Home Blog தமிழக மக்களுக்கு ரூ.10,000 பரிசு: தேர்தல் தொடர்பான இணையவழி போட்டிக்கான அறிவிப்பு வெளியானது

தமிழக மக்களுக்கு ரூ.10,000 பரிசு: தேர்தல் தொடர்பான இணையவழி போட்டிக்கான அறிவிப்பு வெளியானது

1

Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைக்கிணங்க, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் மற்றும் நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக தேர்தல் நடைமுறைகளில் பொதுமக்களின் பங்கேற்பினை அதிகரிக்கும் விதமாக மாநில அளவில் தேர்தல் தொடர்பான இணையவழி போட்டிகள் தலைமைத் தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு அலுவலகத்தின் இணைய தள முகவரியான www.elections.tn.gov.inல் நடைபெறவுள்ளது.

சுவரொட்டி வரைதல், கவிதை மற்றும் பாடல்கள் எழுதுதல், வாசகம் எழுதுதல் போட்டியில் ஆர்வமுள்ள பொதுமக்கள்அனைவரும் பங்கேற்கலாம். தமிழ்நாடு அலுவலகத்தின் தேர்தல் இணையதளத்தில் ‘ஸ்வீப் (SVEEP) போட்டி 2020- இயங்கலை போட்டிகள்’ என்ற இணையவழி மூலமாக பங்கேற்கலாம். இப்போட்டிகள் அனைத்தும் இணைய தளம் மூலமாக மட்டுமே நடத்தப்படும். இந்தியாவில் தேர்தல்கள் மற்றும் 100 வாக்காளர் பட்டியல் பெயர் பதிவு மற்றும் வாக்குப்பதிவினை அடைவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் என்பதே இப்போட்டியின் முக்கிய கருத்துருவாகும்.

இப்போட்டியில் வரும் 18ம் தேதி மாலை 5 மணி வரை பங்கேற்கலாம். முதல் பரிசு ₹10,000, இரண்டாம் பரிசு ₹7,000, மூன்றாம் பரிசு ₹5,000.மேலும் இத்துறை, நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக தேர்தல்விழிப்புணர்வு தொடர்பான குறும்படம், அனிமேஷன் படங்கள், தேர்தல் பாடல்கள், மீம்ஸ் போன்றவைகளைத் தயாரிக்கும் பொருட்டு ஆர்வமுள்ள ஊடக நிறுவனங்கள், தனிநபரிடமிருந்து விலைப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.


For More Updates Please Visit www.tamilmixereducation.com Again…Thank you…

    1 COMMENT

    1. ஐயா வணக்கம், வாக்குபதிவு எந்திரத்தோடு ஆதாரை இணைக்கலாமே, விரல் ரேகை ஒத்துப்போனால் மட்டுமே வாக்களிக்க முடியும் என்ற கட்டுப்பாட்டை உருவாக்கலாமே, கள்ள ஓட்டு போட முடியாது

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    100
    Xerox (1 page - 50p Only)
    WhatsApp Group
    Exit mobile version