
6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 6
TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான 100 தமிழ் முக்கிய கேள்விகள் இங்கே! இந்த தொகுப்பில் 6 முதல் 10 வரை உள்ள 100 முக்கிய தமிழ் கேள்விகள் உள்ளன, இது TNPSC தேர்வுகளில் உங்கள் தேர்வு தயாரிப்பை மேலும் சிறப்பாக செய்ய உதவும்.
இந்த Part 6 இல் உள்ள கேள்விகள் தமிழ் இலக்கணம் மற்றும் பொது அறிவு பற்றிய முக்கியமான பகுதியைக் கவர்ந்துள்ளன. இவை TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கு சிறந்த பயிற்சியாக இருக்கும்.
6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 1
6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 2
6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 3
6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 4
6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 5
விடைகளில் ஏதேனும் தவறுகள் இருந்தால் கீழ கமெண்டில் தெரிவிக்கவும்
1. “தமிழுக்கு அமுதென்று பேர்- அந்தத் தமிழ இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”- என்ற பாடலுக்கு உரியவர் யார்?
அ) பாரதியார் ஆ)பாரதிதாசன் இ)கவிமணி தேசியவிநாயனகார் ஈ)பெருஞசித்திரனார்
விடை: ஆ)பாரதிதாசன்
2. செம்பயிர் பிரித்து எழுதுக
அ)செம்மை + பயிர் ஆ) செம் + பயிர் இ) செம்ம + பயிர் ஈ) செ+ ம்பயிர்
விடை: அ)செம்மை + பயிர்
3. “ஊழி பலநூறு கண்டதுவாம் அறிவு ஊற்றெனும் பலநூறு கொண்டதுவாம்” – இப்பாடல் வரிகளுடன் தொடர்புடையவர் யார்?
அ) பாரதியார் ஆ)பாரதிதாசன் இ)கவிமணி தேசியவிநாயனகார் ஈ)பெருஞசித்திரனார்
விடை: ஈ)பெருஞசித்திரனார்
4. தகவல் தொடர்பு முன்னேத்தால் …………. சுருங்கி விட்டது
அ)நாடு ஆ)மேதினி இ)நகரம் ஈ)ஊர்
விடை: ஆ)மேதினி
5. “யாமாறிந்த மொழிகிளலே இனிதாவதெங்கும் காணோம்” என்று பாடியவர் யார்?
அ) பாரதியார் ஆ)பாரதிதாசன் இ)கவிமணி தேசியவிநாயனகார் ஈ)பெருஞசித்திரனார்
விடை: அ) பாரதியார்
6. ‘தமிழ்நாடு’ என்னும் சொல்லை முதன்முதலில் பயன்படுத்திய இலக்கிய நூல் எது?
அ)கம்பராமாயணம், யுத்தகாண்டம் ஆ)இராவணகாவியம், பழிபுரிகாண்டம் இ)சிலப்பதிகாரம் ,வஞ்சிக்காண்டம் ஈ)திருவிளையாடற்புராணம், மதுரைக்காண்டம்.
விடை: இ)சிலப்பதிகாரம் ,வஞ்சிக்காண்டம்
7. 10 இவ்வெண்ணின் தமிழெண் யாது?
அ)அ ஆ)ங இ)உ ஈ)க0
விடை: ஈ)க0
8. காடு + ஆறு சேர்த்து எழுதுக
அ) காடுஆறு ஆ)காட்டாறு இ)காற்றாறு ஈ)காடாறு
விடை: ஆ)காட்டாறு
9. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 5 ஆம் தளத்தில் உள்ள நூல்கள் எவை?
அ)தமிழ் பொறியியல் ஆ)பொருளியல் சட்டம் வணிகம் இ)கணிதம்,அறிவியல் மருத்துவம் ஈ)தாவரவியல் விலங்கியல்
விடை: இ)கணிதம்,அறிவியல் மருத்துவம்
10. இந்திய நூலகவியலின் தந்தை யார்?
அ)பொன்னுசாமி ஆ)முத்துக்குமார் இ)எஸ்.ஆர்.ரங்கநாதன் ஈ)கோபால் சாமி
விடை: இ)எஸ்.ஆர்.ரங்கநாதன்
11. நானிலம் படைத்தவன் என்னும் முடியரசனின் பாடல் இடம்பெற்றுள்ள நூலின் பெயர் என்ன?
