HomeNotesAll Exam Notes6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் - TNPSC Part 7
- Advertisment -

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 7

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் - TNPSC Part 7
6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 7

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 7

TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான 100 தமிழ் முக்கிய கேள்விகள் இங்கே! இந்த தொகுப்பில் 6 முதல் 10 வரை உள்ள 100 முக்கிய தமிழ் கேள்விகள் உள்ளன, இது TNPSC தேர்வுகளில் உங்கள் தேர்வு தயாரிப்பை மேலும் சிறப்பாக செய்ய உதவும்.

இந்த Part 7 இல் உள்ள கேள்விகள் தமிழ் இலக்கணம் மற்றும் பொது அறிவு பற்றிய முக்கியமான பகுதியைக் கவர்ந்துள்ளன. இவை TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கு சிறந்த பயிற்சியாக இருக்கும்.

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 1

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 2

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 3

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 4

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 5

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 6

1. ‘தமிழ்க்கும்மி’ என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?

அ)தமிழ்விடுதூது ஆ)கனிச்சாறு இ)தமிழியககம் ஈ)இன்பத்தமிழ்

விடை: ஆ)கனிச்சாறு

2. “நிலம் ஏட்டுத்திசையிலும் செந்தமிழின் புகழ் எட்டிடவே கும்மிக் கொட்டுங்கடி” – என்று பாடியவர் யார்?

அ)பாரதியார் ஆ)பாரதிதாசன் இ)கவிமணி தேசியவிநாயனகார் ஈ)பெருஞ்சித்திரனார்

விடை: ஈ)பெருஞ்சித்திரனார்

3. பொருந்துக: வார்த்தைகளும் அவை இடம்பெற்றுள்ள நூல்களும்

மீன் – அ)தொல்காப்பியம்
உலகம் -ஆ)குறுந்தொகை
மருந்து – இ) நற்றிணை
உழவர் -ஈ) அகநானூறு

அ) ஆஅஈஇ ஆ) ) அஈஇஆ இ) ) ஆஈஇஆ ஈ)) ஆஅஈஇ

விடை: அ) ஆஅஈஇ

4. உயிர் மகிழ்ச்சி ஆகிய சொல் இடம்பெற்றுள்ள நூல்

அ) தேவாரம், திருவாசகம் ஆ)தொல்காப்பியம், திருக்குறள் இ)திருமந்திரம், திருப்பாவை ஈ)பெரியபுராணம், திருவிளையாடல் புராணம்

விடை: ஆ)தொல்காப்பியம், திருக்குறள்

5. இடப்புறம் – பிரித்து எழுதுக

அ) )இடம் + புறம் ஆ)இடது + புறம் இ) )இடன் + புறம ஈ))இடப் + புறம்

விடை: ஆ)இடது + புறம்

6. சீரிளமை – பிரித்து எழுதுக

அ))சீர்மை + இளமை ஆ) சீர் + இளமை இ) சிரி + ளமை ஈ) சீறு + ளமை

விடை: கீழே கமெண்ட் செய்யவும்

7. குழந்தைகள் ஏற்றத்தாழ்வு இன்றி படிக்க காமராசர் கொண்டுவந்த திட்டம் ………..

அ)இலவச கல்வி திட்டம் ஆ)மதிய உணவு திட்டம் இ)சீருடை திட்டம்
ஈ)இலவச காலணி திட்டம்

விடை: இ)சீருடை திட்டம்

8. நூலகம் இல்லாத பகுதிகளுக்காக தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள திட்டம்

அ)அறிவுப் பூங்கா ஆ)புத்தகச் சோலை இ)வேண்டும் வீட்டுக்கொரு நூலகம் ஈ)நடமாடும் நூலகம்

விடை: ஈ)நடமாடும் நூலகம்

9. மெல்லினத்துக்கு இனஎழுத்து இடம்பெறாத சொல்

அ) மஞ்சள் ஆ)கல்வி இ)தென்றல் ஈ)சங்கம்

விடை: ஆ)கல்வி

10. “பழையன கழிதலும்,புதியன புகுதலும்” இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

அ)வீரசோழியம் ஆ)இலக்கண விளக்கம் இ)நன்னூல் ஈ) தொல்காப்பியம்

விடை: இ)நன்னூல்

11. தமிழ்நாட்டில் பொங்கல் திருவிழா வேறு எந்த பெயரில் அழைக்கப்படுகிறது?

அ)மகரசங்ராந்தி ஆ)உத்தராயன் இ) உழவர் திருவிழா ஈ)லோரி

விடை: இ) உழவர் திருவிழா

12. திருவள்ளுவராண்டை கணக்கிட நடைமுறை ஆண்டுடன் எந்த ஆண்டை கூட்ட வேண்டும்?

