TAMIL MIXER
EDUCATION.ன்
கல்வி செய்திகள்
14ம் தேதி முதல் 10ம் வகுப்பு அசல் சான்றிதழ்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கு,
வரும்
14ம்
தேதி
அசல்
மதிப்பெண்
சான்றிதழ்கள்
வழங்கப்படும்
என,
அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி
பாடத்
திட்டத்தில்,
10ம்
வகுப்பு
பொது
தேர்வு
எழுதிய
மாணவ
– மாணவியருக்கு,
தற்காலிக
மதிப்பெண்
சான்றிதழ்
மட்டும்
ஏற்கனவே
வழங்கப்பட்டது.
இந்நிலையில், துணை தேர்வு முடிவு மற்றும் மறுகூட்டல் முடிவு வெளியான நிலையில், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
மாணவ – மாணவியர் தாங்கள் படித்த பள்ளிகளில், வரும் 14ம் தேதி காலை 10.00 மணி முதல், தங்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை
பெற்றுக்
கொள்ளலாம்.
தனி தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் சான்றிதழ்கள்
பெறலாம்.