அ)மகரசங்ராந்தி ஆ)உத்தராயன் இ)மகல்வாரி ஈ)புதியதொரு விதி செய்வோம்
விடை: ஈ)புதியதொரு விதி செய்வோம்
12. “பாலொடு வந்த கூழொடு பெயரும்” இவ்வரிகள் இடம் பெற்றுள்ள நூலின் பெயர் எனன?
அ) குறுந்தொகை ஆ) கலித்தொகை இ)பரிபாடல் ஈ)நற்றிணை
விடை: அ) குறுந்தொகை
13. பண்டம் + மாற்று – சேர்த்து எழுதுக
அ)பண்டம்மாற்று ஆ)பண்மாற்று இ)பண்டுமாற்று ஈ)பண்டமாற்று
விடை: ஈ)பண்டமாற்று
14. பொருந்துக
கரன்சி நோட் – அ)உரிமை வரைவோலை
டிமாண்ட் டிராஃப்ட் – ஆ)பணத்தாள்
டிஜிட்டல் -இ) இணையவழி வணிகம்
ஈ காமர்ஸ் -ஈ) நவினம்
அ) ஆஅஈஇ ஆ) ) அஈஇஆ இ) ) ஆஈஇஆ ஈ)) அஆஈஇ
விடை: அ) ஆஅஈஇ
15. பெருமை + வானம் – சேர்த்து எழுதுக
அ)பெரும்வ்வானம் ஆ)பெரியவானம் இ)பெரும்வானம் ஈ)பெருவானம்
விடை: ஈ)பெருவானம்
16. பொருத்த மற்ற சொல்லைக் கண்டறிக
அ)மா ஆ) ஐ இ)உம் ஈ)மற்று
விடை: அ)மா
17. சுதேசி நாவாய் சங்கம் பதிவு செய்யப்பட்ட ஆண்டு
அ)1980 ஆ)1945 இ)1920 ஈ)1906
விடை: ஈ)1906
18. மணிமேகலை கையில் இருந்த அமுதசுரபியில் உணவிட்ட பெண் யார்?
அ)ஆதிரை ஆ)சித்திரை இ)காய சண்டிகை ஈ)தீவதிலைகை
விடை: அ)ஆதிரை
19. தமக்கென முயலா நோன்றாள்- பிறர்ககென முயலுநர் உண்மையானே – இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?
அ) அகநானூறு ஆ)புறநானூறு இ)கலித்தொகை ஈ)குறுந்தொகை
விடை: ஆ)புறநானூறு
20. பொருந்துக
வள்ளலார் – அ)நோயாளிகளிடம் அன்பு காட்டியவர்
அன்னை தெரேசா -ஆ)பசிப்பிண போக்கியவர்
கைலாஷ் சத்யார்த்தி – இ)பெண்ணுரிமைக்காக போராடியவர்
முத்துலெட்சமி -ஈ) குழந்தைகளின் உரிமைக்காக பாடுபட்டவர்
அ) அஆஈஇ ஆ) அஈஇஆ இ) ஆஈஇஆ ஈ) ஆஅஈஇ
விடை: ஈ) ஆஅஈஇ
21. மனம்போல வாழ்வு என்ற நூலை ஆங்கிலத்தில் எழுதியவர் யார்?
அ)கவிப்பேரரசு வைரமுத்து ஆ)கவியரசு கண்ணதாசன் இ)ஆலன் ஈ)பாரதிதாசன்
விடை: இ)ஆலன்
22. முத்துராமலிங்க தேவர் நடத்திய வார இதழின் பெயர் என்ன?
அ)கலாம்ஜி ஆ)நேருஜி இ) காந்திஜி ஈ)நேதாஜி
விடை: ஈ)நேதாஜி
23. தேசியம் காத் செம்மல் என்று முத்துராமலிங்க தேவரைப் பாராட்டியவர் யார்?
