+2 அகமதிப்பீட்டு மதிப்பெண்
பட்டியல் – கால அட்டவணை
வெளியீடு
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச்
மாதம் முதல் கொரோனா
கட்டுப்பாடு நடவடிக்கையாக பள்ளிகள்
மூடப்பட்டன. அனைத்து மாணவர்களும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்
கொண்டு உயர்கல்வி மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் திறக்கப்பட்டன. பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாடு விதிகள்
பின்பற்றப்பட்டது.
ஆனால்
பள்ளிகள் திறக்கப்பட்டு 2 மாதங்கள்
மட்டுமே ஆன நிலையில்
பள்ளிகளில் CORONA தாக்கம்
அதிகமாக பரவி வருவதால்
பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன்
மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டன. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே
3-ஆம் தேதி நடைபெற
உள்ளது. அதற்கான பணிகள்
நடைபெற்று வருகின்றனர். மேலும்
மாணவர்களுக்கு தற்போது
இரண்டாம் பருவத்தேர்வுகள் நடைபெற்று
வருகின்றன.
12 ஆம்
வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை
தேர்வுகள் ஏப்ரல் 16 ஆம்
தேதி முதல் தொடங்கப்பட உள்ளன. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான அகமதிப்பீட்டு மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான கால
அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி
ஏப்ரல் 8-ஆம் தேதி
முதல் ஏப்ரல் 16 ஆம்
தேதி வரை அகமதிப்பீட்டு மதிப்பெண்களை பதிவேற்றம் செய்வதற்கான படிவங்களை தலைமை
ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்யலாம்.
ஏப்ரல்
15 ஆம் தேதி முதல்
ஏப்ரல் 22 ஆம் தேதி
வரை தலைமை ஆசிரியர்கள் அகமதிப்பீட்டு மதிப்பெண்களை பதிவேற்றம் செய்யலாம். ஏப்ரல்
26 ஆம் தேதி அகமதிப்பீட்டு மதிப்பெண்களை தலைமை
ஆசிரியர்கள் மாவட்ட கல்வி
அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஏப்ரல் 28 ஆம்
தேதி மாவட்ட அலுவலகங்களில் இருந்து அகமதிப்பீட்டு பட்டியலை
அரசு தேர்வு இயக்கத்திற்கு அனுப்ப வேண்டும்.