சையது
அகமது கான்                 2. தயானந்த
சரஸ்வதி

.கிலாபத்
இயக்கம்                       3.பிரம்மஞான
சபை

.சுத்தி
இயக்கம்                               4.அலி சகோதரர்கள்

.3
1 4 2

.1
2 3 4

.4
3 2 1

.2
3 4 1

விடை: ) 3 1 4 2

 

8.பின்வரும் கூற்றுகளிலிருந்து
சரியானவற்றைத் தேர்வு செய்க.

i) அலிகார் இயக்கத்தைத் தோற்றுவித்த சர் சையது
அகமது தொடக்கத்தில் காங்கிரசை
ஆதரித்தார்.

ii) 1909இல்தோற்றுவிக்கப்பட்ட பஞ்சாப்
இந்துசபையானது இந்துமதவகுப்புவாத அரசியலுக்கு அடித்தளமிட்டது.

)
கூற்று (i) மற்றும் (ii) சரி

)
கூற்று (i) சரி (ii) தவறு

)
கூற்று (i) தவறு (ii) சரி

)
கூற்று (i) மற்றும் (ii) தவறு

விடை: ) கூற்று
(i)
மற்றும் (ii) தவறு

 

9.எப்போது முஸ்லிம் லீக் நேரடி நடவடிக்கை நாளை அனுசரித்தது?

)
25
டிசம்பர், 1942

)
16
ஆகஸ்ட், 1946

)21
மார்ச், 1937

)
22
டிசம்பர், 1939

விடை: ) 16 ஆகஸ்ட்,
1946

 

10.வேவல் பிரபுவிற்குப் பின்னர் பதவியேற்றவர்

)
லின்லித்கோ

)
பெதிக் லாரன்ஸ்

)
மௌண்ட்பேட்டன்

)
செம்ஸ்ஃபோர்டு

விடை: ) மௌண்ட்பேட்டன்

 

11.கூற்று: பிரிட்டிஷ் அரசாங்கம் வகுப்புவாதத்தை வளர்க்கவும் பரப்பவும் பின்பற்றியது தனித்தொகுதிக் கொள்கையாகும்.

காரணம்:
மக்கள் இரண்டு தனித்தொகுதிகளாக பிரிக்கப்பட்டதால்
வகுப்புவத அடிப்படையிலேயே வாக்களித்தனர். ( மார்ச் 2020 )

)
கூற்று சரி, ஆனால்
காரணம் கூற்றை விளக்கவில்லை

)
கூற்று சரி, காரணம்
தவறு

)
கூற்று மற்றும் காரணம்
தவறு

)
கூற்று சரி, காரணம்
கூற்றை விளக்குகிறது.

விடை: ) கூற்று
சரி, காரணம் கூற்றை
விளக்குகிறது

 

12.பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

.இந்துமத
மறுமலர்ச்சி                  1.M.S.கோல்வாக்கர்

.கலீஃபா
பதவி ஒழிப்பு                 2.ஆரிய
சமாஜம்

.லாலா
லஜபதி ராய்                      3.1924

.ராஷ்டிரிய
சுயசேவா சங்கம்         4.இந்துமுஸ்லிம்
மாகாணங்களாக பஞ்சாப் பிரித்தல்

.2
4 3 1

.3
4 1 2

.1
3 2 4

.2
3 4 1

 

விடை: ) 2 3 4 1

 

II. குறுகிய விடையளிக்கவும்

1.
சர் சையது அகமது கான் பிரிட்டிஷ் அரசினை ஏன் ஆதரித்தார்?

விடை:

 

2.
தனித் தொகுதி முறையினை பற்றி எழுதுக.

விடை:

 

3.ஆகாகான் தலைமையிலான முஸ்லிம் லீக் முன் வைத்த கோரிக்கைகள் என்ன?