அ)காந்தி ஆ)அண்ணா இ)திரு.வி.க ஈ)பெரியார்
விடை: இ)திரு.வி.க
24. ஊர்வலத்தின் முன்னால் ………….அசைந்துவரும்
அ)தோரணம் ஆ)மான்கள் இ)வாரணம் ஈ)காளைகள்
விடை: இ)வாரணம்
25. வாசல் + அலங்காரம் – சேர்த்து எழுதுக
அ)வாசல்அலங்காரம் ஆ)வாசலங்காரம் இ)வாசலலங்காரம் ஈ)வாசலுங்காரம்
விடை: இ)வாசலலங்காரம்
26. கல் + அளை – சேர்த்து எழுதுக
அ)கல் +அளை ஆ)கல்லளை இ) கள்ளலை ஈ)கள்ளிலை
விடை: ஆ)கல்லளை
27. வாய்மை எனப்படுவது யாதெனின்
அ)கண்டிப்பாகப் பேசதல் ஆ)கனிவான சொற்களைப் பேசுதல் இ)அன்பான சொற்களைப் பேசுதல் ஈ)தீங்கு தராத சொற்களைப் பேசுதல்
விடை: ஈ)தீங்கு தராத சொற்களைப் பேசுதல்
28. விகுதிபெற்ற தொழிற்பெயர் எது?
அ)உண் ஆ) பாடு இ)எழுது ஈ)படித்தல்
விடை: ஈ)படித்தல்
29. முதனிலைத் திரிந்த தொழிற்பெயர் எது?
அ)நடு ஆ)ஊறு இ)விழு ஈ)எழுது
விடை: ஆ)ஊறு
30. பொருந்துக
அறத்துப்பால் – அ)வெண்ணிற பளிங்கு கல்
பொருள்பால் -ஆ)கருநிற பளிங்கு கல்
இன்பத்துப்பால் – இ) கருங்கல
யானைச்சிலைகள்-ஈ) செந்நிறம பளிங்கு கல்
அ) ஆஅஈஇ ஆ) ) அஈஇஆ இ) ) ஆஈஇஆ ஈ)) ஆஅஈஇ
விடை: அ) ஆஅஈஇ
31. உலகத் தமிழச்சங்க கட்டிடம் அமைந்துள்ள இடம்
அ)குமரி விவேகானநதர் பாறை ஆ)சென்னை வள்ளுவர் கோட்டம் இ)கோவை மேட்டுப்பாளையம் ஈ)மதுரை தல்லாகுளம்
விடை: ஈ)மதுரை தல்லாகுளம்
32. குகை ஓவியங்களில் வண்ணம் தீட்ட பயன்பட்ட பொருள்களுள் ஒன்று
அ) மண்துகள் ஆ)நீர்வண்ணம் இ)பெயிண்ட் ஈ)தாவர இலைகள்
விடை: அ) மண்துகள்
33. ஏறப் பரியாகுமே – இத்தொடரில் பரி என்பது
அ)குதிரை ஆ)யானை இ)காட்டெருமை ஈ)மான்கள்
விடை: அ)குதிரை
34. மிளகாய் வற்றலின் ………….. தும்மலை வரவழைக்கும்
அ)மணம் ஆ)நெடி இ)நிறம் ஈ)எதுவுமில்லை
விடை: ஆ)நெடி
35. பெயர்ப்பகுபதம் எத்தனை வகைப்படும்?
அ)5 ஆ)8 இ)6 ஈ)4
விடை: இ)6
36. எழுதினான் என்பது எந்தவகைப் பகுபதம்
அ)உரிப்பகுபதம் ஆ)இடைப்பகுபதம் இ)பெயர்ப்பகுபதம் ஈ)வினைப்பகுபதம்
விடை: ஈ)வினைப்பகுபதம்
37. திருநெல்வேலி பகுதியை வளங்கொழிக்க செய்யும் ஆறு
அ)தாமிரபரணி ஆ)காவிரி இ)வைகை ஈ)பெரியாறு
விடை: அ)தாமிரபரணி
38. இளங்கோவடிகள் எந்த மலைக்கு சிறப்பிடம் கொடுத்து பாடுகிறார்?