அ)15 ஆ)40இ)20 ஈ)31

விடை: ஈ)31

13. பல்லவ மன்னன் நரசிம்மன் எத்தனையாவது நூற்றாண்டைச் சேர்ந்தவர்?

அ) கி.பி.7 ஆ) கி.பி.4 இ) கி.பி.5 ஈ) கி.பி.6

விடை: அ) கி.பி.7

14. ‘ழ’ கரம் ‘ம’ கரத்தை போல இருப்பதால் ……………. என்று அழைக்கப்படும்

அ) மகர ழகரம் ஆ) தந்நகரம் இ)வகர லகரம் ஈ)எதுவுமில்லை

விடை: அ) மகர ழகரம்

15. “தந்நாடு pவளைந்த வெண்ணெல் தந்து பிறநாடு உப்பின் கொள்ளைச் சுற்றி ………… உமணர் போகலும்…. என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?

அ) அகநானூறு ஆ)புறநானூறு இ)கலித்தொகை ஈ)நற்றிணை

விடை: ஈ)நற்றிணை

16. பொருந்துக : தமிழ்ச்சொற்களும் ஆங்கிலச் சொற்களும்

பண்டம் – அ) Heritage
பயணப்படகு – ஆ) voyage
பாரம்பரியம் -இ) commodity
கடல்பயணம் -ஈ) Ferries

அ) இஈஅஆ ஆ) ) அஈஇஆ இ) ) ஆஈஇஆ ஈ)) அஆஈஇ

விடை: அ) இஈஅஆ

17. புண்டையகால தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படாத ஒரு பொருள்

அ)அரிசி, சந்தனம் ஆ) இஞ்சி, மிளகு இ)மயில் தோகை ஈ)பருப்பு

விடை: ஈ)பருப்பு

18. வெள்ளிப் பனிமலைமீது உலவுவோம் மேலைக்கடல் மீத உலவுவோம்- என்று பாடியவர் யார்?

அ)பாரதியார் ஆ)பாரதிதாசன் இ)கவிமணி தேசியவிநாயனகார் ஈ)பெருஞசித்திரனார்

விடை: அ)பாரதியார்

19. நிலையான செல்வம் எது என்று வள்ளுவர் கூறுகிறார்?

அ)தங்கம் ஆ) ஊக்கம் இ)வெள்ளி ஈ)வைரம்

விடை: ஆ) ஊக்கம்

20. பொருந்துக

ஏரி – அ)புடவை
ஏறி -ஆ)வீட்டுக் கூரை
கூரை – இ) மேலே ஏறி
கூறை -ஈ)குளம்

அ) ஆஅஈஇ ஆ) ) அஈஇஆ இ)ஈஇஆஇ ஈ) ஆஅஈஇ

விடை: இ)ஈஇஆஇ

21. வ.உ.சி எழுதிய நூல் எது?

அ)என்கதை ஆ)மனம்போல வாழ்வு இ)மெய்யறிவு மெய்யறம் ஈ)சங்கொலி

விடை: இ)மெய்யறிவு மெய்யறம்

22. இலக்கணமுறைப்படி அமையாவிட்டாலும் இலக்கணமுடையது போல ஏற்றுக்கொள்ளப்படுவது

அ) மரூஉ ஆ)இலக்கண போலி இ)இடக்கரடக்கல் ஈ)மங்கலம்

விடை: ஆ)இலக்கண போலி

23. சுதேச கப்பல் கம்பெனியின் தலைவர் யார்?

அ) அப்பாதுரையார் ஆ)பாண்டித்துரையார் இ)மா.பா.சி ஈ)டி.கே.சி

விடை: ஆ)பாண்டித்துரையார்

24. சுதந்திரம் என்பது எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன் -இக்கூற்று யாருடையது

அ) பகத் சிங் ஆ) லாலா லஜபதி ராய் இ)பாலகங்காதர திலகர் ஈ)அம்பேத்கார்

விடை: இ)பாலகங்காதர திலகர்

25. முத்துராமலிங்க தேவரைக் குறிப்பிடாத பெயரைத் தேர்ந்தெடுக்கவம்

அ)இந்து புத்தசமயமேதை, பிரவசன கேசரி ஆ)சன்மார்க்க சண்டமாருதம் இ)வித்யாபாஸ்கர் ஈ)எதுவுமில்லை

விடை: ஈ)எதுவுமில்லை

26. வுpவசாயிகள் துயர் துடைக்க முத்துராமலிங்க தேவர் ஏற்படுத்திய இயக்கம் எது?

