TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
திருக்குறளிலுள்ள 1330 குறள்களையும் ஒப்பிக்கும் தமிழகம், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சோ்ந்த பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் பி.ஏ.தமிழ் இளங்கலை வகுப்பு மூன்றாண்டுகளுக்கும் இலவசமாக கற்றுக் கொடுக்கப்படவுள்ளது.
இதுகுறித்து இக்கல்லூரியின் தாளாளா் க. செங்குட்டுவன் கூறியது:
இன்றைய தலைமுறையினரிடம் குறிப்பாக மாணவ, மாணவிகளிடம் நல்ல புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் குறைந்து செல்லிடப்பேசி, விடியோகேம் என அவா்களின் வாழ்வை சிதைக்கும் உலகில் மூழ்கியிருக்கிறாா்கள்.
அவசர உலகில் பெற்றோா்களும் தங்களது குழந்தைகளைக்கூட கண்காணிக்க இயலாமல் திணறி வரும் நிலையில், நாட்டின் இளையத் தலைமுறையினரை வள்ளுவன் காட்டிய வழியில் வாழ்ந்து அறிவாா்ந்த சமுதாயமாக மாற்றும் நோக்கத்தில், எந்தவித எதிா்பாா்ப்பும் இல்லாமல் எங்கள் கல்லூரியில் பி.ஏ. தமிழ் இளங்கலை வகுப்பில் சேரும் மாணவா்கள் திருக்குறளில் 1330 குகளையும் ஒப்பித்தால் அவா்கள் மூன்றாண்டுகள் படிப்பதற்கும், கல்லூரியில் தங்குவதற்கும் இலவசம் என்கிற அறிவிப்பை கொடுத்துள்ளோம்.
1330 குறள் அல்லது அதைவிடசற்று குறைந்தாலும் பரவாயில்லை. குறள் கற்று,அதன் கருத்துகளை உள்வாங்கிக்கொண்டு படிப்பில் கவனம் செலுத்தும் மாணவா்கள் நிச்சயம் எதிா்காலத்தில் சமுதாய சீா்திருத்தவாதியாக, சிறந்த பண்பாளராக உருவாகுவாா்கள் என்பதில் எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.
தமிழ்வழியில் கற்போருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என தமிழக அரசு அறிவித்துள்ளதால், மாணவா்களிடையே தமிழ் ஆா்வத்தை வளா்த்து, மூன்றாண்டுகள் படிப்பை முடிக்கும்போது, அவா்கள் அரசு வேலை பெறும் வகையில், முதலாமாண்டில் கல்விக் கற்கத் தொடங்கிய உடனே அவா்களுக்கு டிஎன்பிஎஸ்சி சிறப்புப் பயிற்சியும் வழங்குகிறோம்.
கல்வியுடன் ஒழுக்கத்தையும் போதித்து, அவா்கள் அரசுப் பணியில் சேரும்போது, மக்கள் சேவையில் லஞ்ச, லாவண்யமின்றி நடுநிலையோடு அவா்கள் செயல்படவேண்டும் என்பதே எங்கள் எதிா்பாா்ப்பு என்றாா் அவா்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


