திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு..💐தென்காசி ஆகாஷ் IAS அகாடமி நடத்தும் மாபெரும் TNPSC திருக்குறள் போட்டி1,00,000 பரிசு🎁ரூபாய் 1 லட்சம் பரிசுத் தொகையுடன் திருக்குறள் விருதும் பெற தயாராகுங்கள்...தமிழகம் முழுவதும் 37 கிளைகளில்..குரூப் IV,II...
இலவச ஓவியப் பயிற்சிமதுரையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச ஓவியப் பயிற்சி அளித்து கலை சேவைகளில் வெற்றி வாகை சூடி பல விருதுகளை வாங்கி குவித்து வருகிறார் மதுரை அய்யர்பங்களா ஓவிய கலைஞர்...
பள்ளி மாணவர்களுக்கான Online QuizAdithya Informindz - 2021 National Level OnlineHunt the website: www.skacas.ac.in to attend quiz & grab the prizeFor +1 and +2 StudentsQuiz Rounds...Prelims: 13.01.2021 to...
குரூப்- 1 தேர்வு வினா-விடை தவறு குறித்து நிபுணர் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். தவறுகள் இருந்தால் சரிசெய்யப்பட்டு பிப்ரவரி முதல் வாரத்திற்குள் முடிவுகள்...
2020- 21 ஆண்டுக்குரிய 12ம் வகுப்பு குறைக்கப்பட்ட பாடத்திட்டம் (SYLLABUS) பள்ளிக் கல்வித் துறை வெளியீடு12th STD New Syllabus All Subjects in One PDF - Download HereMaths (...
சேலம் ஆவின் பொதுமேலாளர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். நர்மதாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:சேலம் ஆவின் பால்பண்ணையில் இளங்கலை அறிவியல் (கெமிஸ்ட்ரி) முடித்தவர்கள் மட்டும் "தொழில் பயிற்சி பழகுனர்" ஆக அமர்த்த...
குரூப் B, C போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் B, C போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு, 21ல் துவங்குகிறது.அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், தற்போது, வருமானவரித்துறை ஆய்வாளர், சப்-இன்ஸ்பெக்டர், கோட்ட கணக்குப்பதிவாளர், இளம் புள்ளியியல் அலுவலர் உள்ளிட்ட 6506 பணியிடங்களுக்கு, குரூப் B, C தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.மிகக் குறைந்த விலையில் Amazon-ல் இங்கே பொருட்கள் வாங்கிடுங்கள் இம்மாதம், 31ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள், வயது வரம்பு தளர்வுகளுடன் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான விபரங்களுக்கு, https://ssc.nic.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வரும் 21ம் தேதி துவங்குகிறது. பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர் 0421 - 2971152 என்ற எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
குரூப்-2 தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்பு-சிவந்தி அகாடமிதிருச்செந்தூர் சிவந்தி அகாடமி சார்பில், குரூப்-2 தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 தேர்வை சிறப்பாக எழுத...
சென்னையில் இயங்கி வரும் தனித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.இந்த ஆன்லைன் பயிற்சி எப்படி நடக்கும் என்பதற்கான மாதிரி...
