10 மற்றும் 12-ம்
வகுப்பு மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியினை பதிவேற்றம் செய்யலாம்
10 மற்றும்
12-ம் வகுப்பு தேர்ச்சி
பெற்ற மாணவர்கள் தங்கள்
கல்வித் தகுதியினை தாங்கள்
பயின்ற பள்ளிகளின் மூலமாக
இத்துறையின் இணையதளமான https://tnvelaivaaippu.gov.in/.ல்
பதிவு செய்து அடையாள
அட்டை பெற தமிழக
அரசால் உரிய வழிவகை
செய்யப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில்
வருகை புரியாது இத்துறையின் இணையதளம் வாயிலாக பதிவு
செய்து
கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஏற்படும்
போக்குவரத்துச் செலவு.
காலவிரயம், தேவையற்ற அலைச்சல்கள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஏற்படும்
கூட்ட நெரிசல்கள் ஆகியவை
தவிர்க்கப்படுகிறது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இதனைக்
கருத்தில் கொண்டு தற்போது
2020-2021ஆம் ஆண்டிற்கான பத்தாம்
வகுப்பு தேர்ச்சி பெற்ற
மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்
04.10.2021 அன்று வழங்கப்பட்டு வருவதை
அடுத்து 04.10.2021 முதல்
18.10.2021 வரை 15 நாட்களுக்கு ஒரே
பதிவு மூப்பு தேதி
வழங்கி அவர்கள் பயின்ற
பள்ளியிலேயே இணையதளம் வாயிலாக
வேலைவாய்ப்பு அலுவலக
பதிவுப் பணி நடைபெற
சிறப்பு நடவடிக்கைகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, பள்ளி
கல்வித்துறையுடன் இணைந்து
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு
மற்றும் அரசு உதவி
பெறும் மேல்நிலைப் பள்ளிகள்,
மெட்ரிக் பள்ளிகள் மற்றும்
தனியார் பள்ளிகளிலும் இவ்வசதியினை பயன்படுத்தி மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவுகள் மேற்கொள்ளலாம்.
மேலும்
CBSE பாடத்திட்டத்தில் பயின்ற
மாணவர்கள் தங்கள் கல்வித்தகுதியை வேலைவாய்ப்புத்துறையின் இணையதளத்தில் https://tnvelaivaaippu.gov.in/–ல்
தங்கள் அளவிலேயே online-ல்
பதிவு செய்யலாம்.
முழு விவரங்களுக்கு:
CLICK
HERE
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