விடை:

  • பம்பாயிலிருந்து சிந்துப்
    பகுதியைத் தனியாகப் பிரிப்பது.
  • பலுச்சிஸ்தானையும் அதன்
    எல்லைகளையும் சீர்திருத்துவது.
  • பஞ்சாபிலும் வங்காளத்திலும் மக்கள் தொகை அடிப்படையில் பிரிதிநிதித்துவம்.
  • மத்தியச் சட்டமன்றத்தில் முஸ்லிம்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு.

 

4.1923இல் வாரணாசியில் நடைபெற்ற ஆறாவது இந்து மகாசபை மாநாட்டைப் பற்றி குறிப்பு எழுதுக.

விடை:

  • 1923 ஆகஸ்டில் வாரணாசியில் நடைபெற்ற இந்து மகாசபையின் ஆறாவது மாநாட்டில் 968 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
  • அவர்களில் 56.7 விழுக்காட்டினர் ஐக்கிய மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர்.
  • ஐக்கிய மாகாணம்,
    பஞ்சாப், டெல்லி, பீகார்
    ஆகியவை86.8 விழுக்காட்டுப் பிரதிநிதிகளை அனுப்பிவைத்தன.
  • சென்னை பம்பாய்,
    வங்காளம் ஆகிய மூன்றும்
    6.6
    விழுக்காடு பிரதிநிதிகளை மட்டுமே
    அனுப்பிவைத்தன.

 

III. சுருக்கமான விடையளிக்கவும்

1.1921இல் நடைபெற்ற மலபார் கலகத்தைப் பற்றிய காந்தியடிகளின் கருத்து என்ன ?

விடை:

  • 1921இல் நடைபெற்ற
    குருதி கொட்டிய மலபார்
    கிளர்ச்சியின்போது அங்கு
    முஸ்லிம் விவசாயிகள் ஆங்கிலேய
    ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் இந்து நிலபிரபுக்களுக்கு எதிராகவும் களமிறங்கியது.
  • இந்து மகா
    சபை தன்னுடைய பிரச்சாரத்தை புதுப்பிக்க காரணமாயிற்று அடிப்படையில் அது ஒரு விவசாயக்
    கிளர்ச்சியாக இருந்தாலும் தீவிர மத உணர்வுகள்
    கோலோச்சின.
  • காந்தியடிகள் இந்நிகழ்வை இந்து முஸ்லிம் மோதலாகவே
    மதிப்பிட்டார்.
  • மலபாரில் நடைபெற்ற
    நிகழ்வுகளுக்கு முஸ்லிம்
    தலைவர்கள் பொது மன்னிப்புக் கேட்க வேண்டுமென
  • காந்தியடிகள் கோரிக்கை
    விடுத்தார்.

 

2.இஸ்லாமியர்களுக்காக மத்தியில் முதலில் அமைக்கப்பட்ட அரசியல் கட்சியின் நோக்கங்களை எழுதுக.

விடை:

அனைத்து இந்திய
முஸ்லீம் லீக்கின் நோக்கங்கள்:

  • இந்திய முஸ்லீம்கள், பிரிட்டிஷ் அரசிடம் உண்மையுடனும் நன்றியுடனும் நடந்து
    கொள்ள வேண்டுமென்ற உணர்வை
    அவர்களிடம் ஏற்படுத்துதல்.
  • இந்த அமைப்பின்
    செயல்பாடுகள் குறித்து
    அரசுக்கு எழும் தவறான
    கருத்துக்களை நீக்குதல்
  • இந்திய முஸ்லிம்களின் விருப்பங்கள் அரசியல்
    உரிமைகள் ஆகியவற்றை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல்.
  • தங்களது தேவைகள்,
    உயர்ந்த லட்சியங்களை கண்ணியமான
    முறையில் அரசுக்கு தெரிவித்தல்
  • இந்திய முஸ்லிம்கள் மற்ற இனத்தவரிடம் எவ்விதபகைமை பாராட்டுவதையும் முன்விரோதம்கொள்வதையும் தடுத்தல் ஆகியவையாகும்.

 

3.1909
ஆம் ஆண்டின் மின்டோமார்லி சீர்த்திருத்தங்களின் முக்கியத்துவத்தைக்
கூறுக.