அ)இமயமலை ஆ)பொதிகைமலை இ)பழனிமலை ஈ)வேங்கடமலை
விடை: ஆ)பொதிகைம
39. தேசிய விநாயகனார் தமிழை அழுத்தமாக ஆர்வத்தோடு கற்ற இடம்
அ)சென்iன் ஆ)மதுரை இ)திருநெல்வேலி ஈ)கன்னியாகுமரி
விடை: இ)திருநெல்வேலி
40. வேங்கடேசுவர எட்டப்ப ராஜாவைப் பற்றி பல பாடல்கள் பாடியவர் யார்?
அ) பெருங்கௌசிகனார் ஆ)வெண்ணிக்குயத்தியார் இ)ஔவையார் ஈ)கடிகைமுத்துப் புலவர்
விடை: ஈ)கடிகைமுத்துப் புலவர்
41. பொருந்துக
மடைதிறந்த வெள்ளம் – அ)வெளிப்படைத்தன்மை
உள்ளங்கை நெல்லிக்கனி – ஆ)தடையின்றி மிகுதியாக
விழலுக்கு இறைத்த நீர் -இ)எளிதில் மனதில் பதிதல்
பசுமரத்தாணி போல -ஈ)பயனற்ற செயல்
அ) ஆஅஈஇ ஆ) ) அஈஇஆ இ) ) ஆஈஇஆ ஈ)) ஆஅஈஇ
விடை: அ) ஆஅஈஇ
42. பெயரெச்சத்தை கண்டறி
அ)பார்த்த ஆ)படித்து இ)எழுதி ஈ)வந்து
விடை: அ)பார்த்த
43. குறிப்பு பெயரெச்சம் ……………… வெளிப்படையாக காட்டாது
அ)காலத்தை ஆ) பண்பை இ)வடிவை ஈ)அளவை
விடை: அ)காலத்தை
44. பொருந்துக
நடந்து – அ)பெயரெயச்சம்
பேசிய -ஆ) வினையெச்சம்
எடுத்தனள் உண்டாள் – இ) குறிப்பு பெயரெச்சம்
பெரிய -ஈ) முற்றெச்சம்
அ) அஈஇஆ ஆ) அ)ஈஇஆ இ) ) ஆஈஇஆ ஈ)) ஆஅஈஇ
விடை: ஈ)) ஆஅஈஇ
45. மின்னணு வாக்குஎந்திரம் உருவாக்கம் பணிpயில் முக்கிய பங்காற்றியவர் யார்?
அ) ஜூல்ஸ் வெர்ன் ஆ)சுஜாதா இ)கார்சல்ன் செஸ்டர்ன் ஈ)டிம்பெர்னர் லீ
விடை: ஆ)சுஜாதா
46. தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது ………. நீட்சியாக உள்ளது
அ)உணவின் ஆ)மருத்துவத்தின் இ)உடற்பயிற்சியின் ஈ)இயற்கையின்
விடை: அ)உணவின்
47. திரு.வி.க என்பதன் விரிவாக்கம் என்பது என்ன?
அ)திருப்பூர் வீரன் கண்ணன் ஆ)திருச்சி விருதாளர் கபிலர் இ)திருவாருர் விருத்தாச்சலம் கல்யாண சுந்தரனார் ஈ)திருப்பத்துhர் விளைந்த கர்ணன்
விடை: இ)திருவாருர் விருத்தாச்சலம் கல்யாண சுந்தரனார்
48. இளமை விருந்து என்னும் நூலை எழுதியவர் யார்?
அ) பெருங்கௌசிகனார் ஆ)திரு.வி.க இ)ஔiவாயர் ஈ)கடிகைமுத்துப் புலவர்
விடை: ஆ)திரு.வி.க
49. பி.ச குப்புசாமி எழுதிய நூல் எது?