அ)பிரம்ம சமாஜம் ஆ)ஆர்ய சமாஜம் இ) ஜமின் விவசாயகள் சங்கம் ஈ)சமாத சமாஜ் சங்கம்

விடை: இ) ஜமின் விவசாயகள் சங்கம்

27. வங்கசிங்கம் என்று போற்றப்பட்டவர் யார்?

அ)பகத்சிங் ஆ)லாலா லஜபதிராய் இ)நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஈ)திலகர்

விடை: இ)நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

28. “வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல்” என்ற பாடலை தொகுத்து வெளியிட்டவர் யார்?

அ)கோமகள் ஆ)நா.வானமாமலை இ)மணி’ பாண்டி ஈ)சக்திவேல்

விடை: ஆ)நா.வானமாமலை

29. பாஞ்சாலங்குறிச்சியில் …………. நாயை விரட்டிடும்

அ)ஆடு ஆ)எருமை இ)முயல் ஈ)மான்

விடை: இ)முயல்

30. ‘யாண்டு’ – இச்சொல்லின் பொருள் தருக

அ)இங்கு ஆ)எங்கு இ) அங்கு ஈ)எங்கு

விடை: ஆ)எங்கு

31. பொருட்செல்வம் – பிரித்து எழுதுக

அ) பொருல் +செல்வம் ஆ)பொரு +செல்வம் இ) பொருட் + செல்வம் ஈ)பொருள் + செல்வம்

விடை: ஈ)பொருள் + செல்வம்

32. சொல்லின் இறுதியிலும் இடையிலும் வராத குறுக்கம் எது

அ)மகரகுறுக்கம் ஆ) ஔகார குறுக்கம் இ)ஐகார குறுக்கம் ஈ)எதுவுமில்லை

விடை: ஆ) ஔகார குறுக்கம்

33. மகரகுறுக்கம் இடம்பெறாத சொல் எது?

அ)பழம் விழுந்தது ஆ)பணம் கிடைத்தது இ)போன்ம் ஈ)மருணம்

விடை: ஆ)பணம் கிடைத்தது

34. ‘வேட்கை’- இதில் வரும் ஐகார குறுக்கம் பெறும் மாத்திரை

அ) ஒன்றரை ஆ)ஒன்று இ) அரை ஈ) கால் மாத்திரை

விடை: அ) ஒன்றரை

35. பூம்புகாரில் சிற்பக் கலைக்கூடம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு

அ)1990 ஆ)1973 இ)2000 ஈ)2020

விடை: ஆ)1973

36. செப்பேடு – பிரித்து எழுதுக

அ) செப் + ஏடு ஆ)செப்பு + ஏடு இ) செப்பு + ஈடு ஈ) செப் + பேடு

விடை: ஆ)செப்பு + ஏடு

37. நாட்காட்டி வரையும் முறையின் முன்னோடியாகத் திகழ்ந்தவர்

அ)கொண்டையராஜூ ஆ)ராஜா ரவிவர்மா இ)ஒவமாக்கள் ஈ)ஓவியப்புலவர்

விடை: அ)கொண்டையராஜூ

38. மிளகாய் வற்றலின் ………….. தும்மலை வரவழைக்கும்

அ)மணம் ஆ)நெடி இ)நிறம் ஈ)எதுவுமில்லை

விடை: ஆ)நெடி

39. பொருநதாத ஒசை உடைய சொல் எது?

அ)பாய்கையால் ஆ)மேன்மையால் இ)திரும்புகையில் ஈ)அடிக்கையால்

விடை: இ)திரும்புகையில்

40. “பெய்து பழகிய மேகம்” என்னும் நூலை எழுதியவர் யார்?

அ)கோமகள் ஆ)வேணுகோபால் இ)தேனரசன் ஈ)நாகூர் ருமி

விடை: இ)தேனரசன்

41. வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்நாடு வாழ்க வாழியவே- என்ற பாடலை எழுதியவர் யார்?

அ)பாரதியார் ஆ)பாரதிதாசன் இ)கவிமணி தேசியவிநாயனகார் ஈ)பெருஞசித்திரனார்

விடை: அ)பாரதியார்

42. “செந்தமிழே செங்கரும்பே செந்தமிழர் சீர்காக்கும் நந்தா விளக்கனைய நாயகியே”- என்றா பாடலை இயற்றியவர் யார்?

