Join Whatsapp Group

Join Telegram Group

Private Jobs

Government Jobs

Ostrich Details in Tamil – நெருப்புக்கோழி பற்றிய உண்மைகள் / Facts about Ostrich

நெருப்புக்கோழி பற்றிய உண்மைகள் / Facts about Ostrich

Ostrich என
அழைக்கப்படும் நெருப்புக் கோழிகள் உலகிலேயே மிகப்பெரிய பறவைகளாகும். Struthio Camelus  என்ற அறிவியல்
பெயர் கொண்ட இந்த
பறவைகள் சராசரியாக சுமார்
21/2
மீட்டர் உயரமும், 150 கிலோ
எடையும் கொண்டவை. இந்த
பிரம்மாண்டமான உருவத்தின் காரணமாக இவைகளால் பறக்க
இயலாது. ஆனால் மணிக்கு
சுமார் 70 கிலோ மீட்டர்
வேகத்தில் ஓடக்கூடியவை. ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள சவான்னா
(Savannah)
புல்வெளியில் தான்
நெருப்பு கோழிகள் அதிகமாக
காணப்படுகின்றன. அதே
புல்வெளியில் தான்
ஆப்பிரிக்க சிங்கங்கள், சிறுத்தைகள் மற்றும் கழுதைபுலி போன்ற
விலங்குகளை வேட்டையாடி உண்ணும்
மிருகங்களும் அதிக
அளவில் காணப்படுகின்றன. அசுர
பலம் வாய்ந்த சிங்கங்கள் மற்றும் உலகிலேயே அதிக
வேகமாக ஓடி சென்று
வேட்டையாடக்கூடிய சிறுத்தைகளுக்கிடையே இந்த நெருப்புக்கோழிகளால் எப்படி காலந்தள்ள
முடிகிறது என்றும் நாம்
ஆச்சர்யப்படலாம். ஆனால்
அதன் பின்னணியில் இருப்பது
அதன் நீளமான மற்றும்
வலிமையான கால்கள்தான். எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள
முழுப்பலத்தையும் பயன்படுத்தி தனது காலால் ஒரு
உதை விட்டால் தன்னை
வேட்டையாட வரும் விலங்குகளின் விலா எலும்புகள் நொறுங்கி
தூள்தூளாகிவிடும். இதன்
காரணமாகவே இவைகளால் அங்கு
வாழ முடிகிறது. நெருப்புக் கோழிகள் அனைத்துண்ணிகளாகும். தாவரங்களின் வேர்கள், பூக்கள், புழு,
பூச்சிகள், பல்லி முதலானவற்றை உணவாக்கிக் கொள்ளும்

இவை
பெரும்பாலும் குழுக்களாக வாழ்கின்றன. அதிகபட்சமாக ஒரு
குழுவில் ஆண், பெண்
பறவைகள், சிறிய குஞ்சுகள்
என 12 பறவைகள் வரை
இருக்கும். பெண் பறவை
ஒரு சமயத்தில் 11 முட்டைகள்
வரை இடும், அடைக்காக்கப்பட்ட முட்டைகள் 40 நாட்களில்
குஞ்சு பொறிக்கும் நெருப்புக்கோழியின் மூளை அதன்
கண்களைவிட சிறியது. ஆண்  பறவைகள் கருமையான
இயற்கைகளுடனும், உருவத்தில் பெரியதாகவும் இருக்கும்.
பெண் 
பறவைகள் சாம்பல் நிற
இறக்கைகளுடன் சற்று
சிறியதாக காணப்படும்.

Leave a Comment

×

உங்களிடம் உள்ள PDF Files xerox போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

× Xerox Shop