அ)இந்த பூ விற்பனைக்கல்ல ஆ)வைகறை மேகங்கள் இ)ஓர் ஆரம்ப பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் ஈ)தொடுவானம்
விடை: இ)ஓர் ஆரம்ப பள்ளி ஆசிரியனின் குறிப்புகள்
50. பெயர்ச்சொல்லின் பொருளை வேற்றுமைப்படுத்துவது
அ)வினைத்தொகை ஆ)உம்மைத்தொகை இ)வேற்றுமைத் தொகை ஈ)பண்புத்தொகை
விடை: இ)வேற்றுமைத் தொகை
51. உடனிகழ்ச்சி பொருளில் வரும் வேற்றுமை
அ)நான்காம் வேற்றுமை ஆ)ஆறாம் வேற்றுமை இ)இரண்டாம் வேறறுமை ஈ)மூன்றாம் வேற்றுமை
விடை: ஈ)மூன்றாம் வேற்றுமை
52. மலர் பானையை வனைந்தாள் – இத்தொடர்……………. பொருளைக் குறிக்கும்
அ)ஒப்பல் ஆ)நீக்கல் இ)அழித்தல் ஈ)ஆக்கல்
விடை: ஈ)ஆக்கல்
53. அறத்தான் வருவதே இன்பம் – இத்தொடரில் இடம்பெற்றுள்ள வேற்றுமை
அ) நான்காம் வேற்றுமை ஆ)ஆறாம் வேற்றுமை இ)இரண்டாம் வேறறுமை ஈ)மூன்றாம் வேற்றுமை
விடை: ஈ)மூன்றாம் வேற்றுமை
54. பிறிதுமொழிதல் அணியில்………………..மட்டும் இடம்பெறும்
அ)உவமேயம் ஆ)உவமை இ)உருவகம் ஈ) உவமஉருபு
விடை: ஆ)உவமை
55. இரட்டுற மொழிதல் அணியின் வேறுபெயர்
அ)தீவக அணி ஆ)உருவக அணிஇ)சிலேடை அணி ஈ)உவமை அணி
விடை: இ)சிலேடை அணி
56. பால்மனம் என்னும் சிறுகதை எந்த நுலில் இடம்பெற்றுள்ளது?
அ)இது எங்கள் கிழக்கு ஆ)ஆரம்ப பள்ளி ஆசிpரியனின் குறிப்புகள் இ)கோடையும் மழையும் ஈ)மீதமிருக்கும் சொற்கள்
விடை: ஈ)மீதமிருக்கும் சொற்கள்
57. அம்பேத்காரின் சமூகப்பணியைப் பாராட்டி இந்திய அரசு ………… விருது வழங்கி உள்ளது
அ)பாரத ரத்னா ஆ)சக்தி புரஸ்கார் இ)பரம்வீர் சக்ரா ஈ)அர்ஜீனா
விடை: அ)பாரத ரத்னா
58. முதல் வட்டமேசை மாநாடு நடைபெற்ற ஆண்டு
அ) 1800 ஆ)1930 இ)1720 ஈ)1942
விடை: ஆ)1930
59. புத்தரைப் பற்றி அம்பேத்கார் எழுதியுள்ள நூல் எது
அ) சித்தார்த்தர் வரலாறு ஆ)ஆதிநாதன் கதை இ)புத்தரும் அவரின் தம்மமும் ஈ)சாந்தசொருபி
விடை: இ)புத்தரும் அவரின் தம்மமும்
60. ஏந்த ஆய்வுக்காக கொலம்பிய பல்கலைக்கழகம் அம்பேத்காருக்கு முனைவர் பட்டம் வழங்கியது
அ)தம்மா ஆ)ஆதிவேதம் இ)இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும் ஈ)இந்தியாவின் தேசியப்பங்கு வீதம்
விடை: ஈ)இந்தியாவின் தேசியப்பங்கு வீதம்
61. தமிழ்விடு தூது…………..என்னும் இலக்கியவகையைச் சேர்ந்தது
அ)தூது ஆ)பள்ளு இ)உலா ஈ)பரணி
விடை: அ)தூது
62. அழியா, ஒழியா, இலக்கண குறிப்பு தருக
அ)ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் ஆ)பெயரெச்சம் இ)தொழிற்பெயர் ஈ)விணையாலணையும் பெயர்
விடை: அ)ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
63. நீர்நிலைகளோடு தொடர்பில்லாதது
அ)கிணறு ஆ)ஆறு இ)அகழி ஈ)புலரி
விடை: ஈ)புலரி
64. மல்லல் மூதூர் வயவேந்தே-இதில் மல்லல் என்பதன் பொருள் என்ன?
அ)சமிபத்திய ஆ)பழமை இ)வறுமை ஈ)வளம்
விடை: ஈ)வளம்
65. மிசை என்பதன் எதிர்ச்சொல்
அ) மேல் ஆ)கீழே இ)உயர்வு ஈ)தாழ்வு
விடை: ஆ)கீழே
66. “தண்ணீர் தண்ணீர்” என்னும் நூலை எழுதியவர் யார்?
