சென்னையில் 14-ம் தேதி (திங்கட்கிழமை) பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “
சென்னையில் 14.08.2023 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், தண்டையார்பேட்டை பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனவும் மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் தடை ஏற்படும் பகுதிகளின் விவரம் பின்வருமாறு:-
தாம்பரம்: பல்லாவரம் கோவளம் தெரு, அதியமான் தெரு, சுபம் நகர், காமாட்சி நகர், கோவிலம்பாக்கம் வடக்குபட்டு மெயின் ரோடு, பெல் நகர், அண்ணாமலை நகர், ராதாநகர் ஜி.எஸ்.டி ரோடு, பாலாஜி பவன் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
தண்டையார்பேட்டை: காலடிபேட்டை டி.எச்.ரோடு, ராஜாகடை, திருச்சினாங்குப்பம், எல்லையம்மன் கோவில் தெரு, எண்ணூர் எக்ஸ்பிரஸ் ரோடு, திலகர் நகர், பி.கே.என் காலனி, குமரன் நகர், பி.பி.டி ரோடு, அத்திபட்டு காட்டுப்பள்ளி, செப்பாக்கம், தமிழ் கொரஞ்சியூர், கே.ஆர் பாளையம் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் மின் தடை செய்யப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


