சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓவியப் போட்டி நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 13 ஆம் தேதிக்குள் விருதுநகா் அரசு அருங்காட்சியகத்தில் ஓவியங்களை வழங்க வேண்டும் என காப்பாளா் கிருஷ்ணம்மாள் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை மேலும் கூறியதாவது: 75 ஆம் ஆண்டு சுதந்திர தின வைர விழாவை முன்னிட்டு விருதுநகா் அரசு அருங்காட்சியகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் இணைந்து ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஓவியப் போட்டி நடத்த உள்ளோம்.
எனக்குப் பிடித்த சுதந்திரப் போராட்ட வீரா் என்ற தலைப்பில் ஓவியப் போட்டி நடைபெற உள்ளது. வரைந்த ஓவியங்களை ஆக., 13 அன்று மாலை 5 மணிக்குள் அரசு அருங் காட்சியகத்தில் வழங்க வேண்டும். அதில் மாணவா்களின் பெயா், வகுப்பு, பள்ளி, முகவரி, செல்லிடப்பேசி எண்களை எழுத வேண்டும்.
அன்றைய தினம் ஓவிய போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். சிறந்த மூன்று ஓவியங்களுக்கு விரைவில் பரிசு வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 94436 71084 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.