அ)அபி ஆ)கோமல் சுவாமிநாதன் இ)வேணுகோபால் ஈ)ஜி.யு.போப்
விடை: ஆ)கோமல் சுவாமிநாதன்
67. வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாளமாக நீட்சி அடைந்தது எது?
அ)ஏறுதழுவழுவல் ஆ)கீழடி இ)ஆதிச்சநல்லூர் ஈ)குமரிகண்டம்
விடை: அ)ஏறுதழுவழுவல்
68. மேலைநாடுகளில் ஆண்டு முழுவதும் நடத்தப்படும் காளைச்சண்டை மனிதனுள் இருக்கம் ………., …………..ஈ வெளிப்படுதுதுகிறது
அ)வன்மம், போர்வெறி ஆ)வீரம்,பொழுது போக்கு இ)விளையாட்டு, திறமை ஈ)பாரம்பரியம்,கலாச்சாரம்
விடை: அ)வன்மம், போர்வெறி
69. முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்ட இடம்
அ)மதுரை ஆ)திருநெல்வேலி இ) தூத்துக்குடி ஈ)ஆதிச்சநல்லூர்
விடை: ஈ)ஆதிச்சநல்லூர்
70. ……………பட்டையை உரித்துக்கொண்டுதான் புதுமை பிறக்கும்
அ)அறிவயல் ஆ)பழமை இ)மூடநம்பிக்கை ஈ)பொய்நம்பிக்கை
விடை: ஆ)பழமை
71. ஐம்பெருங்குழு,எண்பேராயம், இலக்கண குறிப்புதருக
அ)வேற்றுiம்த்தொகை ஆ)வினைச்சொற்கள் இ)தொகைச்சொற்கள் ஈ)பண்புத்தொகை
விடை: இ)தொகைச்சொற்கள்
72. தமிழர் சால்பு என்ற நூலை எழுதியவர் யார்?
அ) வித்யானந்தன் ஆ)ராசமாணிக்கம் இ)துரை மாணிக்கம் ஈ)பெருஞசித்திரனார்
விடை: அ) வித்யானந்தன்
73. திருக்குறள் …………. தோடங்கி ……….. முடிகிறது
அ)அ,ன ஆ)ன,க இ)ப.ம் ஈ)ம,ப
விடை: அ)அ,ன
74. தானியங்கி பண எந்திரத்தை நிறுவியவர்
அ)கார்ல்சன் ஆ)எல்லிஸ் இ)ஜான் ஷெப்பர்டு ஈ)டிம்பெர் லீ
விடை: இ)ஜான் ஷெப்பர்டு
75. 1989இல் இணையவழி வணிகம் தொடங்கப்பட்ட நாடு
அ) இந்தியா ஆ)சீனா இ) அமெரிக்கா ஈ)ஜப்பான்
விடை: இ) அமெரிக்கா
76. SITARA என்ற வார்த்தையின் விரிவாக்கம்
அ )soil for integrated trajectory analysis All agriculture
ஆ) super sonic for integrated trajectory analysis real Air Force
இ) super power for integrated trajectory analysis real time Arrange
ஈ)software for integrated trajectory analysis real time application
விடை: ஈ)software for integrated trajectory analysis real time application
77. அப்தல் கலாம் அவர்களால் மென்பொறியாளர் என்றுஅழைக்கப்பட்டவர் யார்?
அ)அருண்சுப்பையா ஆ)வளர்மதி இ)மயில்சாமி அண்ணாதுiர் ஈ)சிவன்
விடை: ஈ)சிவன்
78. 2015ல் தமிழ்நாடு அரசின் அப்துல்கலாம் விருதைப் பெற்ற முதல் அறிவயல் அறிஞர் யார்
அ)அருண்சுப்பையா ஆ)வளர்மதி இ)மயில்சாமி அண்ணாதுரை ஈ)சிவன்
விடை: ஆ)வளர்மதி
79. பூவாது, மலர்க்கை ,இலக்கண குறிப்பு தருக
அ) உருவகம ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், ஆ)ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், உருவகம் இ)உருவகம், உவமை ஈ) உவமை உருவகம்
விடை: ஆ)ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், உருவகம்
80. கரும்பலகை யுத்தம் என்ற நூலை எழுதியவர் யார்?
