எம்.டி.,
எம்.எஸ்., படிப்புகளுக்கு 12ம் தேதி மாப்
அப் கவுன்சிலிங்
எம்.டி.,
மற்றும் எம்.எஸ்.,
முதுநிலை மருத்துவ மேற்படிப்புகளுக்கான மாப் அப்
கவுன்சிலிங் வரும் 12ம்
தேதி நடக்கிறது.
காலை
9.30 மணிக்கு துவங்கும் முதல்
அமர்வு கவுன்சிலிங்கில் சிறப்பு
இட ஒதுக்கீட்டு பிரிவு
மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.தொடர்ந்து 10 மணிக்கு அரசு
ஒதுக்கீட்டு இடங்கள், மதியம்
12 மணிக்கு நிர்வாக இடங்களுக்கு மாப் அப் கவுன்சிலிங் நடக்கிறது.
மாப்
அப் கவுன்சிலிங் நேரடியாக
அல்லது ஆன்லைன் மூலமாக
கலந்து கொள்ள உள்ளனராக
என மாணவர்கள் முதலில்
தேர்வு செய்ய வேண்டும்.முழு
கல்வி கட்டணம் செலுத்தினால் மட்டுமே இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியும்.
இரண்டாம்
கட்ட கவுன்சிலிங்கில் பங்கேற்று
சீட் எடுத்து கல்லுாரி
சேர்ந்த மாணவர்கள் முதுநிலை
மருத்துவ படிப்பிற்கான கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளலாம்.மாப்
அப் கவுன்சிலிங்கில் சீட்
எடுத்த மாணவர்கள் இடம்
கிடைத்த கல்லுாரியில் சேரவில்லையெனில் அவர்கள் கட்டிய பணம்
திரும்ப கிடைக்காது. சென்டாக்
அனுப்பும் 1 சீட்டுக்கு 10 மாணவர்கள்
என்ற மாணவர் சேர்க்கைக்கான பரிந்துரைப்படி தனியார்
கல்லுாரி நிர்வாகம் சீட்
நிரப்பவில்லையென்றாலும் கூட
கட்டணம் திரும்ப கிடைக்காது.
ஒருவேளை
கல்லுாரி நிர்வாகம் சீட்
நிரப்பினால் முழு கல்வி
கட்டணத்தில் இருந்து 2 லட்சம்
ரூபாய் கழித்துக்கொண்டு ஆறு
மாதத்திற்கு பிறகு தரப்படும்.
இடம் கிடைத்த மாணவர்கள்
வரும் 13ம் தேதி
மாலை 3 மணிக்குள் கல்லுாரி
சேர வேண்டும்.
மேலும்
விபரங்களுக்கு சென்டாக்
இணையதளத்தினை பார்க்கவும். இத்தகவலை சென்டாக் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