விடை:

1909
ஆம் ஆண்டின் மின்டோ
மார்லி சீர்த்திருத்தங்களின் முக்கியத்துவம்:

  • அரசபிரதிநிதிகளின் நிர்வாகத்தில் இந்தியருக்கு ஒரு
    இடம் ஒதுக்கப்பட்டது.
  • மைய சட்ட
    சபையையும் மாநில சட்ட
    சபையையும் விரிவு படுத்தப்பட்டன.
  • வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அங்கீகரிக்கப்பட்டது. தனித்தொகுதிகள் முஸ்லீமுக்கு வழங்கப்பட்டன.
  • தேர்தல் நடந்த
    முதன் முறையாக அனுமதி
    அளிக்கப்பட்டது.

 

4.1927ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற முஸ்லிம் லீக் மாநாட்டின் முன்மொழிவுகள் யாவை?

விடை:

1927
மார்ச் 20இல் டெல்லியில் முஸ்லிம்களின் மாநாடு
நடைபெற்றது. இம்மாநாட்டில் வைத்த
4
முன்மொழிகள்:

  • பம்பாயிலிருந்து சிந்து
    பகுதியைத் தனியாக பிரிப்பது.
  • பலுசிஸ்தானையும் அதன்
    எல்லைகளையும் சீர்திருத்துவது
  • பஞ்சாபிலும் வங்காளத்திலும் மக்கள் தொகை அடிப்படையில் பிரதிநிதித்துவம்.
  • மத்திய சட்டமன்றத்தில் முஸ்லீம்களுக்கு 33 விழுக்காடுகள் இட ஒதுக்கீடு ஆகியவையாகும்.

 

IV. விரிவான விடையளிக்கவும்

1.பிரிட்டிஷ் இந்தியாவில் வகுப்புவாதத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்க.

விடை:

பிரிட்டிஷ் இந்தியாவின் வகுப்பு வாதத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி:

  • ஆரம்பகால தேசியவாதிகள் சிலர் தேசியவாதத்தை இந்துமத
    அடித்தளத்தில் மட்டுமே
    உருவாக்கமுடியும் என்று
    நம்பினர்.
  • 1875 இல் நிறுவப்பட்ட ஆரிய சமாஜத்தின் மூலம்
    அரசியலில் இந்து மறுமலர்ச்சிக்கான குரல் ஒலிக்கத்
    தொடங்கியது. ஆரிய சமாஜம்
    இந்து மதத்தின் உயரியத்
    தன்மைகளை உறுதியுடன் முன்வைத்தது.
  • வடஇந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் தோன்றிய பசு
    பாதுகாப்புத் கழகங்கள்
    இந்து வகுப்புவாதம் வளர்வதற்கு ஊக்கமளித்தன.
  • ஆரிய சமாஜம்
    போன்ற நிறுவனங்கள் எடுத்த
    முயற்சிகள் 1891 முதல் அன்னிபெசண்ட் அம்மையாரால் வழிநடத்தப்பட்ட பிரம்மஞான
    சபையின் மூலம் வலுப்பெற்றன.

முஸ்லிம் உணர்வின் எழுச்சி:

  • சர்வபள்ளி கோபால்
    குறிப்பிடுவது போல,
    மறுபுறம் இஸ்லாம் அலிகார்
    இயக்கத்தின் வழியாக தன்னை
    வெளிப்படுத்திக் கொண்டது.
  • பிரிட்டிஷார் அலிகார்
    கல்லூரியை ஏற்படுத்தி சையது
    அகமதுகானுக்கு ஆதரவளித்ததும் முஸ்லிம் தேசியக்கட்சி தோன்றவும்,
    முஸ்லிம் அரசியல் கருத்தியல் தோன்றவும் உதவியது.
  • வாகாபி இயக்கம்
    வர்காபிகள் இஸ்லாமை அதனுடைய
    ஆதித்தூய்மைக்கு அழைத்துச்
    செல்லவும் அதன் உயிரை
    உருக்குலைத்துக் கொண்டிருப்பதாக அவர்கள் கருதிய சில
    மூடப்பழக்கங்களை முடிவுக்கு கொண்டுவரவும் விரும்பினர்.
  • வாகாபிகளில் தொடங்கி
    கிலாபத்காரர்கள் வரையானோர்
    அடிமட்டச் செயல்பாடுகளில் காட்டிய
    செயற்முனைப்பு முஸ்லிம்களை அரசியல் மயமாக்குவதில் முக்கியப்
    பங்காற்றியது.

