October 21, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

October 21, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers


 • ஆல்பிரட் நோபல் பிறந்த தினம் - அக்டோபர் 21, 1833
 • உலக அயோடின் குறைபாடு தினம் - அக்டோபர் 21
 • நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இருசக்கர வாகனங்களின் ஏற்றுமதி எத்தனை சதவீதம் உயர்ந்துள்ளது? 4
 • தொலை தொடர்பு சேவை தொடர்பாக டிராய் கொண்டு வரும் மாற்றங்கள், இந்தியாவை தொழில்நுட்ப ரீதியாக பின்தங்கிய நாடாகவே மாற்றும் என்று எந்த நிறுவனம் தெரிவித்துள்ளது? ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்
 • எந்த நிறுவனத்தை முழுவதுமாக தனியாருக்கு விற்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது? ஏர் இந்தியா நிறுவனத்தை
 • HDFC வங்கி செப்டம்பர் மாதம் முடிந்த நடப்பு நிதி ஆண்டின், இரண்டாம் காலாண்டில் ரூ. 6,345 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டை விட எத்தனை சதவீதம் அதிகமாகும்? 27
 • பெங்களூரு விஜய் ஹசாரே ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரின் அரை இறுதிக்கு எந்த அணிகள் தகுதி பெற்றுள்ளன? கர்நாடகா மற்றும் குஜராத் அணிகள்
 • தமிழகத்தில் இந்தி மொழி கல்வியை ஆதரித்து போராட்டம், மாநாடு நடத்துவோம் என தெரிவித்துள்ளது யார்? சிவசேனா மாநிலத்தலைவர் ஜி. ராதாகிருஷ்ணன்
 • மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக முதல்வர் பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை எந்த நிறுவனம் வழங்கியது? டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
 • எந்த நாட்டில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் , தேச தந்தை மகாத்மா காந்தி பிறந்து 150 ஆண்டுகள் ஆனதை குறிக்கும் விதமாக அவரது மார்பளவுச் சிலையை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்? பிலிப்பின்ஸ்
 • சீனாவை விட்டு வெளியேறும் பன்னாட்டு நிறுவனங்களின் அடுத்த முதலீட்டு இலக்கு எந்த நாடாக உள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்? இந்தியா
 • இந்தியா - அமேரிக்கா இடையேயான வர்த்தகம், புவிசார் அரசியல் குறித்து நடைபெறவிருக்கும் கலந்தாலோசனைக்கூட்டம் இன்று எங்கு நடைபெறவுள்ளது? டெல்லி
 • பாகிஸ்தானில் கர்தார்பூர் வழித்தடம் எப்போது திறக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார்? நவம்பர் 9.ம் தேதி
 • ஏர் இந்தியா நிறுவனத்தின் 100 சதவீத பங்கு விற்பனைக்கான ஒப்பந்த புள்ளிகளை எந்த மாதம் கோர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன? அடுத்த மாதம்
 • எந்த பகுதியில் உள்ள உலகின் மிக உயரமான போர் முனையான சியாச்சினுக்கு, வடக்கு பிராந்திய தளபதி ரன்வீர் சிங் வருகை தந்தார்? ஜம்மு - காஷ்மீரின் லடாக் பகுதியில்
 • கேரளா முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் அவர்கள் தனது எத்தனையாவது பிறந்தநாளை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினார்? 96வது
0/Post a Comment/Comments

Previous Post Next Post