🔰 GROUP 4 தேர்வில் பொது ஆங்கில மாணவர்களுக்கான வாய்ப்பு உருவாக்க பட வேண்டும்.
🔰 பொது ஆங்கிலம் மற்றும் பொதுத் தமிழில் சம அளவில் பாடத்திட்டம், கேள்வியின் கடின தன்மை அமைத்து “Normalisation” முறைப்படியே எப்பொழுதும் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்.
🔰 தேர்வு முடிவுக்கு முன்பு “இறுதி விடைக்குறிப்பு” (Final Ans key) வெளியிட வேண்டும்.
🔰 தேர்வு முடிவுடன் பிரிவு வாரியாக “Cut-off” மதிப்பெண் வெளியிட வேண்டும்.
🔰 GROUP 1 மற்றும் GROUP 2 முதன்மை தேர்வுகளில் தமிழ், ஆங்கிலத்தில் தேர்வு எழுதிய இருவருக்கும் சம அளவில் மதிப்பெண் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
🔰 GROUP 1,2 தேர்வுகளில் 80% இருக்கும் தமிழ் மாணவர்கள் குறைந்தது 50% பணியிடங்களையாவது நிரப்புவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
🔰 வினாத்தாளில் ஆங்கில வடிவ கேள்வியே இறுதியானது என்று இருக்கும் முட்டால்தனமான முறையை நீக்கி தமிழ்/ஆங்கிலம் எதில் பிழை இருந்தாலும் சிறப்பு மதிப்பெண் வழங்கபட வேண்டும்.
🔰 வினாத்தாளில் பிழையில்லாத கேள்வித்தாள் முறை இருக்க வேண்டும்.
🔰 தமிழ் மொழிபெயர்ப்பு “Google Translate” -இல் செய்கிற சிறுபிள்ளை தனமாக இல்லாமல் சரியான வடிவில் இருக்க வேண்டும்.
🔰 UPSC -இல் நடத்துவதை போல் ஒவ்வொரு வருடமும் ஒரே காலத்தில் Prelims, Mains, Results வெளியிட வேண்டும்.
🔰 ஒவ்வொரு ஆண்டும் GROUP 1, GROUPS 2, GROUP 4 தேர்வுகளை நடத்தி எவ்வளவு காலிப்பணியிடங்கள் இருக்கிறதோ அதனை நிரப்ப வேண்டும்.