அ)து.அரங்கன் ஆ)பாரதிதாசன் இ)கவிமணி தேசியவிநாயனகார் ஈ)காசி அனந்தன்

விடை: அ)து.அரங்கன்

43. தமிழ்மொழியை எழுத இருவகை எழுத்துக்கள் இருந்தன என்பதற்கு சான்றாக இருக்கும் கல்வெட்டு

அ)புகளுர் கல்வெடடு ஆ)அசோகர் கல்வெட்டு இ)அரச்சலுர் கல்வெட்டு ஈ)கருர் கல்வெட்டு

விடை: இ)அரச்சலுர் கல்வெட்டு

44. கல்வெட்டுக்களில் எள்ள எழுத்துக்களின் அமைப்பு பற்றிய செய்திகள் எது உண்மையில்லை

1)ஸ என்னும் எழுத்து காணப்படுகிறது
2)மெய்யைக் குறிக்க புள்ளி பயன்படுத்தவில்லை
3)எ,ஒகர எழுததுக்களில் குறில் நெடில் வேறுபாடு இருக்கிறது
4)மேற்கண்ட எதுவுமில்லை

அ)1,2 மட்டும் ஆ)2,4மட்டும் இ)3 மட்டும் ஈ)எதுவுமில்லை

விடை: இ)3 மட்டும்

45. தமிழ்மொழி இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற …………… காரணமாக அமைந்தது

அ) அச்சுக்கலை ஆ) ஓவியக்கலைஇ) பேச்சுக்கலை ஈ)சிற்பக்கலை

விடை: அ) அச்சுக்கலை

46. “தமிழின் தனிப்பெரும் சிறப்புகள்” என்ற நூலை எழுதியவர் யார்?

அ)இரா.இளங்குமரன் ஆ) பாவாணர் இ)மறைமலையடிகள் ஈ)பரிதிமாற்கலைஞர்

விடை: அ)இரா.இளங்குமரன்

47. நிலைமொழியும் வருமொழியும் இணையும் பொழுது ஓர்எழுத்து மறைவது ………. புணர்ச்சி

அ)தோன்றல் புணர்ச்சி ஆ)கெடுதல் புணர்ச்சி இ)திரிதல் புணர்ச்சி ஈ)இயல்பு புணர்ச்சி

விடை: ஆ)கெடுதல் புணர்ச்சி

48. ”உப்புக்டலைக் குடிக்கும் பூனைகள்’ என்ற நூலை எழுதியவர் யார்

அ)நாகூர் ருமி ஆ) வேணுகோபால் இ) கன்னிவாடி சிரங்கராயன் ஈ)) அழகிரிசாமி

விடை: இ) கன்னிவாடி சிரங்கராயன்

49. வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம்

அ) சென்னை ஆ)ஈரோடு இ)கோவை ஈ) தஞ்சாவூர்

விடை: இ)கோவை

50. பொருந்துக: நகரங்களின் பெயரும் சிறப்பு அடைமொழிகளும்

1.தூத்துக்குடி – அ)குட்டி ஜப்பான்
2. சிவகாசி -ஆ)தூங்க நகரம்
3. மதுரை – இ) தீப நகரம்
4.. திருவண்ணாமலை -ஈ)முத்துநகரம்

    அ) ஆஅஈஇ ஆ) ) அஈஇஆ இ) ஆஅஈஅ ஈ)) ஆஅஈஇ

    விடை: இ) ஆஅஈஅ

    51. நேதாஜி ஆயத்த ஆடை அமைந்துள்ள மாவட்டம்

    அ) திருப்பூர் ஆ)கோவை இ)சென்னை ஈ)திருப்பத்தூர்

    விடை: அ) திருப்பூர்

    52. தமிழகத்தின் மஞ்சள் சந்தை எங்கு நடைபெறுகிறது?

    அ) திருப்பூர் ஆ)கோவை இ)சென்னை ஈ)ஈரோடு

    விடை: ஈ)ஈரோடு

    53. தேசிய அளவில் புகழ்பெற்ற காங்கேயம் காளைகள் எந்தமாவட்டத்தை சேர்ந்தவை

    அ) திருப்பூர் ஆ)கோவை இ)சென்னை ஈ)ஈரோடு

    விடை: அ) திருப்பூர்

    54. அம்பேத்கார் நிறுவிய அரசியல் கட்சியின் பெயர்

    அ)சமாத சமாஜ் சங்கம் ஆ)சுதந்திர தொழிலாளர் கட்சி இ)பிரம்ம சமாஜம் ஈ)ஆர்ய சமாஜம்

    விடை: ஆ)சுதந்திர தொழிலாளர் கட்சி

    55. 1930 முதல் வட்ட மேசை மாநாட்டில் அம்பேத்காருடன் கலந்தகொண்ட தமிழர்கமலர் பானையை

    அ)நாகூர் ருமி ஆ)இராவ் பகதூர், இரட்டைமலை சீனிவாசன் இ) கன்னிவாடி சிரங்கராயன் ஈ)) அழகிரிசாமி

    விடை: ஆ)இராவ் பகதூர், இரட்டைமலை சீனிவாசன்

    56. வரலாற்று ஆசியர்களால் மிகசசிறந்த ஆவணம் என்று போற்றப்படுவது எது?

