நீட் தேர்வு எழுத உள்ள மாணவர் களுக்கான தேர்வு மைய விவரங் களை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12-ம் தேதி நடத்தப்படுகிறது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு ஆக. 10-ம் தேதியுடன் நிறைவு பெற்றது.
அதன்படி நாடு முழுவதும் மொத்தம் 16 லட்சத்து 14,714 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து, தேர்வுக்கான முன்னேற்பாடுகளை என்டிஏ தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. கரோனா பரவலால் தேர்வு மையங்களை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், நீட் தேர்வு மையங்களின் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இதுகுறித்து என்டிஏ வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நீட் தேர்வு செப்டம்பர் 12-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தேர்வு மைய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த விவரங்களை https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வின்போது ஓஎம்ஆர் விடைத் தாளை பூர்த்தி செய்வது தொடர் பான வழிமுறைகளும் வழங்கப் பட்டுள்ளன. தேர்வுக்கான ஹால் டிக்கெட் விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.