 

2.ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் கொள்கை இந்திய தேசியத்தில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? (மார்ச் 2020)

விடை:

  • கூட்டு இந்திய
    அடையாளம் ஒன்று உருவாவதைத் தடுப்பதே பிரிட்டிஷாரின் நோக்கமாக
    இருந்ததால், இந்தியர்களின் ஒருங்கிணைப்பு முயற்சிகளை முறியடிக்கத் தொடங்கினர்.
  • பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் பிரித்தாளும் கொள்கையைக் கையாண்டது.
  • பம்பாய்கவர்னர்
    எல்பின்ஸ்டோன், “பழைய
    ரோமானிய இலட்சியமான ‘Divide et Impera’
    (
    பிரித்தாளுதல்) என்பது
    நமதாக வேண்டும்என்று
    எழுதினார்.
  • வகுப்புவாதக் கலவரங்கள்
    நாட்டின் ஆளுகைக்குச் சவாலாக
    இருக்கும் என்று தெரிந்திருந்தபோதிலும் பிரிட்டிஸ் அரசாங்கம்,
    வகுப்புவாத கருத்தியல் சார்ந்த
    அரசியலுக்கும் சட்டப்பூர்வ அங்கீகாரத்தையும், கௌரவத்தையும் வழங்கியது.
  • அனைத்துக் கட்சிகளும் இத்தகைய குறுங்குழுவாத அணுகுமுறையைப் பின்பற்றியதால் வடஇந்தியாவில்
  • இந்துக்கள் மற்றும்
    முஸ்லிம்களுக்கிடையே பகைமைவளர்ந்தது. இதன் தாக்கம்நாட்டின் பிறபகுதிகளிலும் காணப்பட்டது.
  • 19ஆம் நூற்றாண்டின் கடைசி பதிற்றாண்டுகளில் ஏராளமான
    இந்துமுஸ்லிம் கலவரங்கள்
    வெடித்தன. 1882 இல் ஜீலை
    ஆகஸ்டில் தென்னிந்தியாவில் கூட
    ஒரு பெருங்கலகம் சேலத்தில்
    நடைபெற்றது.

 

3.இந்து தேசியம், இஸ்லாமிய தேசியம் மற்றும் இந்திய தேசியம் ஆகியவை இந்திய பிரிவினைக்கு சமபங்காற்றியது எவ்வாறு?

விடை:

  • கல்வி கற்ற
    மேல்வகுப்பு இந்துக்கள் தேசிய
    உணர்வு பெற்று எழுந்தனர்.
  • இதனை விரும்பாத
    ஆங்கிலேயர்கள் நடுத்தர
    வர்க்க முஸ்லீம்களை காங்கிரஸின் வளர்ச்சியை தடுக்க ஒரு
    கருவியாக பயன்படுத்திக் கொண்டனர்.
  • இது இந்துமுஸ்லீம்
    இனவாதத்தை தூண்டியது.