    அ)அம்பேத்கார் எழுதிய புத்தரும் அவரின்தம்மமும் என்ற நூல்
    ஆ) அம்பேத்கார் தயாரித்த இந்திய அரசியலமைப்பு சட்டம்
    இ) அம்பேத்கார் எழுதிய ஜாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற கட்டுரை
    ஈ)அம்பேத்கார் எழுதிய இந்திய தேசய பங்கு வீதம்

    விடை: ஆ) அம்பேத்கார் தயாரித்த இந்திய அரசியலமைப்பு சட்டம்

    57. ‘நட
    நாளை மட்டுமல்ல
    இன்றும் நம்முடையதுதான்
    நட
    -இக்கவிதையை எழுதியவர் யார்?

    அ)நாகூர் ருமி ஆ) வேணுகோபால் இ)மு.மேத்தா ஈ) அழகிரிசாமி

    விடை: இ)மு.மேத்தா

    58. மார்கழி திங்களில் அதிகாலையில் பெணகள் துயிலெழுந்து மற்ற பெண்களையும் கூட்டிக்கொண்டு ஆற்றுக்கு சென்று நீராடி இறைனை வழிபடுவதை எவ்வாறு அழைப்பர்?

    அ)ரம்ஜான் ஆ)பாவை நோன்பு இ)தவக்காலம் ஈ) சிவராத்திரி

    விடை: ஆ)பாவை நோன்பு

    59. யாப்பு இலக்கணத்தின்படி செய்யுளுக்கு உயிர் உறுப்புகள் எத்தனை?

    அ)8 ஆ5 இ)6 ஈ)4

    விடை: இ)6

    60. பொருந்துக: செய்யளின் உறுப்புகளும் அதன் வகைகளும்

    தளை – அ) 5வகை
    அடி -ஆ) 7 வகை
    தொடை – இ) வகை
    சீர் -ஈ) 3 வகை
    அசை உ) 4வகை
    எழுத்து ஊ) 8வகை

    அ) ஆஅஊஉஇஈ ஆ) அஈஇஆ இ) ஆஅஈஅ ஈ) ஆஅஈஇ

    விடை: அ) ஆஅஊஉஇஈ

    61. இஸ்ரோவில் எத்தனை வகையான திட்டங்கள் எப்போதும் இருக்கும்?

    அ)8 ஆ5 இ)3 ஈ)4

    விடை: இ)3

    62. ‘கையருகே நிலா’ என்ற நூலை எழுதியவர் யார்

    அ)நாகூர் ருமி ஆ) வேணுகோபால் இ)மயில்சாமி அணணாதுரை ஈ) அழகிரிசாமி

    விடை: இ)மயில்சாமி அணணாதுரை

    63. திருக்குறளில் கோடி என்ற சொல் எத்தனை முறை இடம் பெற்றுள்ளது?

    அ) 8 ஆ) 7 இ) 4 ஈ) 6

    விடை: ஆ) 7

    64. ‘தமிழர் செவ்விலக்கியத்தில் பறவைகள’ என்ற நூலை எழுதியவர் யார்?

    அ) ரத்னம் ஆ) வேணுகோபால் இ) நா. குமரேசன் ஈ) கன்னிவாடி சீரஙகராயன்

    விடை: அ) ரத்னம்

    65. அரிக்க மேட்டில் கண்டெடுக்கப்பட்டது

    அ) ரோமானிய நாணயம் ஆ) ரோமானிய மண்பாண்டம் இ) ரோமானிய கலைப்பொருட்கள் தோற்றமும் வளர்ச்சியும் ஈ) ரோமனிய ஆயுதங்கள்

    விடை: ஆ) ரோமானிய மண்பாண்டம்

    66. ஏறுகோள் பற்றிக்குறிப்பிடும் நூல்கள்

    அ) கலித்தொகை ஆ) சிலம்பு இ) புறப்பொருள் வெண்பா மாலை ஈ) இவை அனைத்தும்

    விடை: ஈ) இவை அனைத்தும்

    67. எருதுகட்டி என்னும் மாடுதழுவுதலைப் பற்றிக் கூறும் நூல் எது

    அ) கலித்தொகை ஆ) சிலம்பு இ) புறப்பொருள் வெண்பா மாலை ஈ) கண்ணுடையம்மன் பள்ளு

    விடை: ஈ) கண்ணுடையம்மன் பள்ளு

    68. பொருந்துக: காய்கறிகளும் அவற்றுக்கு தெவையான நீரின் அளவும் அதன் வகைகளும்

    ஒரு கிலோ ஆப்பிள் – அ) 1780 லிட்டர்
    ஒரு கிலோ சக்கரை -ஆ) 822 லிட்டர்
    ஒரு கிலோ அரிசி – இ) 18,900
    ஒரு கிலோ காப்பிக் கொட்டை -ஈ) 2500