அ)குப்புசாமி ஆ)கைலாஷ் சத்யார்த்தி இ)மலாலா ஈ)அன்னை தெசோ
விடை: இ)மலாலா
81. யானை சவாரி என்னும் நூலை எழுதியவர் யார்?
அ)முத்துலட்சுமி ஆ)அஞ்சலையம்மாள் இ)ஜடாஸ் ஸ்கட்டர் ஈ)பாவண்ணன்
விடை: ஈ)பாவண்ணன்
82. போருழந்தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி வாரல் என்பனபோல் மறித்து கைகாட்ட- இத்தொடரில் எந்த அணி பயின்று வருகிறது?
அ) சிலேடை அணி ஆ)உவமை அணி இ)உருவக அணி ஈ)தற்குறிப்பேற்ற அணி
விடை: ஈ)தற்குறிப்பேற்ற அணி
83. வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன?
அ)கான்சுடான்சு ஜோசப் பெஸ்கி ஆ)ஆலன் இ)ஹென்றி ஈ)எதுவுமில்லை
விடை: அ)கான்சுடான்சு ஜோசப் பெஸ்கி
84. தேம்பாவணியில் வரும் காண்டம், படலம், பாடல்கள் எண்ணிக்கை முறையே
அ)3,36,3615 ஆ) 3615, 3,36, இ) 4,53,3600 ஈ)4,24,2000
விடை: அ)3,36,3615
85. மெய்முறை இலக்கண குறிப்பு தருக
அ)வேற்றுமைத் தொகை ஆ)வினைத்தொகை இ) பண்புத்தொகை ஈ)அன்மொழித்தொகை
விடை: ஆ)வினைத்தொகை
86. கப்பலுக்கு போன மச்சான் என்ற நூலை எழுதியவர் யார்?
அ)குப்புசாமி ஆ)புதுமைபித்தன் இ)நாகூர் ரூமி ஈ)கோமகள்
விடை: இ)நாகூர் ரூமி
87. ஜெயகாந்தனின் படைப்புகளுள் திரைப்படம் ஆன படைப்புகள் எது?
அ)சிலநேரங்களில் சில மனிதர்கள், ஊருக்கு நூறுபேர் ஆ)ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் இ)உன்னைப்போல ஒருவன், யாருக்காக அழுதான் ஈ)இவை அனைத்தும்
விடை: ஈ)இவை அனைத்தும்
88. எளியத் திரைப்பட பாடல்கள் வழியாக மெய்யியலை மக்களிடையே கொண்டு சேர்த்தவர் யார்?
அ)காளிதாசன் ஆ)வாணிதாசன் இ)கண்ணதாசன் ஈ)பாரதிதாசன்
விடை: இ)கண்ணதாசன்
89. சேரமான் காதலி என்னும் புதினத்துக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர் யார்?
அ)கண்ணதாசன் ஆ)புதுமைபித்தன் இ)ராஜலட்சுமி ஈ)நாகூர் ரூமி
விடை: அ)கண்ணதாசன்
90. ‘எழுத்து’ கால புதுக்கவிஞர்களுள் ஒருவர்
அ)அகிலன் ஆ)அசோகமித்ரன் இ)திலகவதி ஈ)வேணுகோபால்
விடை: ஈ)வேணுகோபால்
91. யாருடைய போதனைகள் ஜென் தத்துவம் உருவாகக் காரணமானது?
அ) லாவோட்சு ஆ)தாவோ இ)யுவான் சுவாங் ஈ)போதிதர்மர்
விடை: ஈ)போதிதர்மர்
92. இப்பிறப்பில் அறம் செய்தால் அதன் பயனை அடுத்தப் பிறப்பில் பெறலாம் என்ற எண்ணம் இருக்கக் கூடாது என்று கூறியவர் யார்?
அ) ஏணிச்சேரி முடமோசியர் ஆ) கபிலர் இ) ஔவையார் ஈ)நக்கீரர்
விடை: அ) ஏணிச்சேரி முடமோசியர்
93. அறத்தின் குறியீடுகளாகப் போற்றப்பட்டவை எவை?