வேலைவாய்ப்பு பெற இளைஞர்கள் எந்த துறைகளில் கவனம் செலுத்தலாம்ஸ்டாக் டெவலப்பர்ஸ் (Full stack developers):டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக ஸ்டாக் டெவலப்பர்ஸ்க்கான தேவை அதிகரித்துள்ளது. வலைதளம் உருவாக்குவது முதல் பராமரிப்பு, நிர்வாகம் என அனைத்து பொறுப்புகளையும் கவனிக்க வேண்டும். front-end மற்றும் back-end - ஐ கையாளும் திறமை ஒருவரிடமே இருந்தால், அவருக்கான தேவை, பெருநிறுவனங்களில் கொட்டிக்கிடக்கிறது. ஜாவா, பைத்தான், ராலிஸ் ஆன் ரூபி (Ruby on Rails) உள்ளிட்ட கோடிங் நுட்பத்தில் திறமை வாய்ந்தவராக இருந்தால், நல்ல நிறுவனங்களில் எதிர்பார்க்கும் ஊதியத்துடன் வேலைகள் தயாராக இருக்கின்றன.செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence):இந்தியாவில் ஆர்டிபிஸியல் இன்டலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு நிபுணர்களுக்கான தேவை உள்ளது. ஏறத்தாழ 2,500 காலியான Artificial intelligence பதவிகள் உள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. Artificial intelligence இயந்திரங்களை இயக்குவது, இந்த துறையில் நிபுணத்துவம் பெற்ற அவர்களின் பொறுப்பு ஆகும். மேலும், AI -ன் அல்காரிதம்ஸ் (algorithms), புரோகிராமிங் (programming) ஆகியவற்றை புரிந்துகொண்டு உருவாக்க வேண்டும். 2018 ஆம் ஆண்டு தேசிய செயற்கை நுண்ணறிவு திட்டத்தை அறிமுகப்படுத்திய மத்திய அரசு, கல்வி, விவசாயம், சுகாதாரம் உளிட்ட அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி வளர்ச்சியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. அதற்கேற்ப, தனியார் மற்றும் அரசு இணைந்து புதிய திட்டங்களை முன்னெடுக்க உள்ளனர். இதனால், இந்ததுறை நல்ல வளர்ச்சியை எட்டுவதற்கான வாய்ப்பு உள்ளது.டேட்டா சயின்டிஸ்ட் (Data scientist):தரவு அறிவியல் அல்லது தரவு பகுப்பாய்வு என்பது ஒரு நிகழ்வை தரவின் அடிப்படையில் முன்கூட்டியே கணித்து கூறுவதாகும். இதனடிப்படையில், ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகளை முன்கூட்டியே கணித்து அதற்கேற்ப, திட்டங்களை வழிவகுத்து நடைமுறைபடுத்துவதாகும். டெக் உலகில் போட்டி கடுமையாக இருப்பதால், டேட்டா சயின்ட்ஸ்ட் படித்தவர்களின் தேவை அதிகளவு இருக்கிறது. இந்த துறையில் சாதிக்க விரும்புபவர்கள் கணிதம், புள்ளியியல், அட்டவணை மற்றும் காட்சிப்படுத்தல் கருவிகளுடன் பணிபுரிதல், SQL, பைதான் ஸ்கிரிப்டிங் மொழிகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.மிகக் குறைந்த விலையில் Amazon-ல் இங்கே பொருட்கள் வாங்கிடுங்கள் டிஜிட்டல் மார்க்கெட்டர்ஸ் (Digital marketers):ஒரு பிராண்டை சந்தைப்படுத்துவதிலும், பிரபலப்படுத்துவதிலும் டிஜிட்டல் மார்க்கெட்டர்ஸின் பங்கு மிகவும் முக்கியமானது. ஏராளமான பிராண்டுகள், டெக் நிறுவனங்கள் இருப்பதால், அவை தங்களை சந்தைப்படுத்திக்கொள்வதில் டிஜிட்டல் மார்க்கெட்டர்ஸை முழுமையாக சார்ந்திருக்கின்றனர். இதனால், அவர்களின் தேவை தொழில்நுட்ப உலகில் அதிகளவு இருக்கிறது. வித்தியாசமான ஐடியா மற்றும் கிரியேடிவ் திங்கிங் உள்ளவர்கள் இந்த துறையில் சாதிக்க முடியும். குறிப்பாக, எம்.பி.ஏ அல்லது டிஜிட்டல் மார்க்கெட்டிங் முடித்தவர்களுக்கு பிரகாசமான வாய்ப்புள்ளது.2021 வேலைவாய்ப்பு:ஐடி நிறுவனங்கள் முழுமூச்சாக டிஜிட்டல் துறையில் முழு கவனத்தையும் செலுத்தி வருகின்றனர். இதனால், தொழில்நுட்ப துறையில் தேர்ந்த நிபுணத்துவம் பெற்றவர்களின் தேவையை அவர்கள் சார்ந்திருக்கின்றனர். இதனால், தற்போது இருக்கும் திறமையை விட, சந்தையின் போக்கு அறிந்து அதற்கேற்ப தங்களின் திறமைகளையும் வளர்த்துக்கொள்பவர்கள் டிஜிட்டல் உலகில் நீண்ட நாட்கள் நிலைத்து இருக்க முடியும். ஒரு துறையில் மட்டும் நிபுணத்துவம் பெற்றவர்களாக இல்லாமல், பலதுறையில் வல்லுநர்களாக இருப்பவர்களை மட்டுமே நிறுவனங்கள் விரும்புகின்றனர். அதனால், பல்துறை வல்லுநர்களாக உங்களை தயார்படுத்திக்கொள்ளுங்கள்.