    அ) ஆஅஈஇ ஆ) அஈஇஆ இ) ஆஅஈஅ ஈ) ஆஅஈஇ

    விடை: அ) ஆஅஈஇ

    69. சேக்கிழாரை ‘பக்திச் சுவை நனி சொட்ட சொட்ட பாடிய கவிவலவ’ என்று பாடியவர் யார்?

    அ) நாகூர் ருமி ஆ) மீனாட்சி சுந்தரம் பிள்ளை இ) மயில்சாமி அணணாதுரை ஈ) அழகிரிசாமி

    விடை: ஆ) மீனாட்சி சுந்தரம் பிள்ளை

    70. கூவல் என்பது என்ன?

    அ) பலவகைப் பணிகளுக்கும் பயன்படும் நீர்நிiல்
    ஆ) மக்கள் பருகும் நீர்நிலை
    இ) கடலோரம் தோண்டப்பட்ட நீர் நிலை
    ஈ) உவர்மண் நிலத்தில் தோண்டப்பட்ட நீர்நிலை

    விடை: ஈ) உவர்மண் நிலத்தில் தோண்டப்பட்ட நீர்நிலை

    71. தமிழர் மரபில் நீரும் நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப்பட்டுள்ளது என்று கூறியவர்

    அ) தொ.பரமசிவன் ஆ) மீனாட்சி சுந்தரம் பிள்ளை இ) மயில்சாமி அணணாதுரை ஈ) அழகிரிசாமி

    விடை: அ) தொ.பரமசிவன்

    72. “குள்ளக் குளிர குடைந்து நீராடியவர் என்று பாடியவர்?

    அ)அபி ஆ)கோமல் சாமிநான் இ)வேணுகோபால் ஈ)ஆண்டாள்

    விடை: ஈ)ஆண்டாள்

    73. தெய்வச்சிலைகளை குளிர வைப்பதை எவ்வாறு அழைப்பர்?

    அ) திருமுழுக்கு ஆ) குளியல் இ) திருமஞ்சனம் ஈ) நீராட்டு

    விடை: இ) திருமஞ்சனம்

    74. செய்பரை முதன்மைப்படுத்தும் வினை………… செயப்படுபொருளை முதன்மைப்படுத்தும் வினை……….

    அ)செய்வினை, செயப்பாட்டுவினை ஆ) செயப்பாட்டுவினை செய்வினை, இ) தன்வினை பிறவினை ஈ) பிறவினை தனிவினை

    விடை: அ)செய்வினை, செயப்பாட்டுவினை

    75. பொருந்துக: எண்களும் அவற்றின் தமிழப்பெயர்களும்

    நாலுமா – அ) 3/20
    மூன்றுமா -ஆ) 1/5
    இருமா -இ) 1/20
    ஒருமா – ஈ) 1/10

    அ) ஆஈஅஇ ஆ) அஈஇஆ இ) ஆஅஈஇ ஈ) இஆஅஈ

    விடை: இ) ஆஅஈஇ

    76. கிரேக்க மொழியில் இடம்பெற்றுள்ள தமிழ்ச் சொற்கள்

    அ) நீர், எறிதிரை ஆ) கலன், தோணி இ) நாவாய் ஈ) இவை அனைத்தும்

    விடை: ஈ) இவை அனைத்தும்

    77. தமிழ்விடு தூது நூலை முதன்முதலில் புதுப்பித்தவர்

    அ) உ.வே.சா ஆ)ராசமாணிக்கம் இ)துரை மாணிக்கம் ஈ)பெருஞசித்திரனார்

    விடை: அ) உ.வே.சா

    78. தமிழ்விடு தூது நூலில் தலைவி தமிழை யாரிடம் தூது அனுப்புகிறாள்?

    அ) முருகனிடம் ஆ) திருமாலிடம் இ) மதுரை சொக்கநாதரிடம் ஈ) மதுரை பாண்டிய மன்னனிடம்

    விடை: இ) மதுரை சொக்கநாதரிடம்

    79. ‘காலமும்’ இலக்கண குறிப்பு தருக

    அ) உவமைத்தொகை ஆ) உம்மைத்தொகை இ) முற்றும்மை ஈ) எண்ணும்மை

    விடை: இ) முற்றும்மை

    80. ஏந்த நாடுகளின் பணத்தாள்களில் தமிழ்மொழி அச்சிடப்பட்டுள்ளது?