அ)மென்மையும் தவமும் ஆ)பொய்யாமை கொல்லாமை இ)செங்கோலும் வெண்கொற்றக்குடையும் ஈ)கொடையும், கருணையும்
விடை: இ)செங்கோலும் வெண்கொற்றக்குடையும்
94. இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடக்காரணம்
அ) பெருமையை நிலைநாட்ட ஆ) வலிமையை நிலைநாட்ட இ) நாட்டைக் காக்க ஈ)எதிரிகளை ஒடுக்க
விடை: ஆ) வலிமையை நிலைநாட்ட
95. காந்திஜியின் சர்வோதய இயக்கத்தில் களப்பணி ஆற்றிய பெண்
அ)ஜான்சி ராணி ஆ)கிருஷ்ணம்மாள் ஜெகந்தாதன் இ)லட்சுமி பேகம் ஈ)முத்துலெட்சமி
விடை: ஆ)கிருஷ்ணம்மாள் ஜெகந்தாதன்
96. சின்னப்பிள்ளை தொடங்கிய சுயஉதவிக்குழுவின் பெயர்
அ)களஞ்சியம் ஆ)பொன்மகள் இ)நமக்கு நாமே ஈ)தேன்கூடு
விடை: அ)களஞ்சியம்
97. தூர்தர்சனின் பொதிகை விருது பெற்றவர் யார்?
அ)சின்னப்பிளளை ஆ)கிருஷ்ணம்மாள் ஜெகந்தாதன் இ)லட்சுமி பேகம் ஈ)முத்துலெட்சமி
விடை: அ)சின்னப்பிளளை
98. பெண்குழந்தைகள் கொலைக்கான காரணம் பற்றி பேசம் நாவல்
அ) கரிப்பு மணிகள் ஆ)வேருக்க நீர் இ)மண்ணகத்து பூந்துளிகள் ஈ)வேரில் பழுத்தப் பலா
விடை: இ)மண்ணகத்து பூந்துளிகள்
99. கடற்கரை மக்களிடையே மா.பொ.சி வழங்கிய துண்டறிக்கையின் பெயர்
அ)பாயக் காண்பது வெள்ளம், பணியக் காண்பது வெள்ளையர் உள்ளம் ஆ)எழுக விரைக புதுயுகம் படைக்க இ)தமிழா துள்ளி எழு ஈ)தமிழகம் காப்போம் வாரீர்
விடை: இ)தமிழா துள்ளி எழு
100. தமிழகத்தின் வடக்கெல்லைப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தவர்?
அ)மார்ஷல் நேசமணி ஆ) மங்கலமங்கிழார் இ)மா.பொ.சி ஈ)டி.கே.சிதம்பரனார்
விடை: ஆ) மங்கலமங்கிழார்
இந்த 100 தமிழ் முக்கிய கேள்விகள் TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான சிறந்த பயிற்சியாக இருக்கும். இந்த Part 6 கேள்விகளுடன் உங்கள் தமிழ் தேர்வு தயாரிப்பை மேம்படுத்துங்கள்!
🌐 முக்கிய வலைதளம் மற்றும் சமூக ஊடகக் குழுக்கள்:
- 🌍 எங்களது அதிகாரப்பூர்வ வலைதளம்: Tamil Mixer Education
- 💬 WhatsApp குழு: Tamil Mixer Education WhatsApp Group
- 📢 Telegram: Jobs and Notes
- 📷 Instagram: Tamil Mixer Education Instagram
📂 பி.டி.எப் தொகுப்புகள்:
- 📄 TNPSC Notes PDF Collection: TNPSC Notes PDF
- 📘 Test Series PDF Collection: Test Series PDFs
- 🗂️ Old Question Paper PDF Collection: Old Question Papers
- 🕉️ Hindu Aranilaiyathurai Notes PDF Collection: Hindu Aranilaiyathurai Notes
- 📚 All Exam Notes: All Exam Notes
🚀 6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 3 க்விஸ் பதிவிறக்கம் செய்து, உங்கள் தேர்வு தயாரிப்பை மேம்படுத்துங்கள்!