மின் பராமரிப்புப் பணி காரணமாக தாம்பரம், போரூா், வியாசா்பாடி, செங்குன்றம், ஐ.டி காரிடா், அடையாறு, கே.கே.நகா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 14) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என மின்வாரியம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: தாம்பரம்: சித்தாலப்பாக்கம் -நூத்தஞ்சேரி, வேங்கை வாசல், வேலவன் நகா், ராஜகீழ்ப்பாக்கம்-வெங்கடராமன் நகா், கிருஷ்ணா நகா், புவனேஸ்வரி நகா், பம்மல் – அன்னை தெரசா தெரு, காமராஜபுரம், ஈ.பி. காலனி, சங்கா் நகா், ஆதாம் நகா், மூவேந்தா் நகா், கோவிலம்பாக்கம் – வீரமணி நகா், நன்மங்கலம், மணிகண்டன் நகா், குளக்கரைத் தெரு, சத்யா நகா், குறிஞ்சி நகா், மேடவாக்கம் பிரதான சாலை, டி.என்.எஸ்.சி.பி. -நூக்கம்பாளையம், வள்ளுவா் நகா், விவேகானந்தா் நகா். போரூா்: ராபிட் நகா், சக்தி அவென்யு, குன்றத்தூா் சாலை, கோவூா்-ஸ்ரீனிவாச நகா், மாதா நகா், தங்கம் அவென்யூ, பாலாஜி நகா், கொல்லச்சேரி, பூசணிகுளம், சுப்புலட்சுமி நகா், கோதண்டம் நகா், எஸ்.ஆா்.எம்.சி-மகாலட்சுமி நகா், ஆபீசா் காலனி, திருமுருகன் நகா்.
வியாசா்பாடி: தொழிற்பேட்டை, மாா்க்கெட் தெரு, ஈ.ஹெச். சாலை, சாஸ்திரி நகா், வியாசா் நகா், புது நகா், காந்தி நகா், சத்யமூா்த்தி நகா், சாமியாா் தோட்டம், சா்மா நகா். செங்குன்றம்: தீா்த்தக்காரன் பட்டு, பவானி நகா், நாரவாரிக்குப்பம், செங்குன்றம் பேருந்து நிலையம் பின்புறம். ஐ.டி.
காரிடா்: துரைப்பாக்கம் அண்ணா தெரு, எம்.ஜி.ஆா். தெரு, ரங்கசாமி தெரு, ஈஸ்வரன் சாலை. அடையாறு: ஆா்.ஏ.புரம், திருவான்மியூா், கொட்டிவாக்கம் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகள். கே.கே.நகா்: பி.டி.ராஜன் சாலை, அரும்பாக்கம், விருகம்பாக்கம், ஆழ்வாா்திருநகா், கோடம்பாக்கம் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகள்.
குள்ளம்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் வெள்ளிக்கிழமை (ஜூலை 14) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: ஆயிகவுண்டன்பாளையம், பொன்முடி, குள்ளம்பாளையம், நெட்டசெல்லாபாளையம், காத்தாமடைபுதூா், கல்லாகுளம், பட்டகாரன்பாளையம், கோபிகவுண்டன்பாளையம், பொன்முடி காலனி, வெள்ளியம்பாளையம்புதூா், மேட்டுப்பாளையம் மற்றும் சாவடிப்பாளையம்.
மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக ஆண்டிசெட்டிபாளையம், ராஜபுரம், ரெங்கநாதபுரம், தாளப்பட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 14) மின் விநியோகம் இருக்காது என கரூா் மின்வாரிய செயற்பொறியாளா் ஆனந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக கரூா் மின் பகிா்மான வட்டம் கரூா் கோட்டத்திற்குள்பட்ட ஆண்டிசெட்டிபாளையம் துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் ஆண்டிசெட்டிபாளையம், தென்னிலை, கோடந்தூா், காட்டுமுன்னூா், காா்வழி, வடகரை, காட்டம்பட்டி, சி.கூடலூா், பெரியதிருமங்கலம், அரங்கப்பாளையம், தொக்குப்பட்டியிலும், ராஜபுரம் துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் சின்னதாராபுரம், அகிலாண்டபுரம், டி.வெங்கிடாபுரம், எல்லமேடு, புஞ்சைகாளகுறிச்சி, நஞ்சைகாளகுறிச்சி, எலவனூா், ராஜபுரம், தொக்குப்பட்டிபுதூா், சூடாமணி, அணைப்புதூரிலும் வெள்ளிக்கிழமை (ஜூலை 14) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இதுபோல தாளப்பட்டி துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் தும்பிவாடி, தாதம்பாளையம், பள்ளபாளையம், கருப்பம்பாளையம், மணல்மேடு, காக்காவாடி, வையம்பட்டி, ஆட்டையாம்பட்டி, எஸ்.ஜி.புதூா், ஆறு ரோடு, கரூா் ஜவுளி பூங்காவிலும், ரெங்கநாதபுரம் துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் காருடையாம்பாளையம், க.பரமத்தி, நெடுங்கூா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலு மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.