    அ) மொரிசியஸ் இலங்கை ஆ) மலேசியா இந்தோனேசியா இ) ஜப்பான் கனடா ஈ) சீனா,பாகிஸ்த்தான்

    விடை: அ) மொரிசியஸ் இலங்கை

    81. சொல்லாய்வு கட்டுரைகள் என்னும் நூலை எழுதியவர் யார்?

    அ) நாகூர் ருமி ஆ) மீனாட்சி சுந்தரம் பிள்ளை இ) பாவாணர் ஈ) அழகிரிசாமி

    விடை: இ) பாவாணர்

    82. நாட்டுப்பற்று என்னும் கட்டுரைத் தொகுப்பை எழுதியவர் யார்?

    அ) தொ.பரமசிவன் ஆ) மீனாட்சி சுந்தரம் பிள்ளை இ) மு.வ.வரதராசனார் ஈ) அழகிரிசாமி

    விடை: இ) மு.வ.வரதராசனார்

    83. வேர்க்கடலை, மாங்கொட்டை, மிளகாய் விதை முதலியவற்றை குறிக்கும் பயிர்வகை

    அ) இலைவகை ஆ) கொழுந்து வகை இ) குலைவகை ஈ) மணிவகை

    விடை: ஈ) மணிவகை

    84. பொருந்துக தமிழ்ச்சொற்களும் அவற்றின் ஆங்கிலச் சொற்களும்

    உயிரெழுத்து – அ) consonant
    மெய்யெழுத்து -ஆ) vowel
    ஒப்பெழுத்து -இ) monolingual
    ஒருமொழி – ஈ) Homograph

    அ) ஆஈஅஇ ஆ) அஈஇஆ இ) ஆஅஈஇ ஈ) இஆஅஈ

    விடை: இ) ஆஅஈஇ

    85. “நந்தமிழும் தண்பொருநை நன்னதியும்சேர் பொருப்பில் சேந்தமிழின் பின்னுதித்த தென்றலே”- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது

    அ) தமிழ்விடு தூது ஆ) பத்மகிரி நாதர் தென்றல்விடு தூது இ) கிளிவிடு தூது ஈ) நெஞ்சுவிடு தூது

    விடை: ஆ) பத்மகிரி நாதர் தென்றல்விடு தூது

    86. பருவக்காற்றிள் பயனை உலகிற்கு உணர்த்திய கிரேக்க அறிஞர்

    அ) அரிஸ்டாட்டில் ஆ) சாக்ரடீஸ் இ) பிளேட்டோ ஈ) ஹிப்பாலஸ்

    விடை: ஈ) ஹிப்பாலஸ்

    87. புவியை ஒரு போர்வை போல சுற்றியும் சூரியனின் வெப்பத்தைக் குறைத்துக் கொடுக்கும் வாயு

    அ) கார்பன் மோனாக்சைடு ஆ) கார்பன் டை ஆக்சைடு இ) ஒசோன் ஈ) ஹைட்ரோ கார்பன்

    விடை: இ) ஒசோன்

    88. உலக காற்றுதினம் எது?

    அ) ஜனவரி 10 ஆ) ஏப்ரல் 25 இ) ஜூன் 15 ஈ) ஆகஸ்ட் 20

    விடை: இ) ஜூன் 15

    89. பொருந்துக செய்யுள் சொற்களம் அவற்றின் இலக்கணக்குறிப்புகளும்

    மூதூரா – அ) வினைத்தொகை
    உறுதுயர் -ஆ) பண்புத்தொகை
    கைதொழுது -இ) உரிச்சொல்தொடர்
    தடக்கை ஈ) 3 ஆம் வேற்றுமைத்தொகை

    அ) ஆஈஅஇ ஆ) அஈஇஆ இ) ஆஅஈஇ ஈ) இஆஅஈ

    விடை: இ) ஆஅஈஇ

    90. “பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி” என்று கொல்லிமலையின் சிறப்பைக் கூறும் நூல்

    அ) கலித்தொகை ஆ) சிலம்பு இ) புறப்பொருள் வெண்பா மாலை ஈ) அகநானூறு

    விடை: ஈ) அகநானூறு

    91. விதைத்துவிட்டு வந்த நெல்லை அரித்து வந்த பின் சமைத்து விருந்துபடைத்தவர் யார்?