இந்து
தேசியம்:

  • ஆரம்பகால தேசியவாதிகள் சிலர் தேசிய வாதத்தை
    இந்துமத அடித்தளத்தில் மட்டுமே
    உருவாக்க முடியும் என
    எண்ணினர்.
  • 1875இல் நிறுவப்பட்ட ஆரிய சமாஜத்தின் மூலம்
    அரசியலில் இந்து மறுமலர்ச்சிக்கான குரல் ஒலிக்கத்
    தொடங்கியது.
  • ஆரிய சமாஜம்
    இந்து மதத்தின் உயரிய
    தன்மைகளை எடுத்துரைத்தது.
  • வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் தோன்றிய
    பசு பாதுகாப்பு கழகங்கள்
    இந்து வகுப்புவாதம் வளர்வதற்கு ஊக்கம் அளித்தது.
  • இந்து தேசியவாதிகளில் ஒருவராகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அன்னிபெசன்ட் அம்மையார் தனது கருத்துக்களை கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். “பண்டைய மதங்களை
    புத்துயிர்ப்பு செய்து
  • வலுப்படுத்தி உயர்த்துவதே இந்தியர்களின் முதற்பணி”.
  • இது கடந்த
    காலப் பெருமையுடன் ஒரு
    புதிய சுயமரியாதையையும், எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையையும், தேச
    பற்றுடன் கூடிய வாழ்வின்
    ஒரு பேரலையாகவும் நாட்டை
    புனரமைப்பதற்கான தொடக்கமாகவும் உருவாக்கப்படவேண்டும் என
    இந்து தேசியம் அமைவதற்கான ஊக்கம் கொடுத்தார்.

இஸ்லாமிய தேசியம்:

  • இஸ்லாம் அலிகார்
    இயக்கத்தின் வழியாக தன்னை
    வெளிப்படுத்திக் கொண்டது.
  • பிரிட்டிஷார் அலிகார்
    கல்லூரியை ஏற்படுத்த சையது
    அகமதுகானுக்கு ஆதரவளித்ததும் முஸ்லீம் தேசிய கட்சி
    தோன்றவும் உதவியது.
  • வாகாபி இயக்கம்
    இந்து முஸ்லீம் உறவில்
    விரிசலை ஏற்படுத்தியது.
  • வாகாபிகளில் தொடங்கி
    கிலாபத்காரர்கள் வரையானோர்
    அடிமட்ட செயல்பாடுகளில் காட்டிய
    செயற்முனைப்பு முஸ்லீம்களை அரசியல்மயமாக்குவதில் முக்கிய
    பங்காற்றியது.

இந்திய
தேசியம்:

  • இந்திய தேசிய
    காங்கிரஸ், தேசிய வாதம்
    மற்றும் சமயச்சார்பின்மையில் உறுதியாக
    இருந்த போதிலும் அதனுடைய
    உறுப்பினர்கள் இந்து
    வகுப்புவாத அமைப்புகளில் செயல்படுவதைத் தடுக்க முடியவில்லை.
  • ஆரிய சமாஜத்தின்சுத்திமற்றும்சங்கதன்
    நடவடிக்கைகளில் காங்கிரஸ்காரர்களின் பங்கேற்பு இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களை பிளவுபடுத்தியது.
  • இருப்பினும் நிறைய
    காங்கிரஸ்காரர்கள் இந்து
    அமைப்புகளில் ஈடுபட்டாலும் காங்கிரஸ் தலைமை சமயச்சார்பற்றதாகவே விளங்கியது.
  • இந்திய தேசிய
    காங்கிரஸின் மூன்றாவது கூட்டத்தில் பசுவதை குற்றமென அறிவித்து
    தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்
    என காங்கிரஸ்காரர்கள் சிலர்
    வற்புறுத்திய போது
    காங்கிரஸ் தலைமை அதனை
    ஏற்கவில்லை. இவ்வாறாக இந்து
    தேசியம், முஸ்லீம் தேசியம்
    மற்றும் இந்திய தேசியம்
    என இந்திய பிரிவினைக்கு பங்கெடுத்துக் கொண்டது.

 

V. செயல்பாடு (மாணவர்களுக்கானது)

1. 1875லிருந்து இந்தியாவில் நடைபெற்ற இந்துமுஸ்லிம்
கலகங்களைத் தொகுத்து எழுதுக.

2. மதம் பொதுவெளிக்கு வரலாமா? – என்பது குறித்து
விவாதம் செய்க.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!