    அ)பூத்தாழ்வார் ஆ) பொய்கை ஆழ்வார் இ) இளையான்குடி மாறநாயனார் ஈ) சிறுதொண்டர்

    விடை: இ) இளையான்குடி மாறநாயனார்

    92. மருந்தே ஆயினும் விருந்தோடு உண் என்று கூறியவர் யார்?

    அ) ஔவையார் ஆ) மீனாட்சி சுந்தரம் பிள்ளை இ) மு.வ.வரதராசனார் ஈ)அழகிரிசாமி

    விடை: அ) ஔவையார்

    93. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடரில் பொருளை வேறுபடுத்த காரணமாக அமைவது

    அ) வினைத்தொகை ஆ) பண்புத்தொகை இ) வேற்றுமைத்தொகை ஈ)அன்மொழித்தொகை

    விடை: இ) வேற்றுமைத்தொகை

    94. முறையான தொடர் எது?

    அ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடம் உண்டு
    ஆ) வாழை இலைக்கு தமிழர் பண்பாட்டில் தனித்த இடம் உண்டு
    இ) தனித்த இடம் வாழைஇலைக்கு தமிழர் பண் பாட்டில் உண்டு
    ஈ) உண்டு தமிழர் பண்பாட்டில் தனித்த இடம் வாழை இலைக்கு

    விடை: அ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடம் உண்டு

    95. பெருமாள் திருமொழி நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் எத்தனையாவது திருமொழியாக உள்ளது

    அ) 4 ஆ) 5 இ) 8 ஈ) 6

    விடை: ஆ) 5

    96. பொருந்துக செய்யுள் சொற்களம் அவற்றின் இலக்கணக்குறிப்புகளும்

    ஊழ்ஊழ் – அ) வினைத்தொகை
    வளர்வானம் -ஆ) அடுக்குத்தொடர்
    செந்தீ -இ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
    வாரா ஈ) பண்புத்தொகை

    அ) ஆஈஅஇ ஆ) அஈஇஆ இ) ஆஅஈஇ ஈ) இஆஅஈ

    விடை: இ) ஆஅஈஇ

    97. குலசேகரர் வித்துவக்கோட்டம்மா என்று ஆண்தெய்வத்தை விளித்துப் பாடுகிறார்.

    பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார். – இத்தொடர்களில் வரும் வழுவமைதி முறையே

    அ) திணை, பால் ஆ)இடம். திணை இ)பால், திணை ஈ) திணை இடம்

    விடை: இ)பால், திணை

    98. “டெபோரா பர்னாந்து’ எந்த நாட்டை சேர்ந்த கவிஞர்?

    அ) இந்தியா ஆ) சீனா இ) இலங்கை ஈ) மலேசியா

    விடை: இ) இலங்கை

    99. “வால்காவிலிருந்து கங்கைவரை என்ற நூலை சாங்கிருதயன் எந்த சிறையிலிருக்கும் போது எழுதினார்?

    அ) திகார் சிறை ஆ)ஹிஜிராபாக் சிறை இ) புழல் சிறை ஈ) தாமோதர் சிறை

    விடை: ஆ)ஹிஜிராபாக் சிறை

    100. பொருந்துக சொற்களும் அவற்றின் சரியான மொழிபெயர்ப்பும்

    Transcribe – அ) மாற்றம்
    Transfer -ஆ) படியெடுத்தல்
    Transform -இ) செயல்படுத்து
    Transact – ஈ) உறுமாற்றம்

    அ) ஆஈஅஇ ஆ) அஈஇஆ இ) இஆஅஈ ஈ) ஆஅஈஇ

    விடை: ஈ) ஆஅஈஇ

    PRINTOUT 50 PAISE LOW COST
    PRINTOUT 50 PAISE LOW COST

    இந்த 100 தமிழ் முக்கிய கேள்விகள் TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான சிறந்த பயிற்சியாக இருக்கும். இந்த Part 7 கேள்விகளுடன் உங்கள் தமிழ் தேர்வு தயாரிப்பை மேம்படுத்துங்கள்!


    🌐 முக்கிய வலைதளம் மற்றும் சமூக ஊடகக் குழுக்கள்:


    📂 பி.டி.எப் தொகுப்புகள்:

    🚀 6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 7 க்விஸ் பதிவிறக்கம் செய்து, உங்கள் தேர்வு தயாரிப்பை மேம்படுத்துங்கள்!

    TAMIL MIXER EDUCATION GOOGLE SEARCH
    TAMIL MIXER EDUCATION GOOGLE SEARCH
    BHARANI DARAN
    BHARANI DARANhttp://www.tamilmixereducation.com
    👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -